FIRST REVISION 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY - CUDDALORE,NAGAI,TIRUVARUR

 முதல் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2024

கடலூர் , நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை

(கடலூர் , நாகப்பட்டிணம், திருவாரூர்,மயிலாடுதுறை ஆகிய  மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                         பகுதி-1                                                                        15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஈ . சிற்றூர்

1

2.     

அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

3.     

இ. எம்+தமிழ்+நா

1

4.     

. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1

5.     

ஈ . இலா

1

6.     

இ. பின்பனிக்காலம்

1

7.     

. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்க்காத்தல்

1

8.     

ஆ. மணி வகை 

1

9.     

அ. அன்மொழித்தொகை

1

10.    

ஈ . வேற்றுமை உருபு

1

11.    

இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி

1

12.   

ஆ. தளரப்பிணைத்தால்

1

13.   

இ. உலகம்

1

14.   

. உமா மகேஸ்வரி

1

15.   

அ. முடிச்சு + இட்டால்

1

 

பகுதி-2

                                                                                  பிரிவு-1                                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

   மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் புகழும் பெருமையும் அழியாத வகையில் ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்

2

17

இயந்திரமனிதன்,செயற்கைக்கோள் போன்றன

2

18

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

19

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

2

20

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

21

குற்றம் இலனாய்க்குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

 

                                                                                   பிரிவு-2                                                                        5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

உரை+த்+த்+அ

உரை – பகுதி ,த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை ,அ – பெயரெச்ச விகுதி

2

23

அ. முத்துப்பல் – உவமைத்தொகை

     எழிலனுக்கு முத்து போன்ற பல்வரிசை இருந்தது

ஆ. எழுகதிர் – வினைத்தொகை

      காலையில் கிழக்கு திசையில் கதிர் எழுந்தது

2

24

வெட்சிகரந்தை, வஞ்சிகாஞ்சி , நொச்சி - உழிஞை

2

25

. கடல்   . புலி

2

26

இன்னிசை அளபெடை – ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுத்தல்

 

2

27

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

28

அ. கலந்துரையாடல்  ஆ. பாசனம்

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                            பிரிவு-1                                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  தமிழரின் பண்டைய விருந்தோம்பல் பண்பில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ü  புதிதாக வருபவர் விருந்தினர் என்றநிலை மாறி நன்கறிந்தவர்களே விருந்தினராகக் கருதப்படுகின்றனர்.

ü  வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு மாறிவிட்டன.

3

30

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம்

          பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன் தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

31

1. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது

2. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்  

   ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்

3. போர் அறம்

3

                                                   

                                                                               பிரிவு-2                                                                            2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்டசித்தாளுகவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

3

33

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்

3

34

.

   

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று

.

     செம்பொனடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்

          திருவரை யரைஞாணரைமணி யொடுமொளி திகழரைவடமாடப்

      பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

          பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

      கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

          கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்த் தொடுமாட

      வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

           ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

 

3

 

                                                                            பிரிவு-3                                                                             2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35


3

36

உவமை அணி – உவமை,உவம உருபு,உவமேயம் மூன்றும் வெளிப்பட்டு வருவது

3

37

சீர்

அசை

வாய்பாடு

ஊழையும்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

உப்பக்கம்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

காண்பர்

நேர்+நேர்

தேமா

உலைவின்றித்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தாழா

நேர்+நேர்

தேமா

துஞற்று

நிரை+நேர்

புளிமா

பவர்

நிரை

மலர்

3

 

                                                                                  பகுதி-4                                                                     5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

. பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

(அல்லது)

)

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

5

39

அ)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

(அல்லது)

ஆ)

ü  இடம், நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி

என்ற  அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

) மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்துமற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

)

1.  நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்                

5

                                                                             

                                                                                 பகுதி-5                                                                     3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )    நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

        நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 (அல்லது)

)   தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

 

8

44

.

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

. பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

45

 அ. கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு, பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

ஆ, முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

நமது கடமை:

            விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.

 முடிவுரை:

       “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

8

பதிவிறக்கம் செய்ய 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை