நம் பள்ளி நம் பெருமை
அன்பார்ந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வணக்கம். தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை ஆனது, தமிழக அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் "நம் பள்ளி நம் பெருமை", "நம்ம ஊரு நம்ம ஸ்கூல்" முதலான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாகவே பள்ளி மேலாண்மைக் குழு உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தச் செய்து அவற்றை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இத்தகைய பொது அமைப்புகள் மூலம் பொது மக்களின் ஒத்துழைப்போடு தமிழக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மிகத் தரம் வாய்ந்தவையாக மாற்ற அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அவ்வகையில் தமிழக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் மாணவரின் எண்ணிக்கை ஒன்றியங்கள் மாவட்டங்கள் வாரியாக இங்கே தொகுத்து தரப்பட்டு, அதனுடைய இணைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது. அதில் மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன அவற்றில் நன்கொடை அளிப்பவர்கள் நேரடியாகவோ பணமாகவோ அல்லது பொருட்களாகவோ அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதற்கான அனைத்து இணைப்புகளும் இந்த ஒரு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் இதை பயன்படுத்தி தமிழக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதில் நமது பங்களிப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
பள்ளி விவரங்களைத்தேட இங்கே சொடுக்கவும்