SIRAPPU THIRUPPUTHAL THERVU-2 IYAL 4,5,6

சிறப்பு திருப்புதல் தேர்வு 2 – இயல் 4,5,6

 10.ஆம் வகுப்பு                தமிழ்              மதிப்பெண்கள்: 100        நேரம்: 3 மணி நேரம்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                                                       1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

) குலசேகராழ்வாரிடம் இறைவன்  ) இறைவனிடம் குலசேகராழ்வார்

) மருத்துவரிடம் நோயாளி     ) நோயாளியிடம் மருத்துவர்

2. குலசேகர ஆழ்வார்வித்துவக்கோட்டம்மாஎன்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி    ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி       

) பால் வழுவமைதி,திணை வழுவமைதி   ) கால வழுவமைதி, இட வழுவமைதி

3) பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

) வானத்தையும்,பாட்டையும்  ) வானத்தையும்,புகழையும்

)வானத்தையும்,பூமியையும்  ) வானத்தையும்,பேரொலியையும்.

4) குலசேகரஆழ்வார்'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தைஅழைத்துப் பாடுகிறார்.  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே

) மரபு வழுவமைதி, திணைவழுவமைதி ஆ) இடவழுவமைதி, மரபு வழுவமைதி

) பால் வழுவமைதி, திணைவழுவமைதி ஈ) கால வழுவமைதி, இடவழுவமைதி

5) அருந்துணை என்பதைப் பிரித்தால்- -------------என வரும்

அ) அரு+துணை  ஆ) அருமை +துணை   இ) அருமை+இணை   ஈ) அரு+இணை

6)’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர் கேட்பது----------வினா.

    ‘அதோ அங்கு நிற்கும் என்று மற்றொருவர் கூறியது--------------விடை

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ) அறியா வினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை ஈ) கொளல் வினா,இனமொழி விடை

7) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

      மருளை யகற்றி மதிக்கும்  தெருளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது

அ)தமிழ்    ஆ)அறிவியல்    இ)கல்வி     ஈ)இலக்கியம்

8) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச்செப்பேடு உணர்த்துவது

அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது    ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது            

இ) பக்தி இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது   ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

9) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்     ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்   ) மருதம், நெய்தல், பாலைநிலங்கள்

10) கோசல நாட்டில் கொடையில்லாத காரணம் என்ன?

) நல்லஉள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமைஇல்லாததால்

11) பாரத ஸ்டேட் வங்கியில் உரையாடு மென்பொருள் யாது?    ) துலா   ) இலா   ) கலா   ) குலா                                                                                    

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

    செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

          திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

    பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

         பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

    கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

         கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

    வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

         ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

12) நுதல் என்ற சொல்லின் பொருள்    ) கண் ஆ) நெற்றி  ) முகம்  ) செவி

13) பைம்பொன் என்பதன் இலக்கணக்குறிப்பு

) உம்மைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) விளித்தொடர் ஈ) அடுக்குத்தொடர்

14) இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?

) பரிபாடல்  ) மலைபடுகடாம்   ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்  ) பெருமாள் திருமொழி

15) மோனை நயத்தைத் தேர்ந்தெடு

) பதிந்தாட அசைந்தாட  ) செம்பொனடி பைம்பொன்  ) கம்பி - கட்டிய  ) உரு - அறிவாரா

பகுதி-2 (மதிப்பெண்கள்:18)

                                                                      பிரிவு-1                                                                      4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)

16) மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.      

17) வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் இரண்டனை எழுதுக

18) செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்  தொடர்களாக்குக

19) உறங்குகின்ற கும்பகன்னஎழுந்திராய் எழுந்திராய்

     காலதூதர் கையிலேஉறங்குவாய் உறங்குவாய்

கும்பகன்னனை என்னசொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

20) சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

      சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

21) ’உலகுஎன முடியு,ம் குறளை அடிமாறாமல் எழுதுக.

                                                                       பிரிவு-2                                                                   5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

23) இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

24) கீழ்வரும் தொடர்களில்  பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

      உழவர்கள் மலையில் உழுதனர்.  முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

25) இந்த அறைஇருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம்இருக்கிறது?

இதோ..  இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும்வெளிச்சம்வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளைஎடுத்தெழுதுக.

26) கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. 

. இயற்கை-செயற்கை ஆ. விதி-வீதி

27) குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக: குறிப்புஎதிர்மறையான சொற்கள்

1. கொடுத்துச்சிவந்த 2. மறைத்துக்காட்டு

28) கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க :  1. Nanotechnology  2.  Thesis

பகுதி-3 (மதிப்பெண்:18)   பிரிவு-1                                                                         

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:                                                           2X3=6

29) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா?என்பதை விளக்குக

30) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

31) பத்தியைப் படித்து விடை எழுதுக

      போலச்செய்தல்பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ளகூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக்கூறப்படுகிறது.

1. போலச்செய்தல்பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலையாது?  

2. மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கலை எது? 3. இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.

                                                                   பிரிவு-2                                                                                                                    

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) மாளாத காதல் நோயாளன் போல்என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

33) மன்னன் இடைக்காடனார்என்றபுலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம்தருக.

34) அருளைப் பெருக்கி (அல்லது) வாளால் …. எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

                                                                   பிரிவு-3                                                                                                              

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:                                    

           தொழுதகை  யுள்ளும்  படையொடுங்கும் ஒன்னார்

           அழுத  கண்ணீரும் அனைத்து.

36)  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை                                                                                                      

       இன்மை புகுத்தி விடும்.  இதில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக

37) தற்குறிப்பேற்ற  அணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                                  5X5=25

38) ) இறைவன்,புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

(அல்லது)

 ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

39) ) மொழிபெயர்க்க

     Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar. (அல்லது)

    ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை  நூலுக்கு மதிப்புரை எழுதுக

   குறிப்பு - நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்

40) ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

   1. வானம் கருக்கத் தொடங்கியது. மழைவரும்போலிருக்கிறது.

   2.அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ..........

   3. ............  மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

   4. கண்ணுக்குக்குளுமையாகஇருக்கும் ................... புல்வெளிகளில் கதிரவனின் ................... வெயில் பரவிக்கிடக்கிறது.

   5. வெயிலில் அலையாதே; உடல் ................... (அல்லது)

) நிகழ்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.

41) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் படிவத்தை நிரப்புக.

42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                                  3X8=24

43) ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழேவிழுந்தஒரு தேனீர்க் கோப்பையைஎடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளைஒட்டிச் 'செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக..   (அல்லது)

 ) போராட்டக் கலைஞர்பேச்சுக் கலைஞர்நாடகக் கலைஞர்திரைக்கலைஞர்இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.

44) ) "அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்" என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக                                    . (அல்லது)

  ) ’கற்கை நன்றே கற்கை நன்றே

       பிச்சைபுகினும் கற்கை நன்றேஎன்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரைஏற்றிய கதையைப்பற்றிய உங்களின் கருத்துகளைவிவரிக்க.

45) ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

       முன்னுரை– கலைத்திருவிழா - அரங்குகள்-அமைப்பு-உணவுப்பண்டங்கள்-நிகழ்த்தப்பட்ட கலைகள்- பொழுதுபோக்குமுடிவுரை.

(அல்லது)

   ) ”விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்

உறுப்பினர் சேர்க்கை   விண்ணப்பப் படிவம்

 

1.    மாணவரின் பெயர்                                                    :       

2.   பாலினம்                                                                   :       

3.   பிறந்த நாள்                                                               :       

4.   தேசிய இனம்                                                            :       

5.   இரத்த வகை                                                             :       

6.   உயரம் மற்றும் எடை                                                :       

7.   பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                                 :       

8.   வீட்டு முகவரி                                                           :       

 

9.   தொலைபேசி / அலைபேசி எண்                             :       

10.  இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு                           :       

11.  பள்ளியின் முகவரி                                                    :

12.  சேர விரும்பும் விளையாட்டு                                    :       

                                                           

                                                                                                மாணவரின் கையெழுத்து

 

பெற்றோர்/பாதுகாவலர் கையெழுத்து

இடம்:

நாள்:

TO DOWNLOAD PDF


1 கருத்துகள்

நன்றி

புதியது பழையவை