6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-03-2024 முதல் 08-03-2024
மாதம் : மார்ச்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஆசிய ஜோதி
1.கற்றல் நோக்கங்கள் :
@ பிற உயிர்களைத் தம்முயிர்போல் எண்ணுதல்
@ பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் வாழ்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø கவிமணி என அழைக்கப்பட்டவர் யார்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுட் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும், அவ்வாறே செய்யுட் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
உயிர்களை அழிப்பது கூடாது
நேர்மையும், இரக்ககுணமும் வேண்டும்
பலியிடுதல் கூடாது
நன்மையும், தீமையும் ஒருவரை விட்டுச் செல்லாது
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
புத்தரது நற்கருத்துகளைத் தொகுத்துவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 609- மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.