அரசுப்பொதுத்தேர்வு - மார்ச் 2024
பத்தாம் வகுப்பு - தமிழ்
முகப்புத்தாள் மற்றும் மதிப்பெண் கணக்கீட்டுத்தாள்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம்வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் விரைவாகத் தயாராகி வரும் நிலையில், தமிழ்ப்பொழில் வலைதளமானது , முக்கிய வினா வங்கிகள், வினாத்தாள்கள், கற்றல் கட்டகங்கள் மற்றும் முக்கிய வினாக்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி, பொது தேர்வுத் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு அதனுடைய முகப்புத்தாள் எவ்வாறு இருக்கும்? மதிப்பெண் கணக்கீடு எவ்வாறு செய்வார்கள்?என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிகுதியாக இருக்கும் என்பது உறுதி. அதற்குப் பதிலளிக்கும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்துக்கான முகப்புத்தாளும், அதன் பின் தரப்படும் மதிப்பெண் கணக்கீட்டுத்தாளும் மாதிரிக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளன. அதற்கான விளக்கக் காணொளி இதோ ....
நன்றி: தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள்