SSLC PUBLIC EXAM 2024 MODEL TOP SHEET AND MARK TALLY SHEET TAMIL

அரசுப்பொதுத்தேர்வு - மார்ச் 2024

பத்தாம் வகுப்பு - தமிழ்

முகப்புத்தாள் மற்றும் மதிப்பெண் கணக்கீட்டுத்தாள் 

   அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம்வகுப்பு அரசுப்  பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் விரைவாகத் தயாராகி வரும் நிலையில், தமிழ்ப்பொழில் வலைதளமானது , முக்கிய வினா வங்கிகள், வினாத்தாள்கள், கற்றல் கட்டகங்கள் மற்றும் முக்கிய வினாக்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி, பொது தேர்வுத் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. 
   பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு அதனுடைய முகப்புத்தாள் எவ்வாறு இருக்கும்? மதிப்பெண் கணக்கீடு எவ்வாறு செய்வார்கள்?என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிகுதியாக இருக்கும் என்பது உறுதி. அதற்குப் பதிலளிக்கும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்துக்கான முகப்புத்தாளும், அதன் பின் தரப்படும் மதிப்பெண் கணக்கீட்டுத்தாளும் மாதிரிக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளன. வரவிருக்கின்ற மூன்றாம் திருப்புதல் தேர்விலோ,  அல்லது ஆசிரியர் நடத்தக்கூடிய மாதிரி பொதுத்தேர்வுகளிலோ இந்த முகப்புத்தாளையும் கணக்கீட்டுத் தாளையும் பயன்படுத்தும் போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் எண்ணம் விரைவு படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
   மேலும் மற்ற பாடங்களுக்கும் முகப்புத்தாளையும், மதிப்பெண் கணக்கீட்டுத்தாளையும் பயன்படுத்தும் வகையில் தாட்கள் இணைக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.

தமிழ் பாடத்துக்கான முகப்புத்தாளையும், கணக்கீட்டுத்தாளையும் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.



You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை