முதல் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி , கோவை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஆ.
மணி வகை |
1 |
2. |
ஆ. வணிகக் கப்பல்களும் , ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
3. |
ஆ. மோனை, எதுகை |
1 |
4. |
அ. வேற்றுமை உருபு |
1 |
5. |
ஈ. இலா |
1 |
6. |
இ. இளவேனில் |
1 |
7. |
அ.
திருப்பதியும், திருத்தணியும் |
1 |
8. |
அ. அதியன், பெருஞ்சாத்தன் |
1 |
9. |
அ. கருணையன் எலிசபெத்துக்காக |
1 |
10. |
அ. அகவற்பா |
1 |
11. |
இ.
வலிமையை நிலைநாட்டல் |
1 |
12. |
இ.
மலைபடுகடாம் |
1 |
13. |
ஆ.
தினை |
1 |
14. |
அ. சங்க இலக்கியம் |
1 |
15. |
ஈ.
சொல்லிசை அளபெடை |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
இயந்திர
மனிதன், திறன்பேசி, தகவல் தொழில்நுட்பம் போன்றன. |
2 |
17 |
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது. ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர். ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது |
2 |
18 |
வறுமையிலும்
நூல்களையே வாங்குவார் |
2 |
19 |
உரிய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
20 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
21 |
பண்என்னாம் பாடற்
கியைபின்றேல்;
கண்என்னாம் கண்ணோட்டம்
இல்லாத கண். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
கவிஞர்-பெயர்ப்பயனிலை
, சென்றார்-வினைப்பயனிலை |
2 |
23 |
அ. கல்வியே
ஒருவனுக்கு நல்லுயர்வு தரும். ஆ. மரத்தை வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். |
2 |
24 |
அ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர். ஆ. ஊட்டமிகு உணவு உண்டவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார். |
2 |
25 |
அ. மீநுண்
தொழில்நுட்பம் ஆ. தொன்மம் |
2 |
26 |
அ. நறுமணம் ஆ. புதுமை |
2 |
27 |
அ. காட்சி
, கானுதல் ஆ. நடித்தல்
, நடிப்பு |
2 |
28 |
அமர்+த்(ந்)+த்+ஆன் அமர்- பகுதி , த்-சந்தி, ‘ந்’ஆனது விகாரம் , த்-
இறந்தகால இடைநிலை ,ஆந் ஆண்பால் வினைமுற்று விகுதி. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
சோலைக்காற்று : இயற்கையில் பிறக்கிறேன் மின்விசிறிக்காற்று : செயற்கையில் பிறக்கிறேன் சோலைக்காற்று : காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள் மின்விசிறிக்காற்று : இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள் |
3 |
30 |
@ கதாசிரியர் ஊர்
திரும்புவதற்கு பன்னிரண்டணா போக மீதியைச் செலவு செய்தார். இரண்டணாவை
பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்தார். |
3 |
31 |
அ.
போலச்செய்தல் ஆ. புரவி ஆட்டம், புரவி நாட்டியம்
ஆ. மராட்டியர் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
இடம்: நாகூர் ரூமியால்
எழுதப்பட்ட “சித்தாளு” கவிதையின் வரிகள்
இவை பொருள்: சித்தாளு
அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: கற்களைச்
சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல்
உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|
33 |
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
|
3 |
||||||||||||||||||||||||
36 |
உவமை
அணி – உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது |
3 |
||||||||||||||||||||||||
37 |
ü அகவலோசை பெற்று, ஈரசைச்சீர் மிகுந்து
வரும். ü ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும்
வரும். ü மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) ü நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற
கூத்தன்,மற்றொரு
கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும்
வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள்
என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்
என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. ü ஆற்றுப்படுத்துதல் பல்வேறு நிலைகளில்
வளர்ச்சியடைந்துள்ளது. ü ஆசிரியர்களும், குறிப்பிட்ட துறையின் வல்லுநர்களும்
மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். ü இணையதளம் கூட மாணவர்களுக்கும்,பிறருக்கும் பல நல்வழிகளைக் காட்டுகிறது. (அல்லது) ஆ) மனோன்மணியம்
சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின்
வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
5 |
39 |
ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. ஆ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில்
மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான
விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான
உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ
மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத
ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து
வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக
ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள்
வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை குடியரசுநாள்
விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம். விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர்.இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர். எண்ணற்றோர் சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது
கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947
ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய
உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள்
கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப்
பொது மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத்
தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும். (அல்லது) ஆ) விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. வணிகம் செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து
செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது. ஆனால்
இன்றளவிலோ வணிக வளாகங்களும், வணிகநிறுவனங்களும்
பெரும் பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி
,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம்
செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் ஒரு பொருள் வாங்குவதற்குப்
பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம்
கூறும் மருவூர்ப்பாக்கத்தில், அகில் சந்தனம்
உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பவர்களும், தானியங்கள்
விற்பவர்களும், உப்புவிற்பவர்களும், எண்ணெய் விற்பவர்களும், பலவிதமான இறைச்சி
விற்பவர்களும் ஒரே இடத்தில் இருந்து விற்பனை
செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும்
ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி நுகர்வோரை பாதிப்படையச் செய்கின்றனர். பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகைசெய்யும்பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை மகிழ்விக்க பாணன்,பாடினி,விறலி,கூத்தர்
உள்ளிட்ட இயல் இசை நாடகக் கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும் வணிக வளாகங்களில் மக்களையும் மகிழ்விக்க
பொழுதுபோக்கிற்காக நிறைய அம்சங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன |
8 |
44 |
அ. முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை
கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்:
கப்பல்
கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின்
நிலை: அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக
வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச்
சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. (அல்லது) ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனம் மாறச்
செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ
மற்றும் ஆ ஆகிய வினாக்களுக்கு கேட்கப்பட்ட
வினாவிற்கேற்ற ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,
பிழையின்மை, தெளிவு முதலியவற்றைக் கருத்தில்
கொண்டு மதிப்பெண் வழங்குக |
8 |