காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் – 2024-2025
8.
ஆம்
வகுப்பு தமிழ் கால
அளவு :2.30 மணி மதிப்பெண்கள்:
100
பகுதி-1
(மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க:
15X1=15
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு ஆ)கடல் இ) பரவை ஈ) ஆழி
2. வளைந்த கோடுகளால் அமைந்த
மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
அ)
கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
3. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.
அ)
இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ) வாய்மை
4.
இயற்கையைப் போற்றுதல் தமிழர்
....
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
5.'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது ________.
அ)
கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால்
6.
செஞ்சொல் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது
அ)
கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
7. . நீலகேசி
கூறும் நோயின் வகைகள் _______.
அ) இரண்டு
ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
8. முற்றுப்
பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
9. பின்வருவனவற்றுள் ஏவல்
வினைமுற்றுச் சொல் _____.
அ)
செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய
10. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ)
இ,
ஈ ஆ) உ, ஊ இ)
எ, ஏ ஈ) அ, ஆ
11. ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் ------என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
அ) ஓவியர் ஆ) தூரிகை இ) ஆல் ஈ) கொண்டு
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின்உய்ப்பனவும்
யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்
12) இப்பாடலில் அடங்கி இருத்தலைக் குறிக்கும் சொல் யாது?
அ) மருந்து ஆ) பூணாய் இ) உவசமம் ஈ) கால்
13) இப்பாடல் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது?
அ) திருக்குறள் ஆ) நீலகேசி இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்
14) இப்பாடலில் கூறப்படும்
நோயின் வகைகள்-----
அ) 5
ஆ) 4
இ) 3 ஈ) 6
15) இகழும் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) திகழும் ஆ) புகழும் இ) தேடும் ஈ) நாடும்
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
(21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்)
16) யாருடைய உள்ளம் மாணிக்கக்
கோயில் போன்றது?
17) ஓவிய எழுத்து என்றால் என்ன?
18)
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) உலகிலேயே மிக வியப்பானது மனிதமூளை.
ஆ) குமரகுருபரர் 17.ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
19) மருத்துவம் எப்போது தொடங்கியது?
20) யாருக்கு
அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
21) ”தக்கார்” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22)
மெய்யெழுத்துகள் எவற்றை இடமாகக்கொண்டு பிறக்கின்றன?
23)
வினைமுற்று என்றால் என்ன?
24)
எச்சம்
என்றால் என்ன?
அதன் வகைகள்
யாவை?
25) கலைச்சொல் தருக: அ. Valley
ஆ. Herbs
26) பொருத்தமான நிறுத்தற்குறியிடுக : முத்தமிழ் இயல் இசை நாடகம்
27) சரியான மரபுச்சொல்லால் நிரப்புக:
அ.பூ ---(கொய்/பறி) ஆ.சுவர்-----(கட்டு/எழுப்பு)
28) தமிழெண்களை எழுதுக: 12,24,36,48
பகுதி-3
(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) நீர்நிலைகள்
குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக
30) நோய்கள் பெருகக் காரணம்
என்ன?
31) பத்தியைப்
படித்துப் பதில் தருக:-
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில்
மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம்
யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,
ஏழு மணிநேரத்தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல்
ஆகியன அவசியம். எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதைவிட,
நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி,
நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலைஉணவுக்கு
முன்பு சாப்பிடலாம்.
அ. தினமும் எவ்வளவு
தூரம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்?
ஆ. ஒரு நாளைக்கு
எவ்வளவு தண்ணீர் அருந்துதல் வேண்டும்?
இ. காலை உணவுக்கு
முன்பு எவற்றைச் சாப்பிடலாம்?
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க
(34ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்)
32) கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
33) புத்தியைத் தீட்டி வாழவேண்டிய
முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
34) ”பேர்தற்கு---”எனத்தொடங்கும் பாடலை
அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-3
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) அழகிய மரம் –
எச்ச வகையை விளக்குக.
36) எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
37) எழுவாய் வேற்றுமையை
விளக்குக.
பகுதி-4
(மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25
38) அ) தமிழ்த்தாயை வாழ்த்திப்
பாரதியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக (அல்லது)
ஆ) நோயின் வகைகள், அவற்றைத்தீர்க்கும் வழிகள் பற்றி
நீலகேசி கூறுவன யாவை?
39) அ) விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டி வகுப்பாசிரியருக்கு
விடுப்பு விண்ணப்பம் எழுதுக
40)
அ) பொருத்துக.
1. காக்கைஉட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்றசெயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்தநீர் போல
– எதிர்பாராநிகழ்வு
5. நெல்லிக்காய்மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
(அல்லது)
ஆ) சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண்
விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு
மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட
மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக்
குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
41) கீழ்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.
42)
கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட
சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
மா தேன் மலர் செம்மை
சிட்டு கனி குருவி இலை காய் கூடு முட்டை மரம்
பகுதி-5
(மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43) அ) எழுத்துகளின்
தோற்றம் குறித்து எழுதுக
(அல்லது)
ஆ) தாய்மண்
மீதான செவ்விந்தியர்களின் பற்று குறித்து
சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
44) அ) வெட்டுக்கிளியும்
சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
ஆ) மூளையின் இடது,
வலது பாகங்களின் செயல்பாடுகள் குறித்துத் தொகுத்து எழுதுக
45) அ) கொடுக்கப்பட்டுள்ள
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள்–நூலகத்திலுள்ளவை– படிக்கும் முறை – முடிவுரை
(அல்லது)
ஆ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு
கட்டுரைஎழுதுக.
முன்னுரை– நோய்வரக் காரணங்கள் – நோய்தீர்க்கும்
வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை–
முடிவுரை