9 TH STD TAMIL QUARTERLY MODEL QUESTION PAPER 2024-2025

 


காலாண்டுத் தேர்வு-மாதிரி வினாத்தாள்(2024-2025)

      9.ஆம் வகுப்பு                                  தமிழ்                                          மதிப்பெண்கள்: 100

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                              15X1=15                                                 

1) தமிழ் விடு தூது----இலக்கிய வகையைச் சார்ந்தது

)தொடர்நிலைச்செய்யுள் ஆ)புதுக்கவிதை இ)சிற்றிலக்கியம்  )தனிப்பாடல்

2) நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

.அகழி  ஆ.ஆறு  இ.இலஞ்சி   ஈ.புலரி

3) திமிலுடன் கூடிய காளை ஓவியம் காணப்பட்ட இடம்

அ.கரிக்கையூர் ஆ.மேட்டுப்பட்டி  இ.சித்திரக்கல் புடவு  ஈ.கோத்தகிரி

4) தமிழ்நாடு அரசு கிராமப்புறமாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத்தேர்வு எது?

.தேசிய திறனறித் தேர்வு  .ஊரகத் திறனறி தேர்வு

.தேசிய திறனறி கல்வி உதவித்தொகைத் தேர்வு  ஈ.ஊரகத் திறனறி தேர்வு

5) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை

அ.கண்ணி  ஆ.சிற்றிலக்கியம் இ.குறள்   ஈ.சங்க இலக்கியங்கள்

6) வாவி என்பதன் பொருள்?

அ.வண்டு ஆ.தேன்   இ.பொய்கை  ஈ.குற்றம்

7) சிப்பியும் , நத்தையும்-----உயிர்கள்

அ. ஓரறிவு ஆ. ஈரறிவு  இ. மூவறிவு   ஈ. நான்கறிவு

8)  பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

அ. 6  ஆ. 8  இ. 10  ஈ. 12

9) கூட்டு வினையடிகளைக் கொண்ட வினைச்சொற்கள்----எனப்படும்

அ.தனிவினை  ஆ.கூட்டுவினை  இ.எச்சவினை   ஈ.மையவினை

10) உறுபொருள் இலக்கணக் குறிப்பு எழுதுக 

அ. வினைத்தொகை  ஆ. வேற்றுமைதொகை இ. உம்மைதொகை ஈ. உரிச்சொல் தொடர்

11) கல்லணையைக் கட்டியவர் யார்?

அ. பென்னி குயிக்  ஆ. கரிகாற் சோழன்  இ. ஆர்தர் காட்டன்  ஈ. நேரு

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

    ல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும்

    முல்லைஅம் புறவில் தோன்று முருகுகான் யாறு பாயும்

    நெல்லினைக் கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும்

    மல்லல்அம் செறுவில் காஞ்சி வஞ்சியும் மருதம் பூக்கும்

12.இப்பாடல் இடம்பெற்ற நூல்

.பெரியபுராணம்   ஆ.புறநானூறு  இ.தமிழ்விடு தூது  ஈ.இராவண காவியம்

13. இப்பாடலை இயற்றியவர்

. புலவர் குழந்தை  ஆ. ஔவையார்   இ. மருதனார்  ஈ. குடபுலவியனார்

14. முருகு என்பதன் பொருள்    

.உடல்  ஆ.தேன் இ.காற்று   ஈ.வானம்

15. எதுகை நயத்தைத் தேர்ந்தெடு                                                                                

. கல்லிடை- முல்லை  ஆ. கல்லிடை-பிறந்த  இ.கரும்பு-காக்கும்  ஈ.மல்லல்- மருதம்

பகுதி-2 (மதிப்பெண்கள்:18)

                                                           பிரிவு-1                                                               4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

) பூவின் தோற்ற நிலை அரும்பு எனப்படும்.

)“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்என்று பாரதி பெருமைப்படுகிறார்.

17) கூவல் என்று அழைக்கப்படுவது எது?

18) இணையவழியில் இயங்கும் மின்னனு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தனை எழுதுக.

19) நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

20) பழமணல் மாற்றுமின்:புதுமணல் பரப்புமின் -இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

21) விடல்  என முடியும் திருக்குறளை எழுதுக.

                                                             பிரிவு-2                                                        5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) வல்லினம் மிகா இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.

23) வீணையோடு வந்தாள்,கிளியே பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.

24) பொருள் எழுதித் தொடர் அமைக்க : அலை-அழை

25). பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

        அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.

        ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ .

26) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

      எண்ணெய் ஊற்றி----விளக்கு ஏற்றியவுடன்,இடத்தை விட்டு-----

27) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

         கயல் விழி உணவு சமைத்தாள் ; உண்டவர் அமுது போன்ற சுவையில் நீந்தினர்.

28) பொருள் எழுதுக : .செம்மல், .புரிசை.

              பகுதி-3(மதிப்பெண்:18)  

                                                            பிரிவு-1                                                              2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) ஏறுதழுவுதல் , திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

30) பள்ளிமாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

   தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

. போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

. ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

                                                               பிரிவு-2                                                          2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

33) 'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

34) அ. ஒன்றறிவதுவே- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக   (அல்லது)

ஆ. தித்திக்கும் - எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                                                பிரிவு-3                                                        2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35) தன்வினை,பிறவினை -எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக்காட்டுக.

36) வல்லினம் மிகும் இடங்கள் நான்கனை எழுதி,அவற்றுக்கான சான்றுகள் தருக.

37) அகழ்வாரைத்  தாங்கும் நிலம்போலத் தம்மை

      இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                    - இக்குறட்பாவில் பயின்று வந்த அணியை விளக்குக

                   

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

38) ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.

                                                            (அல்லது)

) தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

39) . உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

(அல்லது)

ஆ. உமது பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டி மாவட்ட ஆட்சியருக்குக் கூட்டு விண்ணப்பம் எழுதுக  

40) ) நயம் பாராட்டுக:-

         கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

              காடும் செடியும் கடந்துவந்தேன்;

         எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

                இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.            

         ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

                ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

         ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

                 ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.   -கவிமணி                                                                                                                   

(அல்லது)

) பொன்மொழிகளை மொழிபெயர்க்க.

      1.A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

      2.The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

      3.The biggest problem is the lack of love and charity – Mother Teresa

      4.You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam

      5.Winners don’t do different things; they do things differently – Shiv Khera

41) உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியடைய நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை வரிசைப்படுத்துக.

42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                   3X8=24

43) ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .

(அல்லது)

   )அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விவரிக்க.

44) ) இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க

(அல்லது)

    ) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.

45) அ .பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை எழுதுக.

                                                                 (அல்லது)

    .சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றைஎழுதுக.

வினாத்தாளைப் திவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை