FIRST UNIT TEST TAMIL QUESTION PAPER AND ANSWER KEY RANIPET DIST

 முதல் அலகுத்தேர்வு - 2024

10.ஆம் வகுப்பு - தமிழ்

இராணிப்பேட்டை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                            பகுதி-1                                                                         8X1=8

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. எம்+தமிழ்+நா

1

2.     

. கால்டுவெல்

1

3.     

. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1

4.     

. பாடல், கேட்டவர்

1

5.     

. பாண்டியன்

1

6.     

. தனிப்பாடல் திரட்டு

1

7.     

. இரட்டுற மொழிதல் அணி

1

8.     

.கடல் 

1

                                                                                   பகுதி-2                                                                  5X2=10

) ஐந்தனுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடையளி

9

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா. அதற்குரிய முதல்மொழி தமிழ்

2

10

சீவக சிந்தாமணி , வளையாபதி, குண்டலகேசி

2

11

ü  வேம் + கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி

ü  சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும் குறித்தது ( பொதுமொழி)

2

12

கற்குவியல்,பழக்குலை,ஆட்டுமந்தை,புற்கட்டு

2

13

செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது

2

14

குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்துவிடும்

2

15

. உயிரெழுத்து   . ஒப்பெழுத்து

2

 

                                                                                  பகுதி-3                                                                    3X3=9

மூன்றனுக்கு மட்டும் ஓரிரு தொடர்களில் விடையளி

16

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

17

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

18

(மாதிரி)

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :         காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்று :     இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது

                                    இருப்பிடங்கள்

3

19

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை

 

20

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

 

 

                                                                              பகுதி-4                                                                      3X5=15

. மூன்றனுக்கு மட்டும் விரிவான விடையளி                                                                       

21

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

5

22

வாழ்த்து மடல் (மாதிரி)

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      . இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

5

23

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

24

.

1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெ

 

. பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

 

5

 

                                                                               பகுதி-5                                                                        1X8=8

. ஒன்றுக்கு மட்டும் கட்டுரை வடிவில் விடையளி

25

 )    

தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

8

26

முன்னுரை:

   உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.

8

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும் 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை