HALF YEARLY EXAM 9 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY (CUDDALORE, TIRUVARUR)

 

கடலூர், திருவாரூர் மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு 

வினாத்தாளைப் பதிவிறக்க

 

கடலூர், திருவாரூர் மாவட்டம் அரையாண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்

டிசம்பர் - 2023-2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. சிற்றிலக்கியம்

1

 

2.

அ. கீழே

1

 

3.

இ. வளம்

1

 

4.

ஆ. திருவாரூர் , கரிக்கையூர்

1

 

5.

ஈ. தொகைச்சொற்கள்

1

 

6.

இ. மோகன்சிங் , ஜப்பானியர்

1

 

7.

ஈ. கெடுதல்

1

 

8.

. கெடுதல் புணர்ச்சி

1

 

9.

இ. அள்ளல் - சேறு

1

 

10.

ஈ. பிசிராந்தையார்

1

 

11.

ஆ. பண்புத்தொகை , வினைத்தொகை

1

 

12.

. புறநானூறு

1

 

13.

அ. குடபுலவியனார்

1

 

14.

ஆ. எண்ணும்மை

1

 

15.

. வினையாலணையும் பெயர்

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

தென் திராவிட மொழிக்குடும்பம்

1

1

 

17.

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

18.

நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

2

 

19

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது

2

 

20.

வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

 

21

  • கேப்டன் தாசன்
  • ஜானகி
  • அப்துல் காதர்
  • இராஜாமணி
  • சிதம்பரம்
  • கேப்டன் லட்சுமி
  • லோகநாதன்
  • இராமு

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ. மொழிபெயர்த்தாள் (தன்வினை)     ஆ. பயன்படுத்துவித்தான் (பிறவினை)

2

 

23

உரிய விடையைபப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

24

நிறுத்தல் = நிறுத்து+அல்   நிறுத்து – பகுதி   , அல் – தொழிற்பெயர் விகுதி

2

 

25.

அ. ஏவுகணை ஆ. களர்நிலம்   

2

 

26.

. வயல்  . பனை – மரம் (பணை – மூங்கில்)

2

 

27.

. பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

. மதீனா சிறந்த இசைவல்லுநர் ஆக வேண்டும்

2

 

28.

வகுப்பறை சிரித்தது

வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

2

 

பகுதி – 3

பிரிவு - 1

29

   # மொட்டைக்கிளையாக நின்று பெருமூச்சுவிடுகிறது பட்டமரம்.

   * தன்னை வெட்டப்படும் ஒருநாள் வருமென்று கவலை அடைந்தது.

   *  உட்கார நிழலும், நறுமணம் கமழும் மலர்களும் கூரை போன்று விரிந்த இலைகளும் வெந்து

     கருகி நிறமாறிவிட்டதற்கு வருந்துகிறது.

   * பசுமையாக இல்லாததால் கட்டை என்னும் பெயர் பெற்று கருகி விட்டது. இழந்தது.

   * உடையாக இருந்த மரப்பட்டைகள் கிழிந்ததால் அழகை காலம் மாறும் புயலின் தாக்கத்தால் துன்பப்பட்டது.

3

 

30

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. சுதேசி நிறுவனம் 

இ. சால்வன் குப்பம்

3

 

31.

   இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

3

 

பகுதி – 3

பிரிவு - 2

32

  • வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.
  • பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்க்கின்றன.
  • மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
  • செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.
  • ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.

3

 

33.

ü  நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

ü  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.

ü  பள்ளிக்கல்வி முடித்த மாணவர்கள் கல்லூரிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றையும் இணையம் வழியாகவே செலுத்த முடியும்.

3

 

34.

அ. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

 மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை

 கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

     நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாநலமெல்லாம்.

(அல்லது)

ஆ. பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

       மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

       விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

       உரையாமை செல்லும் உணர்வு

3

 

பகுதி – 3

பிரிவு - 3

35

பண்பாகு பெயர்:  

 மஞ்சள் பூசினாள்
      மஞ்சள்என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது.

தொழிலாகு பெயர்: 

 வற்றல் தின்றான்
    வற்றல்என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது.

3

 

36.

·        வல்லெழுத்துகள் க,,,ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும், இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.

·        இவ்வாறு எந்த எந்த இடங்களில் அவ்வல்லினம் மிகும் என்பதை விதிகளின் மூலமூம் எடுத்துக்காட்டுகள் மூலமும் அறியலாம்.

             (எ.கா) அச்சட்டை, கதவைத்திற, எனக்கேட்டார், எட்டுத்தொகை மல்லிகைப்பூ

·        நாம் பேசும் போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

3

 

37

கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி
கைபிடிஇயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி
கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி ஆகும்.

3

 

பகுதி – 4

38

அ.

1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்:

     மதுரையில் கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி, தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான்.

2. தூது செல்வோரின் தகுதி :

    தூது செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல் செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக் குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ், இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை அனுப்புகிறாள், தலைவி.

5

 

38

.

ü  தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல்.

ü  அவ்விழாவின்போது, மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டுவர்.

ü  பின்னர் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

ü  இதன் தொடர்ச்சியாக வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.

5

 

39

.

இணைய வணிகம்

  இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

இணைய பயன்பாடு :

    தற்காலத்தில் பேருந்து, விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப் பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது கூட இணையம்  மூலம் நடைபெறுகின்றது.

வரி செலுத்துதல்

       அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில்

செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது.

         ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின் வழியாகச் செயல்பட்டு வருகிறது.

5

 

39

. முன்னுரை:

     இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவணகாவியம் தமிழகக் காண்டத்தில் அமைந்துள்ள ஐந்து நில அழகுக் காட்சிகளைக் காண்போம்.

அருவியின் அற்புதக்காட்சி:

   அருவிகள் ஆர்ப்பரித்து பறையாய் ஒலிக்க பசுமையான கிளிகள் நாங்கள் அறி விழிசையை பாட இனிமையாகப் பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகுக வீர்த்து ஆடும். இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கு ஆசியுடன் பார்க்கும்.

    தீயில் இட்ட சந்தனமரக்கட்டைகளின் மணமும், அகிலின் நறுமணமும், உலையில் மலை நெல்லின் சோற்றின் மணமும் ஆற்றிடைப் பள்ளங்களில் உள்ள காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் ணம் கமழ்ந்து குன்று முழுவதும் நிறைந்திருந்தது.

முல்லையின் எல்லையில்லா அழகு:

      நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்து இனித பாட, மா, பலா, வாழைப் பழங்களோடு தேனும் தந்து இசைப்பாடி மகிழ்ந்தனர் புகழ் முல்லை நில மக்களான ஆயர் முக்குழல் இசையோடு மேயும் பசுக் கூட்டங்களை அ ஒன்றிணைத்தனர்.

    முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவால் நெல் ஆகியவற்றைக் கதிரம த்தில் குன்று போலக் குவித்து வைத்திருப்பர் இடையர்கள் அழகு மிகு கதிர்களை அடித் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் பயத்துடன் அஞ்சி ஓடும்.

பாலையின் வெம்மை காட்சி :

     கொடிய பாலைநிலத்தில் வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குப் வாய் மிகவும் உலர்ந்து குழறியது. இதனை கண்டு அதன் தாய் வருந்தியது. இளைப்பாறவும் நிழவில்லாததால் கடும்வெயிலில் தான் துன்புற்று நின்று தனது நிழலில் கு நிளைப்பாறச் செய்தது.

மருத நிலத்தின் காட்சி:

    மலையிடையே தோன்றும் அழகிய ஆறும், கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தல் பாய்ந்தோடும். அங்கு நெய்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும் பெருகி வரும் நீரினைக் கால்வாய் வழி வயலி, தேக்கி வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருத நில வயலில் காஞ்சி வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

    தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில் சிறுவர்கள் ஆடி மகிழ்ந்து நீராடினர் அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து அதன் வடிவழகு சுண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறுவர்கள் வைக்கோல் போர் குலுங்கிடும். படி ஏறி தென்னை இளநீர்க்காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்..

குறிஞ்சி தரும் குன்றா அழகு:

    தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி கடற்கரை மணவிடை உலவி காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும் பின்னர் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

முடிவுரை :

     இராவண காவியம் தரும் அழகு காட்சிகள் நம் கண்முன் இனிய காட்சிகளைத் தருகின்றன. தமிழரின் ஐந்நிலக்காட்சிகள் நம் நாட்டின் வளமான காட்சிகளை நம் கண்முன் காட்டுகின்றன.

5

 

40

) சேரநாடு :     

     சேறுபட்ட நீர்வளம் மிகுந்த செவ்வாம்பல் மலர்கள் வாயவிழ்ந்து விரிந்தன.அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்தது என எண்ணி தமது கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து, தம் குஞ்சுகளைத் தீயினின்று காப்பாற்றும் பொருட்டு அணைத்துக்கொண்டன. இப்பறவைகளின் இத்தகு ஆரவாரம் தவிர, மக்கள் துயரமிகுதியால் செய்யும் ஆரவாரத்தைச் சேரநாட்டில் காண இயலாது.

சோழநாடு:   

     சோழநாடு ஏர்க்களச்சிறப்பையும், போர்க்களச் சிறப்பையும் கொண்டிருந்தது. வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போரின் மீது ஏறி நி;ன்று கொண்டு அருகில் இருக்கும் உழவர்களைப் பார்த்துநாவலோஎன்று கூவி அழைப்பர் நாவலோஇந்நாள் வாழ்க சிறக்கஎன்று பொருள்) இவ்வாறு வயல் வளம் மிகுந்ததாகக் காணப்பட்டது சோழநாடாகும்.

பாண்டியநாடு:  

      பாண்டியனுடைய ஒளி பொருந்திய நாட்டின்கண் எங்கு நோக்கினும் முத்துக்குவியலே காணப்பட்டது. வெண்சங்குகள் மணலில் ஈனுகின்ற இளஞ்சினையும், குவிந்து கிடக்கின்ற புன்னை மரத்தின் அரும்புகளும், பாக்கு மரங்களின் பாளைகளில் இருந்து சிந்திய மணிகளும் முத்துக் குவியல்களைப் போலவே காட்சியளித்தன .

)

பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

5

 

41

 

 அ.     ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

           என்னை எழுது என்று

           சொன்னது இந்த காட்சி

           இது அர்த்தமுள்ள காட்சி

           விழிப்புணர்வுக்கான காட்சி

                                                                                                                                                          

                                                                                                                               திருத்தணி,
                                                                                                                                             

                                                                                                                          09-09-2023.

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

            இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                      

                                                                                                                                         முகிலன்.

 

முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,   

          மதுரை.

5

 

42

) அணில் பழம் தின்றது    

) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா

) நேற்று தென்றல் காற்று வீசியது 

) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்,

) தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)

5

 

 

பகுதி – 5

 

 

43 .

திரண்ட கருத்து:
     வளைந்து செல்லும் கால்வாய்கள் மூலம் ஆறே வயல்வெளியில் புகுந்தாய் மணிபோன்ற கதிர்களை விளையச் செய்தாய். அருகில் உள்ள ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய். சிவந்த கண்களையுடைய கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகின்ற நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்து, நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.

மையக்கருத்து:

   இப்பாடலின் மையக்கருத்துஆறுஆகும்

எதுகை நயம்:

      செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று: வலிடை                லிடை
             லுள்                   பெரிடை

மோனை நயம்:

       செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.

சான்று:       யலிடை – ளைந்து 

                   யலுள் – ம்பல்
                    பெயரிடை – பெருங்குளம்

இயைபு நயம்:  

      செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.

சான்று:      விளைத்தாய் – விரித்தாய்

.

8

 

முன்னுரை :
            நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

 

44.

.

இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.

      இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

         இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.

      1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

8

 

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

தணிகைப்போளூர்,

                                                                                                                                              27.09.21.

அனுப்புநர்

         . இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        10.ஆம் வகுப்புபிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

         வணக்கம். உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல்  மொழியாகவும்,   முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது  தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                                           தங்கள் உண்மையுள்ள,

                            .இளவேந்தன்,                                                                                                                             (மாணவச் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001

8

 

45 .

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

 

45. .

இயற்கையின் தாய்மடி-  உதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன். அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து, உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது. மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம். மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

8

 

விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை