7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 08-01-2024 முதல் 12-01-2024
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
1.கற்றல் நோக்கங்கள் :
@ திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø நீங்கள் திருநெல்வேலிக்குச் சென்றுள்ளீர்களா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
திருநெல்வேலி
நெல்கள் சூழ்ந்த வயல் பகுதி
தண்பொருநை ஆறு பாயும் பகுதி
நெல்லையப்பர் கோவில் உள்ளது
முன்பொரு காலத்தில் கொற்கை எனும் துறைமுக நகரம் இருந்தது.
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
திருநெல்வேலிக் கவிஞர்கள் சிலரைக் குறித்து விவரித்து எழுதுக.
12.கற்றல் விளைவு:
Ø 704- தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.