முதல் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2024
இராணிப்பேட்டை , வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்
முதல் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி , இராணிப்பேட்டை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
இ. எம்+ தமிழ்+
நா |
1 |
2. |
ஈ. அன்மொழித்தொகை |
1 |
3. |
ஈ . சிற்றூர் |
1 |
4. |
இ. கால வழுவமைதி |
1 |
5. |
ஆ. சதாவதானி |
1 |
6. |
ஆ. முல்லை |
1 |
7. |
இ.
உழவு, ஏர், மண், மாடு |
1 |
8. |
அ.
அகவற்பா |
1 |
9. |
இ.
சதுரகராதி |
1 |
10. |
ஆ. விருந்தினரை
ஏழு அடிவரை பின்சென்று வழி அனுப்பினர். |
1 |
11. |
அ.
நான்கு, ஐந்து – ச,ரு |
1 |
12. |
அ.
நீதிவெண்பா |
1 |
13. |
இ. அருளை ,அறிவை |
1 |
14. |
அ.
அருமை + துணையாய் |
1 |
15. |
ஆ.
கல்வி |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
வரகு,
காடைக்கண்ணி , குதிரைவாலி |
2 |
18 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
19 |
வறுமையிலும்
நூல்களையே வாங்குவார் |
2 |
20 |
அவையம்=மன்றம்
அல்லது சபை . வழக்கை
விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
21 |
பல்லார்
பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார்
தொடர்கை விடல் |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
தேனிலே
ஊறிய செந்தமிழின் – சுவை தேறும்
சிலப்பதி காரமதை ஊணிலே
எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின்
புறுவோமே” |
2 |
23 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
24 |
அமர்+த்(ந்)+த்+ஆன் அமர் – பகுதி , த் – சந்தி , ந் – விகாரம் ,த்-
இறந்தகால இடைநிலை ,ஆன் – ஆண்பால் விகுதி |
2 |
25 |
அ. நவீன இலக்கியம் ஆ. சின்னம் (அ) இலச்சினை |
2 |
26 |
அ. கொடுக்காமல்
சிவந்த ஆ. மறைக்காமல் (அ) வெளிப்படையாகக்
காட்டு |
2 |
27 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
28 |
வெட்சி
– கரந்தை, வஞ்சி – காஞ்சி
, நொச்சி - உழிஞை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
இடம்:
இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும்
கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்:
எங்கள் தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கினார். |
3 |
30 |
1. போர்
அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர்,
சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர்
செய்யாமையைக் குறிக்கிறது. 2. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது 3. பசு, பார்ப்பனர், பெண்கள்,
நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல்
போர் புரிய வேண்டும் |
3 |
31 |
தமிழர்கள் உணவு
பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலை யின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால்
வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய்,
இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி,
கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு
வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப்
பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச்
சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர். |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
#
மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார். #
நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். #
அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே,நீ எனக்கு விளையாட்டாகத்
துன்பங்கள் செய்தாலும்,உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன்
என்று குலசேகராழ்வார் கூறுகிறார். |
3 |
|
33 |
இடம்: நாகூர் ரூமியால்
எழுதப்பட்ட “சித்தாளு” கவிதையின் வரிகள்
இவை பொருள்: சித்தாளு
அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: கற்களைச்
சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல்
உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு –விளித்தொடர் மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர் பாடினேன் தாலாட்டு -வினைமுற்றுத்தொடர் ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர் |
3 |
36 |
ü செப்பல் ஓசை
பெற்று வரும். ü ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும்
வரும். இயற்சீர்,
வெண்சீர்
மட்டுமே பயின்று வரும். ü இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
மட்டும் பயின்று வரும். ü இரண்டடி முதல்
பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.) ü ஈற்றுச் சீர்
நாள்,
மலர், காசு, பிறப்பு என்னும்
வாய்பாட்டில் முடியும். |
3 |
37 |
புளிமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய் தேமா
கருவிளம் நாள். |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
மனோன்மணியம்
சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். . (அல்லது)
ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
5 |
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு உறைமேல் முகவரி என்ற அமைப்பில்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான். அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள்
காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென
உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) கேட்கப்பட்ட
வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு, பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு ,பிழையின்மை, தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
அ. வீரப்பனும், ஆறுமுகமும்(
ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற
குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில்
இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும் எழுதியிருந்தான்.கடன்
வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும்,
நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு
குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால், பணத்தைக்
கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான்,
இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின்
வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும்
ஆறுமுகமும். (அல்லது) ஆ
கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே.
|
8 |
45 |
அ. அரசுப்பொருட்காட்சி முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும்
இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும்
இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும்
பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும்
நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன்
விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும்
நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற
அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். (அல்லது) ஆ தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர்
இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக்
கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |