SSLC JULY 2024 INSTANT EXAM TAMIL ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY

10.ஆம் வகுப்பு - தமிழ் உடனடித்தேர்வு

ஜூலை 2024 



10.ஆம் வகுப்பு தமிழ்- உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                          பகுதி-1                                                                           15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஆ. மணி வகை                                        

1

2.     

. வாகைப் பூ

1

3.     

இ. கல்வி

1

4.     

. குறிஞ்சி, மருதம் ,நெய்தல் நிலங்கள் 

1

5.     

ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

1

6.     

அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

1

7.     

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

8.     

ஆ. காட்டைச்சேர்தல்

1

9.     

ஈ. இரா.இளங்குமரனார்

1

10.    

அ. விண்மீன்

1

11.    

ஈ. கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?

1

12.   

ஆ. ஊழி-ஊழ்

1

13.   

ஆ. பரிபாடல்

1

14.   

இ.கீரந்தையார்

1

15.   

இ. வானம்,பேரொலி,யுகம்

1

 

பகுதி-2

                                                                            பிரிவு-1                                                                          4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

பொருந்திய வினாத்தொடர் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

17

சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி

2

18

# பாசவர்- வெற்றிலை விற்பவர்.

# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்

#  பல்நிண வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்

# உமணர்உப்பு விற்பவர்

2

19

ஏளனம் செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால், (இரப்பவரின்) பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும்.

2

20

இயந்திரமனிதன், செயற்கைக்கோள்

2

21

எப்பொருள்  எத்தனமைத்  தாயினும்  அப்பொருள்

மெய்ப்பொருள்  காண்ப  தறிவு.

2

 

                                                                             பிரிவு-2                                                                       5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

பொருந்திய விடையை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

23

. கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது

. இயற்கைக் காடுகளில் செல்ல செயற்கை கருவிகள் பயன்படுகின்றன.

2

24

பொறித்த – பொறி+த்+த்+அ

பொறி-பகுதி, த்-சந்தி , த்-இறந்தகால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி

2

25

. சின்னம்  ஆ. நம்பிக்கை

(செவி மாற்றுத் திறனாளர் வினா)

அ. பூவில்   ஆ. சோறு

2

26

 . மீண்ட துயர்   ஆ. எழுதிய கவிதை

2

27

வெண்பாவின் இலக்கணம் பெற்று, இரண்டடிகளால் அமைவது

2

28

வெட்சி-கரந்தை  ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                                 பிரிவு-1                                                                      2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ. வேளாண்மை  ஆ. அக்டோபர் முதல் டிசம்பர்  இ. எழுபது விழுக்காடு

3

30

    ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான  நலன்களை  உருவாக்குகின்றன.

    ) இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என  எண்ணாமல்  ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

     ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று  சங்க  இலக்கியங்கள்  கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக் கூடியது.

     ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்   தேவையே.

3

31

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

 ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

 ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

 உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

 

                                                                                   பிரிவு-2                                                                   2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

3

33

ü  மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.

ü  பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.

ü  மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்

ü  உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.

3

34

.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்டநாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

.

    நவமணி வடக்க யில்போல்

        நல்லறப் படலைப் பூட்டும்

   தவமணி மார்பன் சொன்ன

        தன்னிசைக்கு இசைகள் பாடத்

   துவமணி மரங்கள் தோறும்

        துணர்அணிச் சுனைகள் தோறும்

   உவமணி கானம்கொல் என்று

        ஒலித்து அழுவ போன்றே

3

 

                                                                                 பிரிவு-3                                                                     2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

நிரல் நிரையணி - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே இணைத்துப்பொருள் கொள்வது நிரல்நிறைஅணி எனப்படும்.

3

36

ü  மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ü  பூங்கொடி- அன்மொழித்தொகை

ü  ஆடுமாடுஉம்மைத்தொகை

ü  குடிநீர்வினைத்தொகை

ü  மணி பார்த்தாள்இரண்டாம் வேற்றுமைத்தொகை

3

37

சீர்

அசை

வாய்பாடு

கருவியும்

நிரை + நிரை

கருவிளம்

காலமும்

நேர்+நிரை

கூவிளம

செய்கையும்

நேர் +நேர்+நேர்

தேமாங்காய்

செய்யும்

நேர்+நேர்

தேமா

அருவினையும்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

மாண்ட

நேர்+நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

                  பிறப்பு

3

 

                                                                             பகுதி-4                                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

)

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரேஅமைச்சர் ஆவார்.          

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாகஅமைந்தவரேஅமைச்சராவார்.

ü  இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்தநுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்தசூழ்ச்சியும் நிற்க இயலாது)

                                                         (அல்லது)

)

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது.

5

39

) (மாதிரி)

7, திருத்தணி,

14-05-2024

அன்புள்ள அத்தைக்கு,

            நலம். நலமறிய ஆவல். எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்பாராட்டி, பரிசு வழங்கினர். எனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியைத் தங்களுடனும்  பகிர விரும்புகிறேன். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.

நன்றி!

இப்படிக்கு

தங்கள் அன்புள்ள

வா.நிறைமதி


) மாதிரி

மின்வாரியஅலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     .இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்              

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001            

ஐயா,

    பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                                                                                                    இப்படிக்கு,


தங்கள் பணிவுடைய,

                                                                                                                                                  .இளமுகில்.

இடம்:அரக்கோணம்,

நாள்:15-10-2022.

 

5

40

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி! (மாதிரி)


5

41

படிவத்தை வினாவில் தரப்பட்ட சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

 

42

) உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

)

   பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.     

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா:

1.     விருந்தே புதுமை

2.    நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று விருந்தோம்பியது

3.    வறிய நிலையிலும் விருந்தளித்தல்

4.    விதைத்த நெல்லை அரித்து எடுத்து வந்து விருந்தளித்தல்

5.    தமிழர் விருந்தோம்பல்

5

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )    

v     தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

 (அல்லது)

  (மாதிரி)

8

44

.

முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

விடைக்குறிப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்குக 


 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை