6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 1 ST WEEK

  6.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 29-01-2024 முதல் 02-01-2024         

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :   முதல் வாரம்                                                        

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு         

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. நீங்கள் நால்வர்  

                                              2. பசிப்பிணி போக்கிய பாவை

1.கற்றல் நோக்கங்கள்   :

         @   வாழும்  முறைகளை அறிதல்

             @  பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளரத்தல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் யாவை?

       Ø  உலகில் சிறந்த தானமாக கருதப்படுவது எது?

      Ø  பசியின் கொடுமையை சில காணொளிக் காட்சிகள் கொண்டு காண்பித்து பாடத்தினை ஆர்வமூட்டல்

    என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்

4.படித்தல்  :             

  • செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • வாழ்க்கை வாழும் முறை

  •  கோமுகி : கோ – பசு , முகி – முகம், பசுமுகம் கொண்ட பொய்கை

  • வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.

  • அமுத சுரபி சிறப்பு : அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

  • ஏ ழை மக்ளின் பசியைப் போக்குவதே மேலான அறம் . உணவு கொடுத்தவர்களே உயிரைக்  கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

      1. பசிப்பிணி போக்கிய பாவை யார்? 

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

     2. கவிஞர் கலீல் கிப்ரானைப் பற்றி குறிப்பு எழுதுக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

    3. பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதையாகச் சுருக்கிக் கூறுக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

  • உங்கைள் நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேறறும் வழிகைள் குறித்துக் கலந்துரையாடுக.

  • பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதையாகச் சுருக்கிக் கூறுக.

12.கற்றல் விளைவு:

 Ø 609 - மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.

@ 610 - பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை

 (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்

 போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான

 கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்


 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை