10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL- 9

 10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல் - 9


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1)’இவள் தலையில் எழுதியதோ  கற்காலம் தான் எப்போதும்’ -இதில் கற்காலம் என்பது

அ) தலைவிதி  ஆ) பழைய காலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது 

2)சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ)அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்   ஆ)அறிவியல் முன்னேற்றம்

இ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்     ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 

3)பூக்கையைக் குவித்துப்பூவே புரிவொடு காக்க என்று---------,----------- வேண்டினார்

அ) கருணையன், எலிசபெத்துக்காக   ஆ) எலிசபெத் தமக்காக  

இ)கருணையன் பூக்களுக்காக     ஈ)எலிசபெத் பூமிக்காக

4) வாய்மையே மழைநீராகி-  இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை   ஆ) தற்குறிப்பேற்றம்   இ) உருவகம்    ஈ) தீவகம்

5) கலையின் கணவனாகவும், சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது

அ)தம்வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ)சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்   ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார். 

6) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின்  புதினம்

அ) கங்கை எங்கே போகிறாள்ஆ) யாருக்காக அழுதாள்

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்  ஈ) இமயத்துக்கு அப்பால் 

7) நாகூர் ரூமியின் இயற்பெயர்                    

அ) முகம்மது அலி  ஆ) முகமது அஸ்ரப் இ) முகம்மது ரஃபி   ஈ) உமர்

8) அருளப்பனுக்கு  வீரமாமுனிவர் தன் காப்பியத்தில்------- எனப் பெயரிட்டுள்ளார்.

அ) கருணாகரன்  ஆ) கருணையன்  இ) சூசையப்பர்   ஈ) பேதுரு 

9) வீரமாமுனிவரின் இயற்பெயர்

அ) அரிஸ்டாட்டில்  ஆ)கான்சுடான்சு சோசப் பெசுகி  இ) மேத்யூ ஹைடன்  ஈ) பிராவோ 

10) இயல்பான நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

அ) தன்மை அணி  ஆ) தீவக அணி  இ) தற்குறிப்பேற்ற அணி   ஈ) நிரல்நிறை அணி 

11)தீவகம் என்ற சொல்லுக்கு--------- என்பது பொருள்

அ )விளக்கு  ஆ) தீமை   இ) துன்பம்   ஈ) பகை 

12) தன்மையணி--------- வகைப்படும்

அ)3    ஆ) 4   இ) 5   ஈ) 6

பாடலைப்படித்து வினாக்களுக்கு (வினா எண்:12,13,14,15) விடையளிக்க

"பூக்கையைக் குவித்துப் பூவே

     புரிவொடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

      திருந்திய அறத்தை யாவும்"

105. பாடலின் ஆசிரியர் -

அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ) அசோகமித்திரன்

106. பாடல் இடம் பெற்றுள்ள நூல்

அ) கம்பராமாயணம்  ஆ) தேம்பாவணி  இ) இரட்சண்ய யாத்திரிகம்  ஈ) சீறாப்புராணம்

107. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.

அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை. திருந்திய  இ) பூக்கையை, சேக்கையை) சேக்கையை, பரப்பி

108. சேக்கை என்ற சொல்லின் பொருள்

அ) உடல்  ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28)   

1. தீவக அணிகளின் வகைகள் யாவை?

விடை: முதல்நிலைத்தீவகம்,இடைநிலைத் தீவகம்,கடைநிலைத் தீவகம்

2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

விடை: நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு , நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு

3. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

விடை:  இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.

4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

விடை: நிரல்நிரையணி. சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

5.'வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

விடை: சித்தாளுடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.

6) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-

தாமரை இலை நீர்போல

துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும்.

மழைமுகம் காணாப் பயிர்போல

தந்தையை இழந்த குடும்பம் வருமானம் இன்றி மழைமுகம் காணாப் பயிர்போல வாடி இருக்கிறது.

கண்ணினைக் காக்கும் இமைபோல

பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை கண்ணினைக் காக்கும் இமைபோல காக்க வேண்டும்.

சிலை மேல் எழுத்து போல

மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்துப் போல நிலையானது.

7) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

            சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

            சேரர்களின் பட்டப் பெயர்களில்கொல்லி வெற்பன்’, ‘மலையமான்போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்மலையமான்எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

8) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;-

            கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

            கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

            காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை

            செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

1. கம்பன்  2. உமறுப்புலவர் 3. ஜவாது புலவர் 4 காசிம் புலவர்  

5. குணங்குடி 6.சேகனாப்புலவர் 7.செய்குத் தம்பி பாவலர்.

9. அகராதியில் காண்க

1. குணதரன் – கருணை மிக்கவன்

2. செவ்வை – நேர்மை

3. நகல் – பிரதி

4. பூட்கை – வலிமை, கொள்கை

10) கலைச்சொல் தருக

1. Humanism - மனிதநேயம்

2. Cultural Boundaries - பண்பாட்டு எல்லை

3. Cabinet - அமைச்சரவை

4. Cultural values - பண்பாட்டுவிழுமியங்கள்

மூன்று மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 29 முதல் 37)   

1. "சித்தாளின் மனச்சுமைகள்

    செங்கற்கள் அறியாது" – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

விடை:

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்டசித்தாளுகவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

2. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

விடை:

  @ கதாசிரியர் ஊர் திரும்புவதற்கு பன்னிரண்டணா போக மீதியைச் செலவு செய்தார்.        

