இயல்-1
1) தமிழின் சொல்வளம் பற்றியும், தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ்மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பை
உருவாக்குக.
முன்னுரை:
என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில்
கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை
நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று
எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம்
செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்
வளம்.
தமிழின் சொல்வளம் குறித்து கால்டுவெல்
கருத்து:
"தமிழல்லாத திராவிட
மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட்
பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத்
தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக்
கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய
பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள என்கிறார்
கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
தமிழரின் சொல்லாக்க அறிவு:
ஒரு மொழி பொதுமக்களாலும்,
அதன் இலக்கியம் புல மக்களாலும் அமைய பெறும். தமிழ்ப் பொதுமக்கள்
உயர்ந்த பகுத்தறிவடையவர், எத்துணையோ ஆராய்ச்சி நடந்து வரும்
இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்று கடன் கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும்
இலையைக் குறிக்க என ஒரே சொல் உள்ளது. ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில்
இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப் பொது மக்களைப் போல
வன்மை மென்மை பற்றிய தாள், இலை, தோகை,
எனப் ஓலை பாகுபாடு செய்தாரில்லை.
ஆழ்ந்த சொல்லாக்கத்திற்கான சில சான்றுகள்:
தவரத்தின்
அடி, இலை, காய், பூ, கனி எனப் பலவற்றிற்கும் அவற்றைக் குறிப்பிட, மிகத் துல்லியமாகச்
சொற்களை உருவாக்கியுள்ளனர் தமிழர்கள்.
அடி வகைகள்:
தாள் , தண்டு,
கோல், தூறு, தட்டு
,கழி, கழை, அடி முதலியன ஒரு
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களாகும். இவை அடிப்பகுதியின்
ஒவ்வொரு பகுதிக்கேற்ப வகைப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பூவின் நிலைகள்:
ü
அரும்பு – பூவின் தோற்ற
நிலை
ü
போது – பூ விரியத்தொடங்கும்
நிலை
ü
மலர் – பூவின் மலர்ந்த
நிலை
ü
வீ – மரஞ்செடியினின்று
விழுந்த நிலை
ü
செம்மல்- பூ வாடின நிலை
புதிய சொல்லாக்கத்தின் தேவைகள்:
ü சொல்லாக்கம் காரணமாகத்
தமிழ்மொழியின் ஒலியமைப்பிலும்,
சொல்லமைப்பிலும், பொருள் புலப்பாட்டிலும்
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, சொல்லாக்கத்தினால் உருவாக்கப்
பட்டுள்ள சொற்கள், மரபு வழிப்பட்ட தமிழ் இலக்கணத்தில்
மாற்றங்களைக் கோருகின்றன.
ü மொழியியலின் பிற
பிரிவுகளைக் காட்டிலும் இலக்கணத்துடன் நெருங்கிய தொடர்புடையது சொல்லகம்
சொல்லாக்கம் மாபிலக்கணத்துடன் வேறுபடும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கண
விதிகளை வகுக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இது பொழியியல் அடிப்படையில்
சொல்லாக்கம் ஏற்படுத்தியுள்ள முக்கியத் தேவையாகும்.
ü சொல்லாக்க அறிவானது
அத்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவதுடன், மொழியின்
வளர்ச்சிக்கும் ஆதாரமாகும்.
பல்துறை சார்ந்த கலைச்சொற்கள் தமிழில்
தேவை:
தாய்மொழியில்
பயிற்றுவிக்காத நாடுகளில்,
நூற்றாண்டுகளில் தாய்மொழியானது வீட்டு மொழியாகச் சுருங்கி
வழக்கொழிந்து விடும் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தமிழைப் பொறுத்தவனை அறியியல்,
மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வித்
துறைகளில் சாத்திப்பற்ற நிலை உள்ளது. தமிழில் உயர் கல்விக்கான பாடநூல்கள் இல்லை.
அப்பாடநூல்களை எழுதுவதற்கான சொற்களஞ்சியமும்
இல்லை என்று சிவர் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தடைகளை
அகற்றி, உயர்கல்வியைத் தமிழில் கற்பிப்பதற்கான நிலையை ஏற்படுத்திட துறைதோறும்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொல்வாக்கங்கள் அப்படையாக விளங்குகின்றன.
முடிவுரை:
எனவே, மிகப்
பழமையான தமிழ் மொழியானது.எதிர்காலத்தில் எதிர்கொள்ளலிருக்கும் பிரச்சனைகளைத்
தகர்த்து, காலத்துக் கேற்றவாறு சிலமைத்திறத்துடன் விளங்க
வேண்டுமெனில், சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து இடைவிடாமல்
நடைபெற வேண்டிய அவசியம் என்று பாவாணர் தமது புதிய சொல்லாக்க உரையில்
குறிப்பிடுகிறார்.
இயல்-3
2. முன்னுரை - தமிழர்
பண்பாட்டில் விருந்து- தமிழர் உணவு முறை - விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின்
மகுடம்- முடிவுரை குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை வரைக
தலைப்பு : தமிழரின்
விருந்தோம்பல்
முன்னுரை:
தன் வீட்டுக்கு வரும்
விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இருக்க இடமும்
கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். தமிழர் பண்பாட்டில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது
விருந்தோம்பல்.சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலனைப் பிரிந்த
துயரைவிட விருந்தோம்ப இயலாததால் ஏற்பட்ட துயர் மிகவும் வருத்துவதாகக் கூறுகிறாள்.
தமிழர் விருந்து குறித்துக்கூறும் தமிழ் இலக்கியங்கள்:
ü
உறவினர்
வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாதவர்களே விருந்தினர். "விருந்தே
புதுமை" என்கிறது தொல்காப்பியம். விருந்தோம்பல் எனும் தனி அதிகாரத்தையே கொண்டுள்ளது
திருக்குறள்.
ü
"உண்டாலம்ம
இவ்வுலகம்" என்கிறது புறநானூறு.
ü
"அல்லில்
ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்று நற்றிணை கூறுகிறது.
ü
விருந்தினரை
ஏழடிவரைநடந்து வழியனுப்ப வேண்டும் என்பதை,
"காலின் ஏழடி பின்சென்று.." என்ற பாடலில் கூறுகிறது
பொருநராற்றுப்படை என்றெல்லாம்
இலக்கியங்கள் விருந்தோம்பலைப்பற்றி உரைக்கின்றன.
தமிழர் பண்பாட்டில் விருந்து :
இல்லறம் புரிவது
விருந்தோம்பல் செய்யும் பொருட்டே. முகம் வேறுபடாமல் முக மலர்ச்சியோடு விருந்தினரைத்
தமிழர் வரவேற்று உபசரிப்பர். தனித்து உண்ணாமையே தமிழரின் விருந்தோம்பல் பண்பின்
அடிப்படை.நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிட்டு,அவர்கள் திரும்பிச் செல்லும்போது ஏழடி பின்சென்று வழியனுப்பி வைப்பர்.
தமிழர் உணவு முறை:
ஐவகை நிலங்களுக்கேற்ப
தமிழர்கள் விருந்து அளித்தனர். நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன்
கறியும் பிறவும் கொடுத்தனர்.தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த
இடமுண்டு.ஊறுகாய்,
இனிப்பு, காய்கறி, கீரை,
கூட்டு, முருங்கை சாம்பார், வேப்பம்பூ ரசம் பாயாசம், அப்பளம் போன்றவற்றை அவ்வாழை
இலையில் வைத்து விருந்து போற்றினர்.
விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின் மகுடம்:
மருந்தே
ஆயினும் விருந்தோடு உண்டனர் தமிழர். திருமணத்தை உறுதி செய்தல், திருமணம்,
வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்ற இல்ல விழாக்களில் மிகுதியான விருந்தினரை வரவேற்று
உணவளித்து மகிழ்ந்தனர்.
முடிவுரை:
காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற
விழாக்கள் திருமணம் கூடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று
சில இடங்களில் விருந்தினரை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்புவதுவரை
திருமண ஏற்பாட்டாளர்களே செய்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். விருந்தோம்பலின்
உன்னதத்தை உணர்த்தும் பாடங்கள் மற்றும் கதைகளைப் பள்ளி பாடநூல்களில் இடம்பெறச்
செய்யவேண்டும்
இயல் – 4
3. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு
தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும்
வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச்
"செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்" பற்றி ஒரு கட்டுரை
எழுதுக.
விடை:
முன்னுரை:
எதிர்காலத்தில் ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே
விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளும். வெறும் வணிகத்துடன் நின்றுவிடாது. மனிதர்கள்
செய்யும் வேலைகள் அனைத்தும் இன்றைய தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவால் எளிமையாகும். செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பயன்களையும் அதனால் எதிர்கால
வெளிப்பாடுகள் பற்றியும்பின்வருமாறு காணலாம்.
செயற்கை நுண்ணறிவு:
எந்த ஒரு புதிய தொழில்
நுட்பமும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை புதிய தொழில் நுட்பத்தினால் எரி பொருள்
மிச்சப்படும் பயண நேரம் குறையும், ஊர்திகளை செயற்கை
நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும். கல்வித்துறையிலும் இத்தொழில் நுட்பம்
பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம் மனிதர்களிடம் போட்டியிட்டாலும்
வியப்பதற்கில்லை.
வயதானவர்களுக்கு உதவி
செய்யும், உற்ற தோழனாகவும் எதிர்காலத்தில் ரோபாவின்
செயல்பாடுகள் இருக்கும். விடுதிகள், வங்கிகள் மற்றும்
அலுவலகங்கள் ஆகியனவற்றில் மனிதன் அளிக்கும் சேவையை ரோபாக்கள் செய்யும் பயண ஏற்பாடு
செய்யவும், தண்ணீர் கொண்டு வந்து வேடிக்கைக் காட்டுவதும் எனப்பல செயல்பாடுகளைச் செய்யும் நிலை வரும்.
இயந்திரமனிதனின் செயல்பாடுகள்:
எதை
நாம் செய்ய விரும்புகிறோமோ அதைச் செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுத்தலாம். வேலை
வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வரும் ரோபோவிடம் குழந்தையை ஒப்படைத்து
விட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்கலாம்.மனிதர்கள் செய்ய இயலாத அலுப்புத்
தட்டக் கூடிய,கடினமான செயல்களையும் செய்ய முடியும். இலையெல்லாம் செயற்கை நுண்ணறிவின்
எதிர்காலச் செயல்பாடுகளாகும்.
முடிவுரை:
செயற்கை நுண்ணறிவின் மூலம்
பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும்
இல்லை. இதே போன்று எதிர்காலத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய
முன்னேற்றத்தைத் தரும் என்பதில் வியப்பொன்றும்பில்லை.
இயல் – 5
4. முன்னுரை- மொழிபெயர்ப்பு நூல்கள்
-எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்- மொழிபெயர்ப்புக்
கல்வி- முடிவுரை.
தலைப்பு:மொழிபெயர்ப்பின்
அவசியம்.
முன்னுரை :
ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும்
ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள்
இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும்
பரப்ப வேண்டும் அல்லவா?
மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:
'ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:
என்று சின்னமனூர்ச்
செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை
அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை
செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி,
கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி
கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.
மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:
மொழிபெயர்ப்பு எல்லா
காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள்
உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர்
அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே
சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பு இல்லாமல் உலகம் இல்லை .வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இதழ்கள்
போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பினால் வளர்ச்சி அடைந்துள்ளன.
மொழிபெயர்ப்பு ஒரு பயன்கலை:
வேற்று மொழி படைப்புகளால்
புதுவகையான சிந்தனைகளும் மொழிக் கூறுகளும் பரவுகின்றன. உலகப் புகழ்பெற்ற அறிவியல்
கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அடையும் பயன்கலையாக மொழிபெயர்ப்பு
விளங்குகிறது.
எட்டுதிக்கும் செல்வீர்:
எட்டுத்திக்கும்
கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு
நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும்
பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மொழிபெயர்ப்புக் கல்வி:
மொழிபெயர்ப்பைக் கல்வியாக
ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை
நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை
உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.
முடிவுரை :
'உலக நாகரிக வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும்
மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.
இயல் – 6
5. போரட்டக் கலைஞர்-பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர்
திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை:
கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர்.
பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். "முத்தமிழ் அறிஞர்"
"சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய
பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்
தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும்
பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித்
திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள்
இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.
பேச்சுக் கலைஞர்:
v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
"நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும்
பாராட்டப்பட்டது.
v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க "சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்"
ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
நாடகக் கலைஞர்:
v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் மற்றும்
அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன்,
மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார்.
v தூக்குமேடை என்னும்
நாடகத்தை எழுதி அதில் மாணவர் தலைவராகக் கருணாநிதி நடித்தார்.
திரைக் கலைஞர்
v கலைஞரின் திறமையை நன்குணர்ந்த
இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார்
v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய
படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்
v ”மறக்க
முடியுமா?” என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கலைஞருடைய ”காகித ஓடம் கடல் அலை மேலே” எனும் பாடல் காலத்தால் மறக்க முடியாத மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள பாடல்
ஆகும்
இயற்றமிழ்க் கலைஞர்
தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக்
கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன்,
பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம்,
ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.
தன் வாழ்க்கை வரலாற்றை
"நெஞ்சுக்கு நீதி" என்னும் தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதி
வெளியிட்டுள்ளார்.
முடிவுரை
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.
இயல் – 7
6) நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்
பங்கு- குறிப்புகளைக் கொண்டு ஒரு
பக்க அளவில் நாட்டுப்பற்று என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
முன்னுரை:
என்ற பாவேந்தரின்
வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை
மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை
கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள்
இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை
அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக
ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்காக தனியான
சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை
குடியரசுநாள் விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம்.
