FIRST REVISION 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY - DHARMAPURI

முதல் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி , தருமபுரி மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.     

. அன்மொழித்தொகை

1

3.     

. அதிவீரராம பாண்டியர்

1

4.     

. பால் வழுவமைதி

1

5.     

. வானத்தையும் , பேரொலியையும்

1

6.     

. கழங்கு, அம்மானை, ஊசல்

1

7.     

. கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

1

8.     

. உழவு , ஏர், மண் ,மாடு 

1

9.     

. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

10.    

. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது.

1

11.    

. கருணையன் எலிசபெத்துக்காக

1

12.   

. தேம்பாவணி

1

13.   

. வீரமாமுனிவர்

1

14.   

. பூக்கையை , சேக்கையை

1

15.   

. கருணையன்

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

வேம் + கை  - வேகின்ற கை

வேங்கை  - மரம்

2

18

எதிர்காலம் உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.

2

19

வெட்சிகரந்தை , வஞ்சிகாஞ்சி , நொச்சி - உழிஞை

2

20

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு , நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு

2

21

குன்றேறி  யானைப்போர்  கண்டற்றால்  தன்கைத்தொன்

றுண்டாகச்  செய்வான்  வினை.

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

தேன்மழை,மணிமேகலை,வான்மழை,பொன்மணி ,பூவிலங்கு

2

23

. பண்டைய இலக்கியம்  . சின்னம் () இலச்சினை

2

24

அ. துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும்

ஆ. மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்து போல நிலையானது.

2

25

. வெள்ளை    . கருத்துவிடும்

2

26

. சோற்றுக்கு ஒரு சோறு பதம்  . மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.

2

27

. மூன்று +தமிழ்  -      ஆ. ஐந்து+திணை  - ரு

2

28

அ. கொள்கை     ஆ. நெருப்பு (தீ)

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

1.     அதியன்   

2.     பேகன்   

3.     தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது

3

30

·        தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

·        மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்

3

31

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்டசித்தாளுகவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

3

                                          

                                                                                   பிரிவு-2                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :         காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்று :     இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது

                                   இருப்பிடங்கள்

3

33

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

3

34

.

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

    மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்

    மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

    ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

.

     மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

     மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

     எவ்வெவை தீமைஎவ்வெவை நன்மை

     என்பதறிந்து ஏகுமென் சாலை!

     தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

     தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

     கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

     உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

     நானே தொடக்கம்; நானே முடிவு;

     நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

 

3

                                                     

                                                                            பிரிவு-3                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

6 வகைப்படும் – அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா.

3

36

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

               கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை மதுரை நகருக்குள் வரவேண்டாம்எனக் கூறிகையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

3

37

சீர்

அசை

வாய்பாடு

ஒழுக்கம்

நிரை+நேர்

புளிமா

விழுப்பம்

நிரை+நேர்

புளிமா

தரலான்

நிரை+நேர்

புளிமா

ஒழுக்கம்

நிரை+நேர்

புளிமா

உயிரினும்

நிரை+நிரை

கருவிளம்

ஓம்பப்

நேர்+நேர்

தேமா

படும்

நிரை

மலர்

3

 

                                                                                        பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

. (அல்லது)

) கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

     பூமித் தாயே என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாகஎனக் கருணையன் வேண்டினான். குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:

     என் தாய் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:

        ”எனது மனம்  பரந்த மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது. தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின் வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

தனித்து விடப்பட்ட கருணையன்:

        “எனக்கு உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான் உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை  என்னால் அறிய முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய்  தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே”  என்று அழுது புலம்பினான்

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:

      நவமணிகள் பதித்த மணி மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை மாலையாக அணிந்த கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே கூச்சலிட்டன.

5

39

)

ü  இடம், நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

(அல்லது)

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

)

   கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை.        

5

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )   

    # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.

   # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.

   # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.

   # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

   # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

   # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும்.

 (அல்லது)

)   (மாதிரி)



8

44

.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

(அல்லது)

. கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு, பிழையின்மை, தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

45

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

நமது கடமை:

            விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.

 முடிவுரை:

       “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

(அல்லது)

ஆ. அரசுப்பொருட்காட்சி

முன்னுரை :

    எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

            மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

            பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

            அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

            வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

            சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

            எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

8

 

 விடைக்குறிப்பை பதிவிறக்க

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை