இரண்டாம் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2024
இராணிப்பேட்டை , வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ,கடலூர்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஆ. தேவநேயப்பாவாணர் |
1 |
2. |
ஈ. அண்ணன் தம்பி |
1 |
3. |
இ. உயிர்வளி |
1 |
4. |
அ. வழு |
1 |
5. |
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
6. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
7. |
அ.
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது. |
1 |
8. |
ஈ.
மன்னன் , இறைவன் |
1 |
9. |
அ.
அருமை + துணை |
1 |
10. |
ஈ. வானத்தையும்,
பேரொலியையும் |
1 |
11. |
ஆ.
தற்குறிப்பேற்ற அணி |
1 |
12. |
இ.
பரிபாடல் |
1 |
13. |
ஆ.
கீரந்தையார் |
1 |
14. |
ஆ.
சிறப்பு |
1 |
15. |
தெரிவுகள்
தவறு. சற்றேறக் குறைய சரி என்பதால், அ. தண்பெயல் , மீண்டும் என்பதற்கு மதிப்பெண் வழங்கலாம். |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச்
சுடுகிறார் # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார் # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. |
2 |
18 |
ஜப்பானில்
சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திரமனிதனே பெப்பர். இது உலக அளவில் விற்பனையாகும்
ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு,
படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. |
2 |
19 |
# உமணர் – உப்பு விற்பவர் |
2 |
20 |
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது. ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர். ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது |
2 |
21 |
முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
6
வகை – அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா |
2 |
23 |
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதும், கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். |
2 |
24 |
அ. குடந்தை
ஆ. மன்னை |
2 |
25 |
மயங்கிய – மயங்கு
+ இ(ன்) + ய் +
அ மயங்கு – பகுதி
இ(ன்)
– இறந்தகாலஇடைநிலை;‘ன்’ புணர்ந்து கெட்டது. ய் – உடம்படுமெய்
அ - பெயரெச்சவிகுதி |
2 |
26 |
அ. குப்பையிலே ஆ. மூன்று நாளுக்கு |
2 |
27 |
சேரர்களின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன்’,
‘மலையமான்’போன்றவை குறிப்பிட்த்தக்கவை.
கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான்’
எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க
இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. |
2 |
28 |
அ. குறியீட்டியல் ஆ. நம்பிக்கை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
தமிழர்கள்
உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலை
யின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால்
வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய்,
இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி,
கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு
வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர்
மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப்
பரிவுடன் பரிமாறுவர். |
3 |
30 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
31 |
வினாக்கள் தரப்படவில்லை. மாதிரி வினா விடை: 1) எதை
சிறந்த அறமாக சங்க இலக்கியம் பேசுகிறது? - வாய்மை 2) நா
என்பதன் பொருள். யாது?. - நாக்கு 3)மனிதனை நா
எப்பொழுது தாழ்த்துகிறது? - பொய் பேசும் நா மனிதனை
தாழ்த்துகிறது |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆகியவையும்
ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|||||||||||||||
33 |
|
3 |
|||||||||||||||
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப்
பண்புத்தொகை பூங்கொடி- ஆடுமாடு -உம்மைத்தொகை |
3 |
||||||||||||||||||||||||
36 |
|
3 |
||||||||||||||||||||||||
37 |
அணி இலக்கணம்: தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று
பொருள் தருவது தீவக அணி சான்று: “சேந்தன
வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர்
-------------------------------------” பொருள்: அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள், திசைகள்,
அம்புகள், பறவைகள் ஆகியவை சிவந்தன அணிப்பொருத்தம்: ” சேந்தன” என்ற சொல்
செய்யுளின் பல இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது வகைகள்- முதல்நிலை, இடைநிலை, கடைநிலை |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) ü
மேகம்
மழையைப் பொழிகிறது ü
திருமால்
அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü
கார்காலத்தில்
முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü
இடையர்குலப்பெண்
கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü
தலைவன்
வருவது உறுதி எனக்கூறினாள் (அல்லது) ஆ) ü “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்
கம்பர். ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார். ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள
சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது. ü குளத்தில் பூத்திருந்த மலர்களைப்பற்றிக் கூறும்போது சந்த
சொற்களைச் சிறப்பாகக் கையாள்கிறார். ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில்
வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம். |
5 |
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு உறைமேல் முகவரி என்ற அமைப்பில்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு
வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில்
இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான செய்தி. நாமும் இது
போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில்
வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும். ஆ) 1.
தேவையான
உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்வேன். 2.
குடிநீரைச்
சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3.
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 5.
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி
நடப்பேன்.. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) கேட்கப்பட்ட
வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு, பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய
மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய
தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல்
மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன் தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின் தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான்
இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு
நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும்
கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. 39) அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை
வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. |
8 |
44 |
அ. முன்னுரை:-
இலக்கியங்களில் நிலவிய
அறிவியல் கோட்டுபாடுகளைும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு
ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம். பேரண்டம்:- பேரண்டப் பெருவெடிப்பு,
கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை.
இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல்
அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். விண்மீன்கள்:- ஒரு விண்மீனின் ஆயுள் கால
முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருக்கத்
தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே
சென்று அளவற்றதாகிறது என் விளக்கினார். கதிர்வீச்சும் துகளும்:- “சில நேரங்களில் உண்மையானது, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான்
கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். திரும்புதல்:- விண்வெளி ஓடம் பூமிக்கு
திரும்பிக் கொண்டிருந்தபோது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள்
போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே
பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர். முடிவுரை:- விண்வெளிப் பயணம் மேற்கொண்ட
எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துக்களைத்
தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே
இருக்கின்றன. (அல்லது) ஆ முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர்
,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்: கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின்
நிலை: அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக
வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை
காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ
ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு
துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு
வழங்குதல்: பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச்
சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. |
8 |
45 |
அ.
அரசுப்பொருட்காட்சி முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி
நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல
நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை
அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம்
போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற
அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். (அல்லது) ஆ முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø கல் தோன்றி மண் தோன்றா
காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø ஆங்கில மொழியை தாய்
மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø வீரமாமுனிவர் தமிழில்
முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட
மொழி. Ø இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø தமிழ் மூன்று சங்கங்களை
கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். |
8 |