7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 3 rd WEEK

7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 19-02-2024 முதல் 23-02-2024     

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :    மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு                    

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. உண்மை ஒளி

1.கற்றல் நோக்கங்கள்   :

# படக்காட்சிகள்வழி கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • ஜென் துறவிகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • விரிவானப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப்பப்பண்பு ஆகும் . அப்பண்பைப் பெறுவதே சிறந்த அறிவாகும் . அத்தகைய அறிவுடைய சான்றோர்கள் துன்பப்படும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அவ்வாறு உதவும்போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. ஜென் தத்துவம் எந்த நாட்டில் தோன்றியது?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. குரு யாரிடம் கேள்வி கேட்டார்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. உண்மை ஒளி என்று ஜென் குரு கூறுவதை விளக்குக

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

ஜென் கதைகளில் பிறவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் உரையாடுதல்

12.கற்றல் விளைவு:

   Ø 703 - தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் /  சைகை மொழியில் வெளிப்படுத்தல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை