9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 1 ST WEEK

9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        : 29-01-2024 முதல் 02-01-2023         

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. குறுந்தொகை

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ சார்ந்த படைப் புகளைப் படிப்பதன் வா யிலாக மனிதநேயப் பண் புடன் வாழ்தல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # யா மரத்தை யாராவது பார்த்துள்ளீர்களா?

         எனும்வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

திணை: பாலை துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலை வியை ஆற்றியது.

பொருள் ஈட்டுதற்காகப் பிரிந்து சென்ற வழியில் , பெண் யானையின் பசியைப் போக்க , பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய ‘யா’ மரத் தின் பட்டையை உரித்து, அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிப்படுத்தும்"

5.ஆசிரியர் செயல்பாடு :

     §  திணை , துறை ஆகியவற்றை விளக்குதல்

§  பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

§  பகுபத உறுப்பிலக்கணம் ,இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்

# பாடலில் பொதிந்துள்ள மனிதததை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


7.மாணவர் செயல்பாடு:

   Ø  மனிதத்தின் இன்றியமையாமையை உணர்தல்

Ø  சங்கப்பாடல்கள் கூறும் மனிதத்தைப் புரிந்து கொள்ளுதல்

@ மொழித்திறன் பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. குறுந்தொகை----- நூல்களுள் ஒன்று

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2. குறுந்தொகை - குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

3. குறுந்தொகை பாடலில் வெளிப்படும் மனிதப்பண்பை விளக்குக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       9046- அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.

      திறன்கள்:

      @ பேசுதல்,எழுதுதல்

9.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇

கடந்தவார மாதிரி பாடக்குறிப்புகள் 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை