முதல் இடைப்பருவத்தேர்வு 2024
10.ஆம் வகுப்பு -தமிழ்
👉 திருப்பத்தூர் மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 7X1=7
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ) மணி வகை |
1 |
2. |
அ) வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
3. |
ஆ) இன்மையிலும் விருந்து |
1 |
4. |
ஈ) பாடல் , கேட்டவர் |
1 |
5. |
அ) வேற்றுமை உருபு |
1 |
6. |
அ) பண்புத்தொகை |
1 |
7. |
இ)
சிறப்பு |
1 |
பகுதி-2 பிரிவு-1
2X2=4 |
||
8 |
விடைக்கேற்ற வினா எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக |
2 |
9 |
காலையிலேயே
மாலையும் வந்து விட்டது.( மாலை பொழுதையும்,
பூவையும் குறித்தது) (மாதிரி) |
2 |
10 |
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். |
2 |
பகுதி-2 பிரிவு-2 2X2=4 |
||
11 |
அ. உள்ளளவும் நினை ஆ, மருந்தும் மூன்று நாளுக்கு |
2 |
12 |
அ.
இரவு (அ) இருள் ஆ. வயல் |
2 |
13 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது (
பொதுமொழி) |
2 |
பகுதி-3 பிரிவு-1
1X3=3 |
||
14 |
விடை அ)நாற்று-
நெல் நாற்று நட்டேன். ஆ)கன்று- வாழைக்கன்று
வளர்த்தேன் இ)பிள்ளை- தென்னம்பிள்ளை
அசைந்தது ஈ)வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
15 |
அ.
ஒருபொருட் பலசொல் வரிசைகள் ஆ. கால்டுவெல்
இ. தமிழ்ச்சொற்கள் |
3 |
பகுதி-3 பிரிவு-2
1X3=3 |
||
16 |
ü நன்னன் என்ற மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து
நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம்
நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
17 |
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! |
3 |
பகுதி-3 பிரிவு-3
1X3=3 |
||
18 |
அ. கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள். ஆ.
ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். இ.
நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர். |
3 |
19 |
-
இக்குறளில்
உவமை அணி பயின்று வந்துள்ளது அணி
இலக்கணம்:
உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை
அணி விளக்கம்: மக்களிடம் வரி வாங்குவது அரசன்
வழிப்பறி செவதற்குச் சமம். அணிப்பொருத்தம்: உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம் – அரசன் வரி வாங்குவது, உவம உருபு – போலும் |
3 |
பகுதி-4 2X5=10
20 அ |
மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
5 |
ஆ |
அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர்
தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப்
பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின்
மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம்.
நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு
நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். |
5 |
21 அ |
காட்சிக்குப் பொருந்திய கவிதை வரிகளை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
ஆ |
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால்
இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில்
பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும்
பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும்
பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென
உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
22. அ |
தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். |
8 |
ஆ |
பொருந்திய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
23 அ |
கோபல்லபுரத்து
மக்கள் முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப்
போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின்
மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர்
பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. |
8 |
ஆ |
முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது
தமிழ். அத்தகைய
தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ்
வளர்த்தனர். அச்சங்கத்தில்
பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன. சிற்றிலக்கியங்கள்:
96 சிற்றிலக்கிய
வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு
காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள்
பிள்ளைத்தமிழ், சதகம்,பரணி ,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்:
சங்க காலம் தொடங்கி,பல்லவர்
காலம்,சேரர் காலம்,சோழர் காலம்
முதலான கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை:
இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக
வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.
|
|