8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 19-02-2024 முதல் 23-02-2024
மாதம் : பிப்ரவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பால்மனம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ சிறுகதைகள்மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø நீங்கள் சிறுவயதில் யாருக்கெல்லாம் உதவி செய்தீர்கள்? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
குழந்தை மனம் எல்லா உயிர்களை யும் சமமா கக் கருதுவது; பிறர் துன்ப ம் கண்டு இரங்குவது; அதனை முயல்வது. குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். சமூகம், பெற்றோர்களின் தாக்கத்தால் குழந்தைகளின் மன இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
5.ஆசிரியர் செயல்பாடு :
# ஆசிரியர், பால்மனம் கதையை உரிய ஏற்ற குரல் ஏற்றத்தாழ்வுடன் கூறி விளக்குதல்
§ குழந்தைகள் வளர வளர , அவர்களது எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø பால்மனம் மாறாத பருவத்தில் அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர்தல்
Ø சிறுகதைகள்மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 805- எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் / நிகழ்வுகள்
பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி
வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி / சைகை மொழியில்)
திறன்கள்:
@ பேசுதல்,எழுதுதல்