7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 29-01-2024 முதல் 02-01-2024
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. புதுமை விளக்கு
1.கற்றல் நோக்கங்கள் :
பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
ஆழ்வார்கள் யார் தெரியுமா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.இதனைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார்.
பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.
நமது பாடப்பகுதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களுள் ஒவ்வொன்று தரப்பட்டுள்ளன.
நமது பாடப் பகுதியில் தரப்பட்ட பாடல்கள் அந்தாதி எனும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தவை.
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டிவரச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 710 - பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்