      இரண்டணாவை பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்தார்.
  @
பயணச்சீட்டு விலை ஏறி இருந்ததை அறியாத கதாசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
  @
பிச்சைக்காரன் தட்டில் இருந்து தான் போட்ட இரண்டனாவை எடுத்துக்கொண்டு

     ஓரணாவைத் திருப்பி போட்டார்.
  @
பிச்சைக்காரன் பேசிய வார்த்தைகள் அவரது மனதை மாற்றியது. திரும்பவும் தான் எடுத்த

     சில்லறையை அந்த தட்டிலேயே போட்டுவிட்டார்.                                                   
  @
அடுத்த தொடர்வண்டி நிலையத்திற்கு நடந்தே சென்று ரயில் ஏறினார்.

3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

விடை:

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

4. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

விடை:

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

      மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள் வரவேண்டாம் எனக் கூறிகையசைப்பதாகக் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

5. தன்மையணியை விளக்குக.

விடை:

தன்மையணி

   எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின்மனம் மகிழுமாறு உரியசொற்களை அமைத்துப்பாடுவது தன்மையணியாகும்.

சான்று:

    ”மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

      -----”

அணிப்பொருத்தம்:

       கண்ணகியின் தோற்றமும் , கண்ணீரும் கண்ட அளவிலேயே பாண்டிய மன்னன் தோற்றான். அவளது சொல் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

       கண்ணகியின்துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

6. தீவக அணியை விளக்குக.

விடை:

அணி இலக்கணம்:

  தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது தீவக அணி

சான்று:

   “சேந்தன வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர்

     -------------------------------------”

பொருள்:

   அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகியவை சிவந்தன

அணிப்பொருத்தம்:

  சேந்தனஎன்ற சொல் செய்யுளின் பல இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது.

7.”தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

     மேவன செய்தொழுக லான்”    -  குறளில் வந்த அணியை விளக்குக

விடை:

அணி இலக்கணம்:

     புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி அணி

பொருள்:

   விரும்புவனவற்றைச் செய்வதால் தேவரும் கயவரும் ஒரு தன்மையர்

அணிப்பொருத்தம்:

    கயவரைப்  புகழ்வது போலப் பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1) கருணையனின் தாய் மறைவுக்கு  வீரமாமுனிவர்தம்  பூக்கள் போன்ற உவமைகளலும், உருவக மலர்களாலும்  நிகழ்த்திய  கவிதாஞ்சலியை விவரிக்க. (வினா எண்:38)

                       கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

    குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:

     இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:            

    துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:

      கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.

2) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப் பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கான வாழ்த்துரை ஒன்றை உருவாக்கி தருக.   . (வினா எண்:39)

v  அனைவருக்கும் வணக்கம்.

v  நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன்.

v  சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி.

v  மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும்.

3.நீங்கள் செய்த , பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக. (வினா எண்:42)

1.     வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்து உதவியபோது

1.     இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு, அவருக்கு மகிழ்ச்சி

2.    உறவினருக்கு என் அம்மா பணம் கொடுத்து உதவியபோது

2.    கல்லூரி படிப்பை தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு.

3.    முதியவருக்கு, பயணச்சீட்டு எடுத்து கொடுத்தேன்

3.    அவரது முகத்தில் காணப்பட்ட, மனநிறைவும், மனஅமைதியும் மகிழ்ச்சியும், என்னை மகிழச் செய்தது.

4.    ஒருவேளை உணவு வழங்கியபோது

4.    பசிப்பிணி தீர்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது

4. மொழிபெயர்க்க:-  (வினா எண்:42)

   1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

    ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட் ஐன்ஸ்டின்

    2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

     பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

    3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில்

    4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறதுவின்ஸ்டன் சர்ச்சில்

5)காட்சியைக்கண்டு கவினுற எழுதுக  (வினா எண்:40)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!

 6.பள்ளி வளாகத்தில் நடைபெற்றமரம் நடுவிழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும், பெற்றோருக்கும், பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றியுரை எழுதுக(வினா எண்:39)

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

7. மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவம்.  (வினா எண்:41)

    15, காமராசர் நகர், பெரியார் தெரு, விருத்தாசலம் 10 என்ற முகவரியில் வசிக்கும் தமிழ்வேந்தன் என்பவரின் மகள் பூந்தளிர், அரசு உயர்நிலைப்பள்ளி, விருத்தாசலம், கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை பூந்தளிராகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம்  (பயிற்சி செய்க)

 

சேர்க்கை எண்: --------                        நாள்: ----------      வகுப்பும் பிரிவும்: ------------------

     

1.    மாணவரின் பெயர்                                                    :       

2.   பிறந்த நாள்                                                               :       

3.   தேசிய இனம்                                                            :       

4.   பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                                 :       

5.   வீட்டு முகவரி                                                           :       

6.   இறுதியாகப் படித்த வகுப்பு                                        :       

7.   பயின்ற மொழி                                                          :       

8.   இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி                     :       

 

9.   பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்                   :       

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

 

 

தமிழ்

 

ஆங்கிலம்

 

கணிதம்

 

அறிவியல்

 

சமூக அறிவியல்

 

மொத்தம்

 

 

9.   மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?                     :    

10.  தாய்மொழி                                                                         :    

11.  சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்                   :    

 

மாணவர் கையெழுத்து

 எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 43 முதல் 45)

1)ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

2) அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்என்னும் சிறுகதையில்  மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக

                                   வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை