10 TH STD TAMIL 5 MARK QUESTION AND ANSWER KADITHANGAL

10.ஆம் வகுப்பு - தமிழ் 

கடிதம் எழுதுதல் 13 - கடிதங்களின் தொகுப்பு

1) நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி, உங்கள் நண்பரையும் நூலினைப் படிக்குமாறு பரிந்துரைத்து நண்பருக்குக் கடிதம் எழுதுக.

நண்பருக்குக் கடிதம்

எண்.10,வள்ளுவர் தெரு,

               மயிலாடுதுறை,

22-09-2020

அன்புள்ள நண்பன் தமிழ் மாறனுக்கு,

    இங்கு நான் எனது பெற்றோருடன் நலமாக இருக்கிறேன். அங்கு நீயும் உனது பெற்றோருடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.உலகப் பொதுமறை என்று அனைவராலும் போற்றப் படுகின்ற திருக்குறளைத் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் படித்து இருக்க வேண்டும். தினமும் ஓர் அதிகாரம் என்ற அளவில் நான் படித்து வருகிறேன். நீயும் அவ்வாறே படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பொருள்களை உடையது.

       உலகிலேயே அதிகளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.இந்நூலில் எந்த சாதியோ, மதமோ, எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை.. வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும் திருக்குறள் பயன் படாத இடமே இல்லை என்று கூறலாம். 7 சீர்களில் உலக நீதியைச் சொல்லும் திருக்குறளை நீ கண்டிப்பாகப் படிக்க வேண்டும். படிப்பதோடு மட்டுமல்லாமல், திருக்குறள் வழியில் நாம் பயணிக்க வேண்டும். திருக்குறளைப் படித்து விட்டு உன்னுடைய கருத்துக்களை எனக்கு எழுதுக.

                                                             இப்படிக்கு,

                                                         உன் அன்பு நண்பன்

                                                             முத்தழகன் .

உறைமேல் முகவரி:

.மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

                                                           7 பெரிய தெரு,

                                                              மயிலை,

                                                             23-9-2020.

அன்புள்ள நண்பா,

      நலம். நலம் அறிய ஆவல்.மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழ்களில் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.மரங்களின் பயன்களையும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக்கூறி, இருக்கிறாய்.

     நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். உயிர்வளியைக் காசுகொடுத்து வாங்கும் நிலை வராதபடி,நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்”,“மரங்களை அழிக்காதேஎன்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆக்கச் செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றைச் சுவாசிப்போம்.

                                                                இப்படிக்கு

                                                               உன் தோழன்

                                                                 .சங்கர்

உறைமேல் முகவரி

3) உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

முறையீட்டுக் கடிதம்

அனுப்புநர்:

     .திருக்குமரன்,

     25 வள்ளல் தெரு,

     அரக்கோணம்-1

பெறுநர்:       

     உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

     உணவுப் பாதுகாப்பு ஆணையம்,

     அரக்கோணம்-1

மதிப்பிற்குரிய அய்யா,

     வணக்கம். பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு

             வேண்டுதல் தொடர்பாக.

    நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு அருகிலிருந்த குறிஞ்சி உணவுவிடுதியில் மதிய உணவு உண்பதற்காகச் சென்றேன். புலவுச்சோறு விலை ரூபாய் 120 எனப் பலகையில் எழுதி வைத்திருந்தனர். நானும்  புலவுச்சோறு சாப்பிட்டுவிட்டு, உணவுக்கான தொகையைக் காசாளரிடம் செலுத்தினால், அவர் புலவுச்சோறு விலை ரூபாய் 150 எனக் கூறினார். மேலும் பல விளக்கங்களைக் கொடுத்து ரூபாய் 150 வாங்கிக்கொண்டார்.

   மேலும், உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே வாந்தி பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தேன்.  கண் விழித்து பார்த்தபோது  மருத்துவமனையில் எனக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!

 

                                                              இப்படிக்கு

                                                         தங்கள் உண்மையுள்ள      

                                                             .திருக்குமரன்

 

இடம்:அரக்கோணம்,

நாள்:24-09-2020.

                                                                                                                                           

உறைமேல் முகவரி:

 4)புதிதாக திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக.

தங்கைக்குக் கடிதம்

15,எழில் வீதி,

காஞ்சி-1,

24-09-2020.

அன்புள்ள தங்கைக்கு,

      உன் அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நான் இங்கு நலமாக உள்ளேன். உன் நலத்தையும், அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி அனைவருடைய  நலத்தையும் அறிய அவா.நீ எவ்வாறு படிக்கிறாய்? உன்னுடைய கூடைப்பந்து பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது?.திறன்பேசி அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார். திறன்பேசியினால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. படிப்பிற்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது,இலவசஇணைப்பு போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும் உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி,கல்வியில் உயர்நிலையை அடைய முயலவும். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த மாதம் விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம்.

                                                            இப்படிக்கு

                                                        உன் அன்பு அண்ணன்

                                                           .தமிழ்நிலவன்.

 உறைமேல் முகவரி:

 

 

5) பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்`- குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதைச் செயல்படுத்தத் தலைமை  ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

தலைமை ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     நா.கொற்றவன்,

     மாணவர் தலைவர்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

     தணிகைப் போளூர்,

     இராணிப்பேட்டை மாவட்டம்.

பெறுநர்

     உயர்திரு.தலைமையாசிரியர் அவர்கள்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

     தணிகை போளூர்,

     இராணிப்பேட்டை மாவட்டம்.

 பெருமதிப்பிற்குரிய ஐயா,

      பொருள்:  பள்ளி தூய்மைச் செயல்திட்டம் உருவாக்கம் தொடர்பாக.

         வணக்கம். பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாகச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.திட்டத்தின் செயல்பாடுகளாவன:

     )பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்

     )பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

     )பள்ளி குடிநீர்த்தொட்டியை,குளோரின் கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.

     )வகுப்பறைகள் ஆய்வகங்கள் நூலகம் ஆகியவற்றை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும்.

     )பள்ளிக் கட்டடங்களை பழுதுபார்த்து வெள்ளை அடிக்க வேண்டும்.

     )மாணவர்களிடையே சுத்தம்,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்துதல்.

      இத்திட்டங்களை மாணவர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதற்குத் தாங்களும், ஆசிரியர்களும் அனுமதி அளிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                          இப்படிக்கு,

                                                  தங்கள் உண்மையுள்ள மாணவன்,

                                                          நா.கொற்றவன்

இடம்: அரக்கோணம்

நாள் : 18-05-2024

 உறைமேல் முகவரி:

6) உங்கள் பள்ளி நூலகத்திற்குத் திருக்குறள் நூல் பத்துப்படிகள் அனுப்புமாறு குறிஞ்சிப் பதிப்பகத்திற்குக்  கடிதம் எழுதுக.

பதிப்பகத்திற்குக்  கடிதம்

அனுப்புநர்:

     சே.கயற்கண்ணன்,

     பத்தாம் வகுப்பு,

     அரசினர் மேல்நிலைப் பள்ளி,

     திருச்சி-1

பெறுநர்:

     குறிஞ்சி பதிப்பகத்தார்,

     மகாலட்சுமி தெரு,

     தீந்தமிழ் நகர்,

     சென்னை-17.

ஐயா,

    பொருள்: திருக்குறள் பிரதிகள் 10 படிகள் அனுப்பி வைத்தல் தொடர்பாக.

    வணக்கம்.எங்கள் பள்ளிக்குத் திருக்குறள் நூல் 10 பிரதிகள் தேவைப்படுகின்றன. அவற்றிற்குரிய தொகையினை பணவிடைத்தாள் மூலம் அனுப்பியுள்ளேன்.கீழேகுறிப்பிட்ட எனது முகவரிக்குப் பதிவஞ்சல் அஞ்சல் மூலமாக, தாமதமின்றி நூல்களை அனுப்பி வைக்குமாறு, தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                             இங்கனம்,

                                                         தங்கள் உண்மையுள்ள,

                                                           சே.கயற்கண்ணன்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

  

     சே.கயற்கண்ணன்,

     பத்தாம் வகுப்பு,

     அரசினர் மேல்நிலைப்பள்ளி,

     திருச்சி-1

 

இடம்: திருச்சி,

நாள்: 25-09-2024

உறைமேல் முகவரி:

7) நீங்கள் சென்று வந்த அரசுப் பொருட்காட்சியின் சிறப்புகளை விளக்கி நண்பனுக்குக் கடிதம் ஒன்று எழுதுக.

நண்பனுக்குக் கடிதம்


                                                             10,
தமிழ் வீதி,

                                                           வள்ளுவன் நகர்,

                                                              காஞ்சி-1.

அன்புள்ள நண்பா,                                                               

         நலம் நலம் அறிய ஆவல். சென்ற வாரம் வேலூர் மாநகரில் அமைக்கப் பட்டிருந்த அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன்.அங்கு நான்கண்ட கண்கொள்ளாக் கட்சிகளை உன்னிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது பெற்றோருடன் சென்றது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.அங்கே அரசின் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன அந்த அரங்குகளில், பல்வேறு துறைசார்ந்த செய்திகளும்,அத்துறையின் சாதனைகளும் விளக்கப்பட்டு இருந்தன.

   அதோடன்றி, பொருட்காட்சியில் தின்பண்டங்கள் விற்பதற்கென்று நிறைய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர்களைக் கவரும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் விற்கப்பட்டன. இளம் வயதினருக்குக்கு மிகவும் பொழுதுபோக்காகவும் பயனுள்ளதாகவும் பொருட்காட்சி அமைந்திருந்தது. நீயும் வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை பொருட்காட்சிக்குச் சென்று,உனது அனுபவங்களை எனக்குக்கடிதமாக எழுதி அனுப்பவேண்டும்.

                                                              இப்படிக்கு,

                                                           உன் உயிர் நண்பன்

                                                             .கனியமுதன்.

உறைமேல் முகவரி:

 8) உங்கள் பள்ளியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவிற்கு, நிகழ்கலை வல்லுநர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்துக் கடிதம் எழுதுக.

நிகழ்கலை வல்லுநருக்குக் கடிதம்

அனுப்புநர்

     மா.செந்தமிழ்ச்செல்வி,

     அரசினர் உயர்நிலைப்பள்ளி,

     வள்ளுவன் தமிழ் இலக்கிய மன்றம்,

     சேலம்-1.

பெறுநர்

     திரு. காளியப்பன் அவர்கள்,

     தெருக்கூத்துக் கலைஞர்,

     15,மூன்றாவது குறுக்குத் தெரு,

     காமராஜர் நகர்,

     மதுரை-9.

பெருந்தகையீர்,

     வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பள்ளியில் விடுதலை நாள் விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம்.நிகழ்கலையின் பெருமைகளை உணர்ந்து,நிகழ்கலைக் கலைஞர்களைப் போற்றும் வண்ணம் ஒவ்வோர்ஆண்டும்,ஒவ்வொரு வகையான நிகழ்கலையை நடத்துகின்றோம்.இந்த ஆண்டு தெருக்கூத்தை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.தங்கள் மிகச்சிறந்ததெருக்கூத்து கலைஞர் என்பதையும், இக்கலையை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காகப் பலமுயற்சிகளைஎடுத்து வருவதையும் செய்தித்தாள் வாயிலாக அறிந்து கொண்டோம். எனவே இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று வள்ளுவன் தமிழிலக்கிய மன்றத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நன்றி!!

                                                            இப்படிக்கு,

                                                         தங்கள் பணிவுடைய

                                                        மா.செந்தமிழ் செல்வி.

இடம்: சேலம்

நாள் : 18-05-2024

 உறைமேல் முகவரி:

 9) உங்கள் தெருவில்  பழுதடைந்துள்ள  மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     வா.நிறைமதி,

     23 வள்ளலார் சாலை,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

பெறுநர்:

     உயர்திரு மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,

     செயற்பொறியாளர் அலுவலகம்,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

மதிப்பிற்குரிய அய்யா

  பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் தொடர்பாக.

    வணக்கம்.வள்ளலார் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.  எங்கும் இருளாக உள்ளது.சாலையில் நடந்து செல்பவர்கள் பள்ளம்,மேடு தெரியாமல் இடறி விழுகின்றனர்.  இருளைப் பயன்படுத்தி, சில திருட்டுச் சம்பவங்களும் நிகழ்கின்றன. நகராட்சியில் பலமுறை எங்கள் இன்னல்களைக் கூறியும் விளக்குகள் மாற்றப்படவில்லை.

    எங்கள் தெருவில் பழுதடைந்துள்ள விளக்குகளை மாற்றித்தர ஆவன செய்யும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                            இப்படிக்கு,

                                                       (தெரு மக்கள் சார்பாக)

                                                           வா.நிறைமதி

இடம்:பாரதிதாசன் நகர்.

நாள்:29-09-2020.

உறைமேல் முகவரி:

 10) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்` உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்` என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்:

    கா.தமிழ்மாறன்,

    16,பெரிய கடைத்தெரு,

    தஞ்சாவூர்.

பெறுநர்:

    ஆசிரியர் அவர்கள்,

    தமிழருவி நாளிதழ்,

    மதுரை -1.

 

மதிப்பிற்குரிய அய்யா,

  பொருள்: பொங்கல் சிறப்பு மலரில் கட்டுரை வெளியிட வேண்டுதல் தொடர்பாக.

      வணக்கம்.தங்கள் நாளிதழின் சார்பாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளேன். அதைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் வெளி வர ஆவன செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.                

நன்றி!!

                                                           இப்படிக்கு,

                                                        தங்கள் பணிவுடைய

                                                          கா.தமிழ்மாறன்.

இடம்: தஞ்சாவூர்

நாள் : 18-05-2024

 

உறைமேல் முகவரி:

 11) பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த தையும் அதற்காகப் பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

                                                            8,சோழன்தெரு,

                                                              செங்குன்றம்.

                                                             22-09-2020.

அன்புள்ள மாமாவுக்கு,

     தமிழ்த்தென்றல் எழுதும் கடிதம். நான் இங்கு நலம். தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் நலம் அறிய ஆவல்.சென்ற வாரம் எங்களது பள்ளித் திடலில் பணப்பை ஒன்று கிடைத்தது. அதை என்னுடைய தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.அதைத் திறந்து பார்த்தபோது, தான் அதில் பெருந்தொகையான பணம் இருப்பது தெரிய வந்தது. அதை எனது தலைமையாசிரியர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்குமாறு செய்தேன். அதற்காக என்னை எனது தலைமை ஆசிரியரும், என்னுடைய ஆசிரியர்களும் என்னைப் பாராட்டி,இறைவணக்கக் கூட்டத்தில்,சிறப்பு செய்தனர்.இந்த செய்தி, நாளிதழிலும் வெளி வந்து என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. எனவே இச்செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

                                                              இப்படிக்கு,

                                                          தங்கள் அன்புடைய,

                                                           பெ.தமிழ் தென்றல்.

 உறைமேல் முகவரி:

 

 

12) புதிதாக இருசக்கர ஊர்தி வாங்கி, ஓட்டுனர்  உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு முக்கியச் சாலை விதிகளை விளக்கி, அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

                                                           6,சோலை நகர்,

                                                             கோவில்பட்டி.

                                                             29-09-2020.

அன்புள்ள அண்ணனுக்கு,

     தம்பி எழுதும் மடல். வணக்கம். தாங்கள் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டம் ஒன்று எங்கள் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது. அக்கூட்டத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் கூறினார்கள்.அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இக்கடிதத்தில் அவற்றை எழுதியுள்ளேன்.

 1) தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டக் கூடாது.

 2) சாலையின் வகைகள், மைல்கற்கள் விவரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 3) போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும், போக்குவரத்துக் காவலர்களின் சாலை

  உத்தரவுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

4) தேவை ஏற்படும்போது வேகத்தை குறைத்து ,இதரவாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.

5) மருத்துவமனை, பள்ளிகள் அருகே செல்லும்போது வேகத்தைக் குறைக்க வேண்டும்.

     மேற்கண்ட விதிகளைக் கடைப்பிடித்தால் விபத்துகள் நடைபெறாமல் காத்துக்கொள்ள முடியும். இவ் விதிகளை உங்கள் நண்பர்களும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினால், நலமாக இருக்கும் .தங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.

                                                          என்றும் அன்புடன்,

                                                           . கமலக்கண்ணன்.

 உறைமேல் முகவரி:

 

13) உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும் புயலில், சாய்ந்த மரங்களை வெட்டி, பழுதுபட்ட சாலைகளைச் சீரமைத்துத் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.

மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     .கயல்விழி,

     3 பெரிய தெரு,

     திருநெல்வேலி-2

பெறுநர்:             

     மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

     மாநகராட்சி அலுவலகம்,

     திருநெல்வேலி-2

மதிப்பிற்குரிய அய்யா,

  பொருள்: புயலால் விழுந்த மரங்களை அகற்றக் கோருதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பகுதியில் கடந்த 10ஆம்தேதி புதன்கிழமை வீசிய புயலால்,ஏராளமான மரங்கள் வேரோடு விழுந்துள்ளன.அதனால்,சாலைகளில் ஏற்பட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும்,போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நிலை முடங்கியுள்ளது.எங்கள் பகுதியில் மூன்று பள்ளிகளும்,ஒரு கல்லூரியும்,ஒரு குழந்தைகள் மருத்துவமனையும் உள்ளது.அதனால்,தாங்கள் அருள்கூர்ந்து எங்கள் பகுதியில் உள்ள மரங்களை விரைந்து அகற்றித்தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                               இங்கனம்,

                                                          தங்கள் உண்மையுள்ள

                                                              .கயல்விழி.

இடம்: திருநெல்வேலி,

நாள்:29-09-2020.        

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

 

 

 

 

 

    

                                                                 

 

 

 

     

 


You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை