7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - MARCH 1 ST WEEK

 7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 04-03-2024 முதல் 08-03-2024        

மாதம்        மார்ச்

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. மலைப்பொழிவு   2. தன்னை அறிதல்

1.கற்றல் நோக்கங்கள்   :

   @ பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயனபடுத்தும் திறன்பெறுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø பைபிள் எம்மதத்தின் புனித நூல்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுட் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும், அவ்வாறே செய்யுட் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • சாந்தம்

  • சாதி சமய வேறுபாடு

  • இரக்கம்

  • தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது. நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1 .காக்கை, குயில் குறித்து பாடலில் கூறப்படுவது யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. மலைப்பொழிவு பாடப்பகுதியில் இருந்து நீங்கள் அறியும் கருத்துகள் யாவை?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பைபிளில் சொல்லப்பட்ட நற்ல்கருத்துகளைத் தொகுத்துவரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  Ø 702 ஒன்றைப் படிக்கும்போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில்

 வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும், கருத்துகளைத் தமது

 சொந்த கருத்துகளுடன் அனுபவங் களுடனும்  ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன்

 படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை