இரண்டாம் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2024
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
அ.
அகவற்பா |
1 |
2. |
ஆ. கொன்றை வேந்தன் |
1 |
3. |
இ. நக்கீரனார் |
1 |
4. |
இ. எம்+தமிழ்+நா |
1 |
5. |
அ. ஜூன் 15 |
1 |
6. |
ஈ. கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை? |
1 |
7. |
ஆ. நறுந்தொகை |
1 |
8. |
ஆ. ஞாயிறு மறையும் நேரம் |
1 |
9. |
ஈ. தலையில் கல் சுமப்பது
|
1 |
10. |
ஆ. மந்தை |
1 |
11. |
இ. உழவு,ஏர்,மண்,மாடு |
1 |
12. |
ஆ. கனிச்சாறு |
1 |
13. |
இ. பாவலரேறு |
1 |
14. |
இ. பாண்டியர் |
1 |
15. |
ஈ. முன்னும், முடிதாழ |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப்
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
தம்பி , அழாதே!
அம்மா இப்போது வந்துவிடுவார். |
2 |
18 |
மீண்டும்
மீண்டும் நிறைந்த வெள்ளத்தால் உயிர்கள் தோன்றுவதற்கேற்ற சூழல் உருவானது. |
2 |
19 |
அவையம்=மன்றம் அல்லது
சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதிமன்றம். |
2 |
20 |
வாருங்கள்,நலமா? , நீர் அருந்துங்கள். |
2 |
21 |
பொருளல் லவரைப் பொருளாகச்
செய்யும் பொருளல்ல தில்லை பொருள். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
நேற்று என்னைச் சந்தித்தவர்
எனது நண்பர் |
2 |
23 |
காட்சி , காணுதல் |
2 |
24 |
அ. உழவர் வயலில் உழுதனர் ஆ. நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் |
2 |
25 |
முதல்நிலை , இடைநிலை,
கடைநிலை |
2 |
26 |
அறிபயன்
- அறி + ய் + ஆ + ஏன் அறி
- பகுதி ய் - சந்தி ஆ - எதிர்மவ்ற இடைநிலை
புணர்ந்து கெட்டது ஏன் -
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி |
2 |
27 |
அ.
காப்புரிமை ஆ. மீநுண் தொழில்நுட்பம் |
2 |
28 |
அ. நெல்லை ஆ.
புதுவை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
30 |
அ)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான பண்பு நலன்களை உருவாக்குகின்றன. ஆ)
இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த
பிறவியில் நன்மை கிட்டும் என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப்
பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும்
பொருந்தக்கூடியது. ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
31 |
அ.
புலி ஆட்டம் ஆ.
புலியைப்போல நடந்தும், பதுங்கியும், பாய்ந்தும், எம்பிக்குதித்தும், நாக்கால் வருடியும்,
பற்கள் தெரிய வாயைப்பிளந்தும், உறுமியும் ஆடுவர். இ.
புலி ஆட்டம். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
#
மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார். #
நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். #
அதுபோல,வித்துவக்கோட்டு அன்னையே,நீ எனக்கு விளையாட்டாகத் துன்பங்கள் செய்தாலும்,உனது அருளையே
எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார் |
3 |
|
33 |
ü உயிர்பிழைக்கும் வழி
அறியேன் ü உறுப்புகள் அறிவிற்குப்
பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத் தேடும் வழி
அறியேன் ü காட்டில் செல்லும்
வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
தனிமொழி ஒரு
சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும். எ. கா.
கண், படி – பகாப்பதம்
கண்ணன்,
படித்தான் – பகுபதம் தொடர்மொழி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள்
தருவது தொடர்மொழி ஆகும். எ. கா.
கண்ணன் வந்தான். மலர் வீட்டுக்குச் சென்றாள். பொதுமொழி ஒரு
சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லேபிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய்
அமைவது பொதுமொழி எனப்படும். எ. கா. எட்டு – எட்டு என்ற
எண்ணைக் குறிக்கும். வேங்கை– வேங்கைஎன்னும்
மரத்தைக் குறிக்கும். |
3 |
||||||||||||||||||||||||
36 |
நிரல்நிறைஅணி நிரல் = வரிசை;
நிறை= நிறுத்துதல். சொல்லையும் பொருளையும்
வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்பொருள் கொள்வது நிரல்நிறைஅணி எனப்படும். எ.கா. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
-குறள்: 45 பாடலின் பொருள் இல்வாழ்க்கைஅன்பும்
அறமும் உடையதாக விளங்குமானால்,
அந்தவாழ்க்கையின்பண்பும் பயனும் அதுவே ஆகும். அணிப்பொருத்தம் இக்குறளில்
அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும்
என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறைஅணி ஆகும் |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. வணிகம் செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து
செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது. ஆனால்
இன்றளவிலோ வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்
பெரும் பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் ஒரு பொருள் வாங்குவதற்குப்
பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், அகில் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பவர்களும், தானியங்கள் விற்பவர்களும், உப்பு விற்பவர்களும்,எண்ணெய் விற்பவர்களும், பலவிதமான இறைச்சி
விற்பவர்களும் ஒரே இடத்தில் இருந்து விற்பனை
செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும்
ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி நுகர்வோரை பாதிப்படையச் செய்கின்றனர். பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை மகிழ்விக்க பாணன்,பாடினி,விறலி,கூத்தர்
உள்ளிட்ட இயல் இசை நாடகக் கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும் வணிக வளாகங்களில் மக்களையும்
பொழுதுபோக்கிற்காக நிறைய அம்சங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. (அல்லது) ஆ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
5 |
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு உறைமேல் முகவரி என்ற அமைப்பில்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு
வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில்
இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான செய்தி. நாமும் இது
போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில்
வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும். ஆ) 1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப்
படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை
குறைக்கச் செய்தல். |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல்
வளம்: v
தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v
திராவிட
மொழிகளில் மூத்தது. v
பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v
தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும்
தந்துள்ளது. v
பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v
மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v
தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். v
மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப
தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். (அல்லது) ஆ) முன்னுரை: ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து
வருகின்றன. நிகழ்கலையின் வடிவங்கள்: பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும். இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல்
பாடல்களோடு நடைபெறும். சிறப்பும், பழமையும் வாழ்வியல் நிகழ்வில்
பிரிக்க முடியாத, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை
மூலம் அறிய முடிகிறது. பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள்
எல்லாம் நம்முன்னோர் காலத்தில் இருந்த பழமை வாய்ந்த கலைகளாகும். குறைந்து வருவதற்கான காரணங்கள்: நாகரிகத்தின் காரணமாகவும்,
கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், திரைத்துறை வளர்ச்சியினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன. வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன நம் இல்லங்களில் நடைபெறும்
விழாக்களில் நல்ல வாழ்வியல் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும்,
கலைஞரையும் பாராட்டுவோம். முடிவுரை: நாமும் நிகழ்கலைகளைக் கற்று,
கலைகளை அழியாமல் காப்போம். |
8 |
44 |
அ. முன்னுரை:-
இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்டுபாடுகளைும்
நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு
மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன்
விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம். பேரண்டம்:- பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன்
ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே
என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். விண்மீன்கள்:- ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது.
அதனால் விண்மீன் சுருக்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன்
ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என் விளக்கினார். கதிர்வீச்சும் துகளும்:- “சில நேரங்களில் உண்மையானது, புனைவை விடவும்
வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை
அறிந்து கொண்டோம். திரும்புதல்:- விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பல வடிவிலான
விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப்
பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க
பலரும் கூடி வந்திருந்தனர். முடிவுரை:- விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில்
மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன. (அல்லது) ஆ வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ.
அரசுப்பொருட்காட்சி முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி
நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல
நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை
அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம்
போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற
அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். (அல்லது) ஆ தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர் முன்னுரை: ”வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்கள் மனதில் நிலையாய்
நிற்பவர் யாரோ?” படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு
பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில்
தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா? பிறப்பும் இளமையும்: ”விருதுப்பட்டிக்கு இவரை விட பெரிய விருது தேவையா?” விருதுப்பட்டி
என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15
-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல்
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார்.
இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை
நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில்
ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்: சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள்
பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும்
மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார். தூய்மையும் எளிமையும்: ”எளிமையின் இலக்கணம் – இவர் மனதில் கொண்டது பெருங்குணம்” பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத்
தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த
பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று
ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர
அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர், மக்கள் பணியே மகத்தான பணி: 1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில்
பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18
மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில்
விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப்
படிப்பார். முடிவுரை: ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” 'கல்விக் கண் திறந்த
காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது
"ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை
தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய
ஒப்பற்ற தலைவர் இவரே. |
8 |