முதல் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி , செங்கல்பட்டு மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஆ. கனிச்சாறு |
1 |
2. |
ஈ. தொல்காப்பியர் |
1 |
3. |
இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
4. |
அ. வேற்றுமை
உருபு |
1 |
5. |
அ. கூவிளம்
தேமா மலர் |
1 |
6. |
ஈ. இலா |
1 |
7. |
ஆ.
நூறு |
1 |
8. |
ஆ. தளரப்பிணைத்தால் |
1 |
9. |
ஆ. 10 |
1 |
10. |
இ. வலிமையை
நிலைநாட்டல் |
1 |
11. |
அ. நாகூர் ரூமி |
1 |
12. |
அ.
கம்பராமாயணம் |
1 |
13. |
ஆ.
கொடை |
1 |
14. |
இ.
பொய்+உரை |
1 |
15. |
அ.
கேள்விச்செல்வம் மிகுதலால் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
குயில்பாட்டு,
பாஞ்சாலி சபதம்,கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி |
2 |
17 |
தினைச்சோற்றைப் பெறுவீர்கள் |
2 |
18 |
முந்தைய
நாள் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும்
இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினான். |
2 |
19 |
வறுமையிலும்
நூல்களையே வாங்குவார் |
2 |
20 |
வாசவர் – நறுமணப்பொருள் விற்பவர் பல்நிண விலைஞர் – பலவகை இறைச்சி
விற்பவர் உமணர் - உப்பு விற்பவர். |
2 |
21 |
பண்என்னாம் பாடற்
கியைபின்றேல்;
கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத
கண். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
2
– பெரும்பொழுது, சிறுபொழுது |
2 |
23 |
பிரளயம் ,கைவிலங்கு,
ரிஷிமூலம் ,பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான்? கருணையினால் அல்ல , சினிமாவுக்குப் போன சித்தாளு |
2 |
24 |
பதிந்து
– பதி +த்(ந்) + த் + உ; பதி – பகுதி த் – சந்தி (ந்-ஆனது விகாரம்) த் – இறந்தகால இடைநிலை உ – வினையெச்ச விகுதி |
2 |
25 |
அழைப்புமணி ஒலித்ததும் கயல்விழி கதவைத் திறந்தார் |
2 |
26 |
அ. சின்னம் ஆ. ஆய்வேடு |
2 |
27 |
பாடுவதற்குத்
தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி , வீரம் , செல்வம்,
புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண் திணை. |
2 |
28 |
3-
சுட்டு , மறை , நேர் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ)
நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ)
கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ)
பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ)
வடலி-பனைவடலியைப் பார்த்தேன் உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
30 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார். #
நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். #
அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே, நீ எனக்கு விளையாட்டாகத் துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார். |
3 |
31 |
வாளித்தண்ணீர்,
சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும்
சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு
நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்… |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
|
33 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, ஆந்திரத் தலைவர்கள்
சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று கருதினர். இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் இராஜாஜி தனது பதவியைத்துறந்தார்.
அச்சமயத்தில், செங்கல்வராயன் தலைமையில்
கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார். |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
அ. முன்பின் அறியாத புதியவர்கள்
ஆ. விருந்தே புதுமை இ. விருந்து (அ) விருந்தோம்பல் |
3 |
||||||||||||||||||||||||
36 |
'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர் பாடினேன் தாலாட்டு -வினைமுற்றுத்தொடர் |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
ரோம் நகரத்தில் இரண்டு யாசகர்கள் ( பிச்சைக்காரர்கள் ) இருந்தார்கள்.அவர்கள் தினமும் ஒருவன் கடவுள் என்னை காப்பார்
எனக் கூறிக்கொண்டே இருந்தான். இன்னொருவன்
அரசன் தன்னை காப்பாற்றுவான் எனக் கூறிக்கொண்டே இருப்பான்.ரோம் நகர அரசர் தன் புகழை பரப்புகின்றவனுக்கு உதவலாம்
என முடிவெடுத்தார். தங்க கட்டிகள்
கொண்ட ரொட்டி தயாரித்து அதனை அந்த யாசகருக்குக் கொடுத்தார். அந்த யாசகர் அந்த ரொட்டியை தனது சக யாசகருக்கு
விற்று விட்டார். வீட்டுக்கு சென்று
அவர் அந்த ரொட்டியை வெட்டும் போது அதனுள் தங்க கட்டிக் கண்டார். உடனே அவர்கடவுளுக்கு நன்றிக் கூறி விட்டு பிச்சை
எடுப்பதை நிறுத்திக் கொண்டார். அரசர் பரிசளித்த ரொட்டியைப் பெற்ற யாசகர் மறுபடியும் யாசகம் கேட்பதைக் கண்டு
அதிர்ச்சியுற்றார். அவரை அழைத்து
“ நான் அணுப்பிய ரொட்டியை என்ன செய்தாய்?” என கேட்க அந்த யாசகர்,
அந்த ரொட்டி மிகவும் கனமாக இருந்ததாலும், மேலும் அது வேகமாலும் இருந்ததாலும் தன் நண்பன சக யாசகனுக்கு
விற்று விட்டதாக கூறினார். “ உண்மையில் கடவுள் தான் யாருக்கு உதவுகிறாரோ அவரே உதவி பெற்றவர் “ என கூறிவிட்டு,
அந்த யாசகரையும் அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விட்டார். |
5 |
39 |
அ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ஆ) பாடலின் திரண்ட கருத்து: இராசராசன் எட்டு திசைகளிலும் உள்ள காவல்
தெய்வங்கள் ஒன்றிணைந்தது போல் ஆட்சி செய்தான்.
அவனது நாட்டில், ·
யானைகள் மட்டுமே பிணைக்கப்பட்டு இருந்தன. ·
சிலம்புகள் மட்டுமே புலம்பின. ·
ஓடைகள் மட்டுமே கலக்கம் அடைந்திருந்தன. ·
நீர் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது. ·
மாங்காய்கள் மட்டுமே வடுப்பட்டிருந்தன. ·
மலர்கள் மட்டுமே பறிக்கப்பட்டு இருந்தன. ·
காடுகள் மட்டுமே கொடியனவாக இருந்தன. ·
வண்டுகள் மட்டுமே தேன் உண்பதாக இருந்தன. ·
நெற்கதிர்கள் மட்டும் போராகவும்,மலைகள் மட்டுமே
இருள்சூழ்ந்ததாகவும், ·
இளம் ஆண்களின் கண்கள் மட்டுமே பயந்ததாகவும், ·
குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து சென்றதாகவும், ·
செவிலித்தாய் மட்டுமே சினம் கொண்டதாகவும் போது சரியான ·
இசைப் பாணர்கள் மட்டுமே ஆடிப்பாடியதாகவும் கல்வெட்டுகள்
கூறுகின்றன. மையக்கருத்து: இரண்டாம் ராசராசன் நாட்டில் வாழ்ந்த மக்கள் எல்லா உரிமைகளையும் பெற்று
வாழ்ந்ததாக இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. மோனை நயம்: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். மாவே மா மலரே இயற்புலவரே இசைப்பாணரே ஆகிய சொற்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது. எதுகை நயம்: செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். இந்திரன் வாழிபெற்ற
கயற்குலமே வந்தபடி மொழிபெற்ற இயற்புலவரே ஆகிய சொற்களில் திரைப் பயின்று வந்துள்ளது. அணிநயம்: இரண்டாம் இராசராசனின் ஆட்சிச் சிறப்பை உயர்வு படுத்திக் கூறியுள்ளதால், இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று
வந்துள்ளது. சந்தநயம்:
இப்பாடல் எதுகை,மோனை நயங்கள் சிறப்புற அமைந்து சந்தநயம் மிக்க பாடலாக அமைந்துள்ளது. |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ)
மற்றும் ஆ) ஆகிய இரண்டு வினாக்களுக்கும் ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம். |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும்
பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும். ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற ,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு, பிழையின்மை, தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
அ. ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால.
கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ
சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல்
எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து
இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று
கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம் (அல்லது) ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ) நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும்,விடுதலைநாள்விழாவும்,குடியரசுநாள்விழாவும்அவைஅனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து
வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக
ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள்
வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை குடியரசுநாள்
விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம். விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர்.இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர். எண்ணற்றோர் சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது
கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947
ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய
உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள்
கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப்
பொது மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத்
தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும். (அல்லது) ஆ. தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம்
மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய
விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர்
இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக்
கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |