7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
வினா விடைகள்
இயல்-2 காடு
சரியான விடையை
த் தேர்ந்தெ டுத்து எழுதுக.
1. வாழை , கன்றை
________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) காடு + டெல்லா ம் ஆ) காடு+எல்லாம் இ) கா+டெல்லா ம் ஈ) கான் + எல்லாம்
3. ‘கிழங்கு + எடுக்கும்’
என்பதனை ச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல் ____
அ) கிழங்குஎடுக்கும் ஆ)கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும் ஈ) கிழங்கொடுக்கும்
நயம் அறிக
பாடலிலுள்ள மோனை , எதுகை , இயை புச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை:
கார்த்திகை , காடெல்லாம்
பார்த்திட , பார்வை
காடு , காய்கனி
பச்சை
, பன்றி
எதுகை:
கார்த்திகை , பார்த்திட
களித்திடவே
, குளிர்ந்திடவே
குரங்கு , மரங்கள்
இயைபு:
ஈன்றெடுக்கும்
, கொடுக்கும் , பறிக்கும்
,இருக்கும், எடுக்கும்
குறுவினா
1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
விடை:
காட்டுப்பூக்களுக்கு கார்த்திகை விளக்கை உவமையாகக் குறிப்பிடுகிறார்
2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை
?
விடை:
ü மலர்களைக் கண்ட கண்கள் குளிர்ச்சி பெறும்
ü காடு பலபொருள்களை அள்ளித் தரும்
ü குளிர்ந்த நிழல் தரும்
ü உண்ணக் கனி தரும்
சிறுவினா
‘காடு’ பாட லில் விலங்குகளின் செயல்களாகக்
கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
விடை:
ü பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
ü நரிக் கூட்டம் ஊளையிடும்.
ü மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
ü இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.
சிந்தனை வினா
1. காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?
விடை:
பறவைகள்,
விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள்
(தங்குமிடம்) - உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன. எனவே காட்டை இயற்கை
விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்
இயல்-2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
அ) பச்சை இலை ஆ)
கோலிக்குண்டு
இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
2. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை
அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள் ஈ) சுடப்பட்ட பழங்கள்
3. 'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக்கிடைப்பது
அ) பெயர + றியா ஆ) பெயர் + ரறியா இ)
பெயர் + அறியா ஈ) பெயர +
அறியா
4. 'மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக்கிடைப்பது.
அ) மன + மில்லை ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை ஈ) மனம் + இல்லை
5. 'நேற்று + இரவு' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
அ) நேற்று இரவு ஆ) நேற்றிரவு இ) நேற்றுரவு ஈ) நேற்இரவு
குறுவினா
1. நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு
நின்றிருந்தது?
விடை:
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக
அங்கு நின்றிருந்தது.
2. சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க
உதவியோர் யாவர்?
விடை: காக்கை ,குருவி,மைனா,பெயரறியாப் பவைகள்,அணில்,. காற்று
சிறுவினா
1. நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக்
கவிஞர் கூறுவன யாவை?
விடை:
ü ஊரின்
வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போது, தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே
இருக்கின்றது.
ü அந்த
நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
ü பளபளக்கும்
பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும்
போதே நாவில் நீர் ஊறும்.
ü தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன்
நாவல்பழம் பொறுக்குகின்றனர்.
சிந்தனை
வினா
1. பெருங்காற்றில்
வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
விடை:
v
பெருங்காற்றினால்
நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து
செல்கின்றனர்.
v
குன்றுகளின் நடுவே
உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த
மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
இயல்-2 விலங்குகள் உலகம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆசிய யானைகளில் ஆண் - பெ ண் யானைகளை
வேறுபடுத்துவது ____.
அ) காது ஆ) தந்தம் இ) கண் ஈ) கால்நகம்
2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமை ந்துள்ள இடம்
_______.
அ) வேடந்தா ங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை ஈ) கூந்தன்குளம்
3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது _______.
அ) காடு + ஆறு ஆ) காட் டு
+ ஆறு இ) காட் + ஆறு ஈ) காட்
+ டா று
4. ‘அனை த்துண்ணி’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) அனை த்து +
துண்ணி ஆ) அனை + உண்ணி
இ) அனை த் + துண்ணி ஈ) அனை த்து + உண்ணி
5. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) நேரமாகி ஆ) நேராகி இ) நேரம்ஆகி
ஈ) நேர்ஆகி
6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____
அ) வேட்டைஆடிய ஆ) வேட்டையாடிய இ) வேட்டாடிய
ஈ) வேடா டிய
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ - என்று அழைக்கப்படும் விலங்கு புலி
2. யானை க் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதா ன் தலைமை தாங் கும்.
3. கரடிகளை த் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் அடர்ந்த முடிகள்
குறு வினா
1. காடு வரையறு.
விடை: மனிதர்களின்
முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடி,
கொடிகள், புல், புதர்கள்,
பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல உயிர்களின் வாழ்விடம் காடாகும்.
2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகிறது ஏன்?
விடை: யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை. யானைகள் செல்லும்
வழிப்பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடும்போது, அவர்களைத்
தாக்குகின்றன.
3. கரடி 'அனைத்துண்ணி' என
அழைக்கப்படுவது ஏன்?
விடை: பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள்,
கனிகள், புற்றீசல், கரையான்
என அனைத்தையும் உண்பதால் கரடி 'அனைத்துண்ணி' என அழைக்கப் படுகின்றது.
4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
விடை: புள்ளிமான் ,சருகுமான் ,மிளாமான், வெளிமான்
சிறுவினா
1. புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
விடை:
v புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன.
v ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள்
அந்த எல்லைக்குச் செல்லாது.
v கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரைப் பெற்றெடுக்கும்.
v அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும்.
v அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து
அனுப்பிவிடும்.
சிந்தனை வினா
1. காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
விடை:
§
மழை வளம் குறையும்.
§
காட்டுயிரிகள்
வாழ்விடம் அழியும்.
§
உணவுத் தட்டுப்பாடு
ஏற்படும்.
§
பருவநிலைமாறும்.
§
புவி வெப்பமயமாகும்
இயல்-2 இந்திய வனமகன்
ஜாதவ் பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
முன்னுரை
ஜாதவ்பயேங். 'இந்திய வனமகன்' என்று இவர் அழைக்கப்படுகிறார்.
பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு
காட்டை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை
விளக்குகிறது.
பொருளுரை
1979
ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள்
கரை ஒதுங்கின.சில பாம்புகள் இறந்தன. பெரியவர்கள் 'தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்' என்றனர்.
அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
ஜாதவ்பயேங் தீவில் விதைகளை
விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை
அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர
ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி
பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின.
மரங்களில் விளைந்த பழங்களை
உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து
விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். அத் தீவு பெருங்காடானது.
முடிவுரை
ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை
உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும்
இயல்-2 நால்வகைக் குறுக்கங்கள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேட்கை என்னும் சொல்லில்
ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு.
அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டு
2. மகரக் குறுக்கம்
இடம்பெறாத சொல்
அ) போன்ம் ஆ) மருணம் இ) பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது
3. சொல்லின் முதலில்
மட்டுமே இடம் பெறுவது
அ) ஐகாகரக்குறுக்கம் ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம் ஈ) ஆய்தக்குறுக்கம்
குறு வினா
1. ஔகாரம் எப்போது
முழுமையாக ஒலிக்கும்?
விடை: ஔ, வௌ என
ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு
மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.
2. சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும்
மாத்திரை அளவு யாது?
விடை:
ஐகாரக்குறுக்கம் பெறும்
மாத்திரை
முதல் – 1 1/2 மாத்திரை
இடை - 1 மாத்திரை
கடை - 1 மாத்திரை
3. மகரக்குறுக்கத்திற்கு
இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை: 1. வலம் வந்தான் 2. போன்ம்
கற்பவை கற்றபின்
ஐகார,
ஔகார, மகர, ஆய்தக்குறுக்க
ங்களுக்கு எடுத்துக்கா ட்டாக அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.
விடை:
v ஐகாரக்குறுக்கம்
- ஐம்பது , மடையன், கடலை , ஐந்து, வடை
v ஔகாரக்குறுக்கம்
– ஔடதம் , ஔவை, கௌதாரி
v மகரக்குறுக்கம்
– வரும் வண்டி, மருண்ம், போன்ம்
v ஆய்தக்
குறுக்கம் – கஃறீது , முஃடீது, பஃறொடை
மொழியை ஆள்வோம்
எதிர்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. ம களிர் X ஆடவர் 2. அரசன் X அரசி
3. பெண்_X ஆண் 4. மா ணவன் X மாணவி
5. சிறுவன் X சிறுமி 6. தோழி X தோழன்
படத்திற்குப்
பொருத்தமான பாலை எழுதுக
|
|
|
|
|
பிழையைத் திருத்திச்
சரியாக எழுதுக.
(எ.கா.) கண்ணகி சிலம்பு அணிந்தான். – கண்ணகி சிலம்பு அணிந்தா ள்.
1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
விடை: கோவலன் சிலம்பு விற்கப் போனான்
2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
விடை: அரசர்கள்
நல்லாட்சி செய்தனர்.
3. பசு கன்றை ஈன்றன.
விடை: பசு கன்றை
ஈன்றது.
4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
விடை: மேகங்கள்
சூழ்ந்து கொண்டன
5. குழலி
நடனம் ஆடியது.
விடை: குழலி நடனம் ஆடினாள்
கடிதம் எழுதுக.
நீங்கள் செ ன்று
வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
இயல்-2 கடிதம்
எழுதுக
சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம்
12,தமிழ்முகில் நகர்,
மதுரை-1,
20-06-2022.
அன்புள்ள நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உனக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகி விட்டது. சென்ற
வாரம் நான் சென்று வந்த உதகமண்டலம் சுற்றுலாவில் நான் பெற்ற மகிழ்ச்சியான
அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.
முதலில் நீலகிரி விரைவு
வண்டி மூலம் மேட்டுப்பளையம் சென்றடைந்தோம் .பிறகு மலை இரயில் மூலம் உதகமண்டலம்
சென்றோம்,இயற்கையை இரசித்தபடி பயணித்தது மறக்கமுடியாத
அனுபவம்.உதகமண்டலத்தில் இருந்த காலநிலை எங்களை மெய்ம்மறக்கச்செய்தது.நீயும்
முடிந்தால் உதகமண்டலம் சென்று வரவும்.
இப்படிக்கு,
உனது அன்பு நண்பன்
த.கனியமுதன்
உறைமேல் முகவரி:
சு.இளமுருகு,
4,
பாரதி தெரு,
வளர்புரம்-4.
மொழியோடு விளையாடு
விடை: புதையல், தையல், இயல், புல், கயல், கல், புயல், இல்லை, கடல் ,இயல்பு.
விடுகதைக்கு விடை எழுதுக.
1. மரம் விட்டு மரம் தரவுவேன்;
குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு;
புலி அல்ல
கொட்டைகளைக் கொறிப்பேன்;
கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன்.
நான் யார்?.................
விடை : அணில்
2. என் பெயர் மூன்று
எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால்
குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால்
குதிப்பேன். நான் யார்?.
விடை : குதிரை
3. வெள்ளையாய் இருப்பேன். பால்
அல்ல.
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்;
முனிவரல்ல நான் யார்?
விடை: கொக்கு
கலைச்சொல் தருக
1.
தீவு - Island
2.
இயற்கை வளம் - Nature
Resource
3.
வன விலங்குகள் - Wild Animals
4.
வனப்பாதுகாவலர் - Forest
Conservator
5.
உவமை - Parable
6.
காடு - Jungle
7.
வனவியல் - Forestry
8.
பல்லுயிர் மண்டலம் - Bio
Diversity
இயல்-2 திருக்குறள்
சரியான விடையை த் தேர்ந்தெ டுத்து எழுதுக.
1. வாய்மை எனப்ப டுவது ______.
அ) அன்பா கப் பேசுதல்
ஆ)
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல் ஈ) சத்தமாகப்
பேசுதல்
2. ______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்ப டும்.
அ) மன்னன் ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன் ஈ) செல்வந்தன்
3. ‘பொருட்செல்வ ம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) பொரு + செல்வ ம் ஆ) பொருட் + செல்வ ம்
இ) பொருள் + செல்வ ம் ஈ) பொரும்
+ செல்வ ம்
4. ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) யா+எனின் ஆ) யாது+தெனின் இ) யா+தெனின் ஈ)
யாது+எனின்
5. தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல் ______.
அ) தன்நெஞ்சு ஆ)
தன்னெஞ்சு இ) தானெஞ்சு ஈ) தனெஞ்சு
6. தீது+உண்டோ என்பதனை ச் சேர்த்தெ
ழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) தீதுண்டோ ஆ) தீதுஉண்டோ இ) தீதிண்டோ ஈ) தீயுண்டோ
சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.
அ) பொருளைப் பிரித்துச்
செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை
அறிதல்.
இ) சேர்த்த பொருளை ப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
விடை:
1. பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. பொருள்களைச் சேர்த்தல்.
3. சேர்த்த பொருளை ப்
பாதுகாத்தல்.
4.
பொருளைப்
பிரித்துச் செலவு செய்தல்.
குறு வினா
1. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
விடை: ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது.
அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும்.
2. வாழும் நெறி யாது?
விடை: ஒருவர்
தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும்.
3. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
விடை: உள்ளத்தில் பொய்யில்லாமல்
வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்.
கீழ்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.
விடை :
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில்
'அரிச்சந்திரன்' நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் 'பொய் பேசாமை'
என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட
காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்.
அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும்
இடம்
பிடிக்கக் காரணமாக அமைந்தது.
1. ஒழுக்காறாக்
கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2. வாய்மை
எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால்
பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.