பொங்கல் திருவிழா - ஜனவரி 2024
தமிழ்நாடு அளவிலான கட்டுரைப்போட்டி
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அருமை மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.இவ்விழா தொன்றுதொட்டு தமிழர் வாழ்விலும், பண்பாட்டிலும் இரண்டறக் கலந்துள்ளது. இயற்கைக்கும், உழவுக்கு பேருதவி புரிந்த மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா அமைந்துள்ளது. சொல்லப்போனால் இவ்விழா உழவுத்தொழிலுக்காம்ன முக்கிய விழாவாகும். ஆகையால் இந்நன்னாளில் உழவின் அவசியத்தையும், அதன் உன்னததத்தையும் உணர்ந்து போற்றுதல் அவசியம். அதற்கு வலுசேர்க்கும் வகையில் , தமிழ்ப்பொழில் வலைதளம் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
போட்டி குறித்த விவரங்கள்:
- பொங்கல் திருநாள் ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி இலவசம்.
- ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பெறலாம்.
- 6-12 .ஆம் வகுப்பு மாணவர்கள் ஓவியங்களைத் தாங்களே A4 தாளில் வரைந்து அவற்றை SCAN செய்து , PDF வடிவில் மாற்றி , பின்வரும் இணைப்பில் UPLOAD செய்ய வேண்டும்
- 6-8 , 9-10 ,11-12 என வகுப்புகள் 3 நிலைகளில் பிரிக்கப்பட்டு , அவற்றுக்கான தனித்தனி UPLOAD இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உரியவற்றில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- மூன்று நிலைகளிலும் சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 200ரூ பரிசு வழங்கப்படும்.
- பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச்சான்றிதழ் கிடைக்கும்.
- ஓவியங்கள் தரப்பட்ட தலைப்புக்கு மிகப்பொருத்தமுடையதாக இருத்தல் வேண்டும்
- போட்டிக்கான தலைப்பு : உழந்தும் உழவே தலை
- ஓவியங்களைப் பதிவெற்றவேண்டிய கடைசி நாள்: 16-01-2024.
6 முதல் 8.ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஓவியங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான இணைப்பு👇