HALF YEARLY EXAM 9 TH STD TAMIL ANSWER KEY (CHENNAI, CHENGALPAT)

 

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு 

வினாத்தாளைப் பதிவிறக்க

  

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம்அரையாண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்

டிசம்பர் - 2023-2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

உத்தேச விடைக்குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

1

 

2.

ஈ . புலரி

1

 

3.

அ. ஆராயாமை , ஐயப்படுதல்

1

 

4.

ஈ. அலை

1

 

5.

. தொகைச்சொற்கள்

1

 

6.

ஆ. வீசியது

1

 

7.

இ. முல்லை

1

 

8.

ஆ. ஊரகத் திறனறி தேர்வு

1

 

9.

ஈ. எதிர்மறை வினையெச்சம் , வினைத்தொகை

1

 

10.

அ. இணைந்தே இருத்தல்

1

 

11.

இ. மோகன்சிங் , ஜப்பானியர்

1

 

12.

. தானியக்குவியல்

1

 

13.

. குடபுலவியனார்

1

 

14.

இ. வினைத்தொகை

1

 

15.

அ. இராவண காவியம்

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

1

1

 

17.

இடம் :

       கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர்.

பொருள் : விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

விளக்கம் :

     மணிமேகலைக் காப்பியத்தில் முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன் அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான்.

2

 

18.

மணற்பாங்கான இடத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

 

19

தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்ச வேண்டும்.

2

 

20.

  • கேப்டன் தாசன்
  • ஜானகி
  • அப்துல் காதர்
  • இராஜாமணி
  • சிதம்பரம்
  • கேப்டன் லட்சுமி
  • லோகநாதன்
  • இராமு

2

 

21

அன்புநாண்  ஒப்புரவு  கண்ணோட்டம்  வாய்மையொடு

ஐந்துசால்பு  ஊன்றிய  தூண்.

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

வேற்றுமைத் தொடர் , விளித்தொடர்

2

 

23

கறை படிந்த துணிகளை ஆற்றங்கரையில் துவைத்தான் (மாதிரி)

2

 

24

உணர்ந்த = உணர்+த்(ந்)+த்+அ

உணர் – பகுதி , த்_சந்தி ,   த், “ந்” ஆகத்திரிந்தது விகாரம்,  த் – இறந்தகால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி

2

 

25.

. நீர் மேலாண்மை   . செவ்வியல் இலக்கியம்

2

 

26.

. நல்ல தமிழில் எழுதுவோம்   . பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்

2

 

27.

வினைத்தொகை , பண்புத்தொகை

2

 

28.

அ. திகழ்கிறது     ஆ.சென்றனர்

2

 

பகுதி – 3

பிரிவு - 1

29

ü  நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

ü  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.

ü  பள்ளிக்கல்வி முடித்த மாணவர்கள் கல்லூரிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றையும் இணையம் வழியாகவே செலுத்த முடியும்.

3

 

30

முழு உருவச் சிற்பம்:  

     உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு   

     உருவத்துடன் அமைந்து இருக்கும்.

புடைப்புச் சிற்பம்:    

       புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்

3

 

31.

அ. எந்த ஆயுதத்தையும்

ஆ. அன்பு , வீரம்

இ. இரண்டாயிரம்

3

 

பகுதி – 3

பிரிவு - 2

32

நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

3

 

33.

ஔவையார்,  நக்கண்ணையார்,  ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப்பாடினியார்,  ஆதிமந்தியார்,

வெள்ளிவீதியார்,  வெண்ணிக்குயத்தியார்,  நப்பசலையார்,  பொன்முடியார்,  காவற்பெண்டு, அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.

3

 

34.

. அறிவியல் என்னும் வாகனம் மீதில்

          ஆளும் தமிழை நிறுத்துங்கள்

    கரிகா லன்தன் பெருமை எல்லாம்

         கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்

   ஏவும் திசையில் அம்பைப் போல

          இருந்த இனத்தை மாற்றுங்கள்

   ஏவு கணையிலும் தமிழை எழுதி

           எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

(அல்லது)

. பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

       மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

       விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

       உரையாமை செல்லும் உணர்வு

3

 

பகுதி – 3

பிரிவு - 3

35

  தன்வினை :   வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

                         .கா: பந்து உருண்டது.

   பிறவினை : வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

                        .கா. பந்தை உருட்டினான்

   காரணவினை :எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது

                         .கா. பந்தை உருட்ட வைத்தான்.

3

 

36.

·        கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி
கைபிடிஇயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி
கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி ஆகும்.

3

 

37

அணி விளக்கம்: 

        இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)

எ.கா:    அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
             வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புன்ளினம்தம்
             கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
              நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

அணிப் பொருத்தம்:
    சேறுபட்ட, நீர்வளம் மிகுந்த வயல் பகுதிகளில், பொய்கைகளில் செவ்வாம்பல் மலர் விரிவது இயல்பான நிகழ்வு. இதைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டதாக எண்ணியதாக கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3

 

பகுதி – 4

38

.

முன்னுரை :

     நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

களை பறிக்கும் பருவம்:

     நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்  பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.

வானவில் :

    அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும். இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

பொன்மாலைச் சாரல் :

     நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும் இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல உள்ளது.

செழித்து வளர்ந்துள்ளவை :

    சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம்., குளிர்ந்த மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன.

முடிவுரை :

     காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது

5

 

38

.

முன்னுரை:

     இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவணகாவியம் தமிழகக் காண்டத்தில் அமைந்துள்ள ஐந்து நில அழகுக் காட்சிகளைக் காண்போம்.

அருவியின் அற்புதக்காட்சி:

   அருவிகள் ஆர்ப்பரித்து பறையாய் ஒலிக்க பசுமையான கிளிகள் நாங்கள் அறி விழிசையை பாட இனிமையாகப் பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகுக வீர்த்து ஆடும். இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கு ஆசியுடன் பார்க்கும்.

    தீயில் இட்ட சந்தனமரக்கட்டைகளின் மணமும், அகிலின் நறுமணமும், உலையில் மலை நெல்லின் சோற்றின் மணமும் ஆற்றிடைப் பள்ளங்களில் உள்ள காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் ணம் கமழ்ந்து குன்று முழுவதும் நிறைந்திருந்தது.

முல்லையின் எல்லையில்லா அழகு:

      நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்து இனித பாட, மா, பலா, வாழைப் பழங்களோடு தேனும் தந்து இசைப்பாடி மகிழ்ந்தனர் புகழ் முல்லை நில மக்களான ஆயர் முக்குழல் இசையோடு மேயும் பசுக் கூட்டங்களை அ ஒன்றிணைத்தனர்.

    முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவால் நெல் ஆகியவற்றைக் கதிரம த்தில் குன்று போலக் குவித்து வைத்திருப்பர் இடையர்கள் அழகு மிகு கதிர்களை அடித் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் பயத்துடன் அஞ்சி ஓடும்.

பாலையின் வெம்மை காட்சி :

     கொடிய பாலைநிலத்தில் வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குப் வாய் மிகவும் உலர்ந்து குழறியது. இதனை கண்டு அதன் தாய் வருந்தியது. இளைப்பாறவும் நிழவில்லாததால் கடும்வெயிலில் தான் துன்புற்று நின்று தனது நிழலில் கு நிளைப்பாறச் செய்தது.

மருத நிலத்தின் காட்சி:

    மலையிடையே தோன்றும் அழகிய ஆறும், கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தல் பாய்ந்தோடும். அங்கு நெய்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும் பெருகி வரும் நீரினைக் கால்வாய் வழி வயலி, தேக்கி வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருத நில வயலில் காஞ்சி வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

    தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில் சிறுவர்கள் ஆடி மகிழ்ந்து நீராடினர் அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து அதன் வடிவழகு சுண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறுவர்கள் வைக்கோல் போர் குலுங்கிடும். படி ஏறி தென்னை இளநீர்க்காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்..

குறிஞ்சி தரும் குன்றா அழகு:

    தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி கடற்கரை மணவிடை உலவி காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும் பின்னர் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

முடிவுரை :

  இராவண காவியம் தரும் அழகு காட்சிகள் நம் கண்முன் இனிய காட்சிகளைத் தருகின்றன. தமிழரின் ஐந்நிலக்காட்சிகள் நம் நாட்டின் வளமான காட்சிகளை நம் கண்முன் காட்டுகின்றன

5

 

39

.

வரவேற்பு மடல்

இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

"சுத்தம் சோறு போடும்"

 

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு"

 

"கூழானாலும் குறித்துக் குடி"

 

    என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப்  பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

 

   நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I

 

    ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

 

                                                                                                                                    நன்றி.

                                                                                                                                  இவண்,

இரா மணிமாறன்,

(மாணவர் செயலர்)

 

5

 

39

ü  அனுப்புநர் முகவரி

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

 

40

பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

 

5

 

41

படிவங்களை வினாத்தாளில் தரப்பட்ட விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

 

42

அ) பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

ஆ) பீர்பாலின் நகைச்சுவையுணர்வு

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார்,

    பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

     எப்படி உங்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர், உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்,

    பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

5

 

 

பகுதி – 5

 

 

43 .

முன்னுரை:
     நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பண்டித ரமாபாய்:
    1858 -ஆம் ஆண்டு முதல் 1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வுஎன்பதற்குச் சான்றாவார்.

ஐடாஸ் சோபியா:
    1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :
    1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

சாவித்திரிபாய் பூலே :
     1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா :
      பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :
     இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே

             புவி வளம் பெறவே புதிய உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே”.

8

 

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

   நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

8

 

44.

.

     இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.

      இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

         இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.

      1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

8

 

முன்னுரை :  

     இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.

வித்வானின் வருகையும், அறிமுகமும் :   

    நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.

வக்கீல் வீட்டில்பிலிப் போல்ஸ்காஎன்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீத குழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

கீர்த்தனம் தொடங்கினார் : 

      வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.

    போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.

சாமாராகம் :   

     தஸரிமா……. மாஎன்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம்கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். மேடைக்கருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில் ஆழ்ந்தவன் போல் ஆனான்.

சாமா ராகத்தை  அனுபவிக்க அவனுக்கு மொழியோ, இனமோ இடையூறு செய்யவில்லை.

சாந்தமுலேகா  :  

       குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது. அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி உணர்வை வெளிப்படுத்த, நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா தடுமாறினான்.
என்ன? என்றார் வித்வான்.

வக்கீல் மொழி பெயர்த்தல் : 

       தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல், கூச்சல், அடிதடி, புயல், அலை, இடி என  ஒரே இரைச்சல். அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது .இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.

வித்வானின் திகைப்பு :

       அமைதியா , அப்படியா தோணித்து அவருக்கு? நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே!
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல், இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது  என்று திகைத்துக் கூறினார் போல்ஸ்கோ

பாராட்டல் :   இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா

முடிவுரை :  

     நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்.  இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.

8

 

45 .

இயற்கையின் தாய்மடி-  உதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன். அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து, உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது. மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம். மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

8

 

45. .

கருத்துச்செறிவு, பிழையின்மை, கையெழுத்துத் தெளிவு, மேற்கோள்கள் முதலானவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

8

 

விடைக்குறிப்பை  PDF வடிவில் பதிவிறக்க

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை