FIRST REVISION 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY - MADURAI

முதல் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி , மதுரை & தஞ்சாவூர் மாவட்டம்

(மதுரை & தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

வினாத்தாளைப் பதிவிறக்க 

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.     

. விருந்தினரை ஏழு அடிவரை பின்சென்று வழி அனுப்பினர்.

1

3.     

. வேற்றுமை உருபு

1

4.     

. பால் வழுவமைதி

1

5.     

. மன்னன் , இறைவன்

1

6.     

. முன்பனிக்காலம்

1

7.     

ஈ. சிலப்பதிகாரம்

1

8.     

ஆ. அதியன் , பெருஞ்சாத்தன்

1

9.     

ஆ. சமூகப்பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

1

10.    

. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது.

1

11.    

. கொளல் வினா

1

12.   

இ. பரிபாடல்

1

13.   

அ. அறிவியல் செய்தி

1

14.   

ஈ. அடுக்குத்தொடர்

1

15.   

அனைத்து தெரிவுகளும் தவறாகத் தரப்பட்டுள்ளன.

(விசும்பு , உரு என்பதே அடி மோனை)

1

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும்,உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை.

2

18

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

19

ü  பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது.

ü  மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர்.

ü  உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது

2

20

தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்

2

21

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

2

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. உம்மைத்தொகை - நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

ஆ. உவமைத்தொகை - அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்

2

23

. பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றேன்

. செயற்கையைவிட இயற்கை சிறந்தது.

2

24

. தொலைவில் அமர்க    . சிறியவரின் அமைதி

2

25

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.

2

26

அ. மறுமலர்ச்சி ஆ. ஒரு மொழி

2

27

. நடித்தல் , நடிப்பு     . சுடுதல் , சுட்டல்

2

28

கிளர்ந்த கிளர் + த் (ந்) + த் + அ கிளர் பகுதி த் சந்தி த்(ந்) ந் ஆனது விகாரம் த் இறந்தகால இடைநிலை அ பெயரெச்ச விகுதி

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

1.     திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

2.     அம்மானைப்பாடல்கள் , சித்தர்பாடல்கள் , சொற்பொழிவுகள் 

3.     இரண்டு.

3

30

     # மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.

     # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

     # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவியுள்ளது.

3

31

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்

)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

 

3

                    

                                                                                   பிரிவு-2                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகைஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும் சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்

3

33

    # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

    # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

    # அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே,நீ எனக்கு விளையாட்டாகத் துன்பங்கள்  

        செய்தாலும்,உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

3

34

.

    விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

        வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

   திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

      எழுதல் முன் மகிழ்வன செப்பல்

   பொருந்து மற்றுஅவன் தன்அருகுற

       இருத்தல் போமெனில் பின் செல்வதாதல்

  பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

         ஒழுக்கமும் வழிபடும் பண்பே

.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந் துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;  

3

                        

                                                                            பிரிவு-3                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  வஞ்சித்திணை: மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது.

ü  காஞ்சித்திணை:எதிர்த்துப் போரிடுவது.

3

36

    ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போ, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக      அணி எனப்பட்டது.

      இது முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்

3

37

சீர்

அசை

வாய்பாடு

அறனீனும்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

இன்பமும்

நேர் +நிரை

கூவிளம்

ஈனும்

நேர்+நேர்

தேமா

திறனறிந்து

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

தீதின்றி

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

வந்த

நேர்+நேர்

தேமா

பொருள்

நிரை

மலர்

3

                                                                                        பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

 (அல்லது)

) விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. வணிகம் செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும், வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி ,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் ஒரு பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

   சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்அகில் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பவர்களும், தானியங்கள் விற்பவர்களும், உப்புவிற்பவர்களும், எண்ணெய் விற்பவர்களும், பலவிதமான இறைச்சி விற்பவர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி  நுகர்வோரை பாதிப்படையச் செய்கின்றனர்.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகைசெய்யும்பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை மகிழ்விக்க  பாணன்,பாடினி,விறலி,கூத்தர்  உள்ளிட்ட இயல் இசை நாடகக் கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும்  வணிக வளாகங்களில் மக்களையும் பொழுதுபோக்கிற்காக  நிறைய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

5

39

)

ü  இடம், நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

(அல்லது)

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

)

   பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. 

5

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 அ) மாதிரி

ஆ)   

    # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.

   # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.

   # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.

   # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

   # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

   # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும்.

 

8

44

 .

முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

 (அல்லது)

. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்  அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள். விறகு கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

கடிதத்தில் இருந்த செய்தி:

              அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன் உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும் எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய்  கொடுத்து அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால், பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான்.

                   இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின் பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது.

ஆறுமுகம்:

                 குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

8

45

அ.

முன்னுரை:

   உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.மூன்று தமிழ்ச்சங்கங்களும் கடல்கோளால் அழிந்து போயின.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.

 (அல்லது)

. தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

8

 

 விடைக்குறிப்பை பதிவிறக்க


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை