இரண்டாம் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2024
இரண்டாம் திருப்புதல் தேர்வு-2024 ஜனவரி , செங்கல்பட்டு மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ. நாள்தொறும்-
நாடி |
1 |
2. |
ஆ. அ – 4
, ஆ – 3 , இ – 2 , ஈ - 1 |
1 |
3. |
ஈ. சருகும் , சண்டும் |
1 |
4. |
இ. தரலான்
, ஓம்பப் |
1 |
5. |
அ. க000 |
1 |
6. |
இ.
உருவகம் |
1 |
7. |
ஆ. சமூகப்பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். |
1 |
8. |
ஈ.
பாடல், கேட்டவர் |
1 |
9. |
ஈ. வானத்தையும், பேரொலியையும் |
1 |
10. |
ஈ. கேட்ட
, பாடல் |
1 |
11. |
ஈ.
இலா |
1 |
12. |
அ.
கண்ணதாசன் |
1 |
13. |
அ.
வண்டு |
1 |
14. |
அ.
த்ருவேன் , தட்டுவேன் |
1 |
15. |
ஆ.
காலக்கணிதம் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அரும்பு, போது , மலர் , வீ,
செம்மல் |
2 |
17 |
மறைத்து வைத்தல் எனும் துன்பத்தைத் தராதவர். |
2 |
18 |
அ.ஆ வினாக்களுக்குப்
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
19 |
#
வாசவர் – நறுமணப்பொருள் விற்பவர் #
பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர் #
உமணர் – உப்பு விற்பவர் |
2 |
20 |
வறுமையிலும்
நூல்களையே வாங்குபவர் |
2 |
21 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||||||||||||||
22 |
அ.
படகு ஆ. இறகு இ. வாள்
ஈ. அக்கா உ. மதி ஊ. குருதி |
2 |
||||||||||||
23 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி ü
சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது ( பொதுமொழி) |
2 |
||||||||||||
24 |
வினா 6 வகைப்படும் . அவை, 1.
அறிவினா 2.
அறியா
வினா 3.
ஐய
வினா 4.
கொளல்
வினா 5.
கொடை
வினா 6. ஏவல் வினா |
2 |
||||||||||||
25 |
அ. மீண்ட துயர் ஆ. தொலைவில் அமர்க |
2 |
||||||||||||
26 |
|
2 |
||||||||||||
27 |
ஒலித்து - ஒலி
+ த்+ த்+ உ; ஒலி - பகுதி;
த்- சந்தி;
த்- இறந்தகால
இடைநிலை; உ
- வினையெச்சவிகுதி |
2 |
||||||||||||
28 |
அ. அமைச்சரவை ஆ. புயல் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ)
செங்கோல் ஆ)
அமைச்சர் இ)
நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் காண்பது |
3 |
30 |
# செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.
# மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.
# பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும். |
3 |
31 |
அ) நாற்று-
நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று-
வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை-
தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் |
3 |
|
33 |
இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு”
கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு அனுபவிக்கும்
துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: கற்களைச் சுமந்தால்
மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல்
உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|
34 |
அ. சிறுதாம்பு
தொடுத்த பசலைக்கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், “கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னேவருகுவர்,
தாயர்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
|
3 |
||||||||||||||||||||||||
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “
போருழந் தெடுத்த ஆரெயில்
நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில்
அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை, ”மதுரை நகருக்குள் வரவேண்டாம்”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை
ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
ü கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே
கண்ணுறங்கு –விளித்தொடர் ü மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர் ü பாடினேன்
தாலாட்டு –வினைமுற்றுத்தொடர் ü மாம்பூவே - விளித்தொடர் ü ஆடி ஆடி
ஓய்ந்துறங்கு
– அடுக்குத்தொடர் |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
39 |
( மாதிரி கடிதங்கள்) அ) வாழ்த்து மடல் சேலம், 03-03-2021. அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா?
என அறிய ஆவல்.”
மரம் இயற்கையின் வரம்
“ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
மனமார வாழ்த்துகிறேன்.
நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ
. உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். ஆ) மின்வாரியஅலுவலருக்குக்
கடிதம் அனுப்புநர் ப. இளமுகில், 6, காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து
வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து
இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை
சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி!!
இப்படிக்கு, தங்கள்
பணிவுடைய,
ப.இளமுகில்.
நாள்:15-10-2022. ü |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42 |
அ) 1.
தேவையான
உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன். 2.
குடிநீரைச்
சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3.
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 5.
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி
நடப்பேன். ஆ) மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு
வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில்
இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான செய்தி. நாமும் இது
போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில்
வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும். |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||||||||
43 |
அ) முன்னுரை: ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து
வருகின்றன. நிகழ்கலையின்
வடிவங்கள்: பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும். இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல்
பாடல்களோடு நடைபெறும். சிறப்பும், பழைமையும் வாழ்வியல் நிகழ்வில்
பிரிக்க முடியாத, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை
மூலம் அறிய முடிகிறது. பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள்
எல்லாம் நம்முன்னோர் காலத்தில் இருந்த பழமை வாய்ந்த கலைகளாகும். குறைந்து வருவதற்கான
காரணங்கள்: நாகரிகத்தின் காரணமாகவும்,
கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், திரைத்துறை வளர்ச்சியினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன. வளர்த்தெடுக்க நாம்
செய்ய வேண்டுவன நம் இல்லங்களில் நடைபெறும்
விழாக்களில் நல்ல வாழ்வியல் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும்,
கலைஞரையும் பாராட்டுவோம். முடிவுரை: நாமும் நிகழ்கலைகளைக் கற்று,
கலைகளை அழியாமல் காப்போம். (அல்லது) ஆ) மனிதா
நீ எங்கே நிற்கிறாய்! என் மேல் அல்லவா நின்று கொண்டிருக்கிறாய்! உன்னைத்
தாங்குவதால் நான் பெருமையடைகிறேன். உன்னை மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்தையும்
தாங்கிப் பிடிக்கும் தன்மையினால் நான் உயர்வடைகின்றேன். மலையாக உயர்ந்து நிற்கும் போது நான் குறிஞ்சி என அழைக்கப்படுகிறேன்.
மரங்கள் அடர்ந்து, உயர்ந்து வளர்ந்து மலைக்கு அழகு
சேர்க்கின்றேன். தண்ணீரைச் சேகரித்து அணைக்குள் அடக்கி அனைவருக்கும்
உதவுகின்றேன். அருவியாய் குதித்தோட இடம் தருகிறேன். நீரினைத் தாங்கும் போது
குளிர்ச்சியடைகின்றேன். காடுகள் நிறைந்த என்னை முல்லை என அழைக்கிறார்கள். எல்லையில்லா
நிலப்பரப்பினால் மரங்கள் அடர்ந்த வனமாக காட்சியளிக்கின்றேன். விலங்குகள்,
உயிரினங்கள் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிய இடமளிக்கிறேன். வயல்கள் நிறைந்த நெல்லும், கரும்பும், வாழையும் விளையக் கூடிய என்னை மருதம் என்று அழைக்கிறார்கள். பச்சைப்
பசேல் எனப் போர்வைப் போர்த்தி எனக்கு பயிர்கள் அழகூட்டுகின்றன. காய்கறிகள்,
பயிரினங்கள் வளர நான் என்னையே கையளிக்கிறேன். உழவர்கள் என்னை வெட்டுகிறார்கள்; தோண்டுகிறார்கள்;
உடைக்கிறார்கள்; தூள் தூளாக்குகிறார்கள்;
சேறாக்குகிறார்கள். நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. அவர்கள்
என்னைத் துன்புறுத்தும் அளவுக்கு அதிகமாகவே நான் அவர்களுக்கு நன்மை செய்கிறேன். கடலைத் தாங்கி நிற்கும் என்னை நெய்தல் என அழைக்கிறார்கள். மீன் வளம்
தந்து மக்களை மகிழ்விக்கின்றேன். எண்ணற்ற கனிம வளங்களை மறைத்து வைத்திருக்கிறேன். உலக உயிர்கள் வாழ உவப்புடன்
என்னையே தருகின்றேன். நெகிழிகளால் என் வளத்தை
பாழ்படுத்தி விடாதீர்கள். தரிசாகப் போட்டு என்னை வெறுமையாக்கி விடாதீர்கள்.
உங்கள் வாழ்க்கை நலமாக அமைய என்னையே தருகின்றேன். உவப்புடன் வாழுங்கள். |
8 |
||||||
44 |
அ. கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. (அல்லது) ஆ முன்னுரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு ஒரு
முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு ஒரு முறை
பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர். அவரைப் பற்றி
இக்கட்டுரையில் காண்போம். தண்டும் கொடியுமாக: திருமந்திரத் திருவருள் பெறத்
தண்டும், கொடியுமாக இராபானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அதனாம் இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர்
இல்லத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டு "நான் உளக்கு
மட்டும் தான் அப்பந்திரத்தைச் சொல்வேன். நீ உறவுகளுடன் ஏன் வந்தாய்?"
என வினவினார். அதற்கு இராமானுசர், “தாங்கள்
கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு
திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார். ஆசிரியரின் கட்டளை: பூரணர் மூவணயும் வீட்டிற்குள்
அழைத்து "நான் கூறப்போகும் திருமந்திர மறை பொருள்கள் உங்கள் மூவருக்கு
மட்டுமே தெரிய வேண்டும். வேறு யாரிடமாவது இதைக் கூறினால்
அதுஆசிரியர்கட்டளையைமீறியதாகும். அப்படிநடந்தால் அதற்குத் தண்டனையாக நாகமே
கிட்டும்"என்றார். பின்னர் 'திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்;
திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்று பூரணர்
கூறிய திருமந்திரத்தை மூவரும் மூன்று முறை உரக்கச் சொன்மார்கள். திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்: திருக்கோட்டியூர் சௌம்ய நாராயணன்
திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுசர் நின்று கொண்டு, உரத்த குரலில்
போத் தொடங்கினார். கிடைப்பதற்கரிய பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச்
சொல்லுங்கள்”. அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக்
குரலில் மூன்று முறை கூறினார்கள். குருவின் சொல்லை மீறுதல் குருவின் (பூரணரின்) சொல்லை
மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின்
திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள்
பிறவிப்பிணி நீங்கி பெரும் பேற பெற்றிட நான் மட்டும் நரகத்தை அடைவேன்” என்று விளக்கமளித்தார். குருவின் ஆசி இராமானுசரின் பாந்த மனத்தைக்
கண்ட குரு பூரணர். அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை
வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகன் சௌம்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார். முடிவுரை: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய
மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது
பிறருக்காக நாகமும் செல்ல முன்வந்த பெருமகனார் |
8 |
||||||
45 |
அ. 1. சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை: சான்றோர்
வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின்
தொன்மை: Ø தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø கல் தோன்றி மண் தோன்றா
காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின்
தமிழ்ப்பணி: Ø ஆங்கில மொழியை தாய்
மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø வீரமாமுனிவர் தமிழில்
முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின்
சிறப்புகள்: Ø தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட
மொழி. Ø இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø தமிழ் மூன்று சங்கங்களை
கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர்
வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். (அல்லது) ஆ .போதை
இல்லாப் புது உலகைப் படைப்போம்
முன்னுரை உலக நாகரிகம் வளர வளர மனித
வாழ்க்கை முறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாகரிகம் வளர்ச்சி பாதையில்
செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச் செல்கின்றது. அதில்
முக்கியமான ஒன்று தான் போதைப் பாவனை. உலகம் முழுவதும் போதைப் பொருட்களின்
பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. மது,
போதைவஸ்து, சிகரட் பாவனை போன்ற தீய
பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயர் வலிமை பெற்றுள்ளமை
வேதனைக்குரியதாகும். போதைப் பொருட்கள்
என்பவை உடல், உளப்
பாதிப்புக்களை ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத்
தோற்றுவிப்பதுமான போதைக்காக நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும்
பொருட்கள் போதைப் பொருட்கள் எனப்படும். உதாரணமாக அபின், கஞ்சா,
ஹெரோயின், சாராயம், சிகரட்,
பீடி, கசிப்பு, சுருட்டு
போன்றவற்றைக் கூறலாம். போதைப் பொருளும்
சமுதாயமும் சமுதாயத்தில் மாணவர்களும்,
படித்தவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். இத்தகைய நல்ல
சமூகத்துக்குச் சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும்
சவாலாக உள்ளது. போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள் இரையாவதன் மூலம் அவர்கள்
எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக
மாறிவருகிறது. போதைப் பாவனையால் ஏற்படும் சமுதாய பிரச்சனைகள் போதைக்கு
அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை
எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல்
போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம்
மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும்
ஈடுபடுகின்றனர். போதை என்னும் ஆயுதம் ஒரு தேசத்தை அல்லது ஓர் சமுதாயத்தை அல்லது தனிநபரை திட்டமிட்டு
நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும். போதை எனும் ஆயுதம்
மனித வாழ்க்கையை மட்டுமல்லாது தனிமனித கௌரவம், அந்தஸ்து, பணம் போன்றவற்றை
அழிப்பது மட்டுமல்லாது உயிரையும் காவு கொள்கின்றது. எனவே இதனை ஒவ்வொரு
மனிதர்களும் உணர்ந்து தமது உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து தீய வழிகளில்
செல்லாமலும் போதைப் பாவனை தொடர்பாக விழிப்புடனும் இருத்தல் வேண்டும். போதைப்பொருள்
பாவனையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் சளி, இருமல்
போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும்,
கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு
ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள
முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற
பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும்,
கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது. முடிவுரை உலக அளவில் போதைப் பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும்
பின்னடைவும், சீர்கேடும், சிதைவும்
அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன்
செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம். போதைப் பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை
உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்! |
8 |