விடுதலைப் போராட்ட வரலாறு:
பதினைந்தாம் நூற்றாண்டு
காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த
ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை ஆளத்தொடங்கினர்.இது பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச்
செய்தது.எனவே மக்களிடையே விடுதலை
வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர்.
எண்ணற்றோர்
சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி ஆகியோர் அவற்றில் மிகவும்
குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர்
பங்கு:
நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற
வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான்
நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக்
குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.
மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு
முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித்
திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை
கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.
முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின்
வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு
மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து
செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு
முன்னேறும், புதிய இந்தியா உருவாகும்.
இயல் – 8
5. முன்னுரை- இலக்கியம் காட்டும் அறம் அறத்தான்
வருவதே இன்பம் அறவாழ்வு பண்பாட்டின் உச்சம்- அறம் என்பதே மனிதம்- முடிவுரை. குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை வரைக
தலைப்பு
: தமிழரின் அறவாழ்வு
முன்னுரை :
மனிதன் தனியானவன் அல்லன்;
இவன் சமூக கடலின் ஒரு துளி. தமிழர் சங்ககாலத்தில் அறத்தை மனித
உறவின் மையமாகக் கொண்டு வாழ்ந்தனர். தமிழனின் அறவாழ்வு சிறந்து விளங்கியமை குறித்து
இக்கட்டுரையில் காண்போம்.
அறம்:
நல்ல பண்பாட்டை
உணர்த்துவது அறமாகும். இது நீதி வழுவாத தன்மையைக் குறிக்கும். தருமம், புண்ணியம்,
ஒழுக்கம், நோன்பு,தவம்
அனைத்தும் அறத்தைக் குறிக்கும். வணிகத்தில் அறம் அறம் செய்வதில் வணிக நோக்கம்
கூடாது. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" என்கிறார், ஏணிச்சேரி முடமோசியார்.
அரசியலில் அறம்:
மன்னனின் கொடுங்கோலும்
வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. குற்றங்களை அறத்தின்
அடிப்படையில் ஆராய்ந்தே தண்டனை வழங்கினர்.
ü
"நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும், அறனும், காத்தலும் அமைச்சர் கடமை"
என்கிறதுமதுரைக்காஞ்சி.
ü
"அறம்கண்ட நெறிமான் அவையம்"என்கிறது புறநானூறு .
ü
போர்
புரியும்போது வீரமற்றோர்,
புறமுதுகிட்டோர், சிறுவர், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போரிடாதது அறமாகக் கருதப்பட்டது.இது
தமிழரின் போற்றுதலுக்குரிய அறத்தில் ஒன்றாகும்.
அறத்தான் வருவதே இன்பம் :
வீரமும் கொடையும் தமிழர்களின் இரு கண்களாகக்
கருதப்பட்டன. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை
நாடுவதையே உண்மையான மகிழ்ச்சியாகக் கருதினர். செல்வத்துப் பயனே ஈதல்' என்கிறது
புறநானூறு ஆற்றுப்படை இலக்கியங்களும் பதிற்றுப்பத்தும் கொடைச் சிறப்பினைப்
பாடுகின்றன.
அறவாழ்வே பண்பாட்டின் உச்சம்:
வழங்குவதற்குப் பொருள் உள்ளதா
என்று கூட பாராமல் கொடுப்பவன் பெருஞ்சாத்தன். வள்ளலின் பொருள் இரவலனின் பொருளாகக்
கருதப்பட்டது. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவனாக விளங்கியவன் அதியன். மறுமையை
நோக்கிக் கொடுக்காதவன் பேகன். இவ்வாறு பிறருக்கு உதவுதலைச் சிறந்த அறமாகக்
கொண்டிருந்தமை பண்பாட்டின் உச்சமாகும்.
அறம் என்பதே மனிதம்:
பிறர் நோயும் தம் நோயாகக்
கருதுதல், பிறரைத் துன்புறுத்தாச் சொற்களைப் பேசுதல்,
இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டு விடுதல் போன்ற பண்புகளே
மனிதப் பண்பாகும். மனிதப் பண்பிற்கும், அறத்திற்கும் பெரிய
வேறுபாடில்லை என்றே கூறலாம்.மனிதப் பண்பு நிறைந்து உள்ளவரிடத்தில் அறப்பண்பும்
மிகுதியாகக் காணப்படும்.
முடிவுரை:
இவ்வாறு இலக்கியம் மூலமும் பிறர்
சொல்லக் கேட்டும் தாமே சிந்தித்தும் அறம் அறிந்து செயல்பட்டு மனிதம் காப்போம்.அறமிகு
மானுடம் தழைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்.