10.ஆம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம்3 மதிப்பெண் வினாவிடை


 10.ஆம் வகுப்பு - தமிழ் அணி இலக்கணம்



1. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

விடை:

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

      மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள் வரவேண்டாம் எனக் கூறிகையசைப்பதாகக் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

2. தன்மையணியை விளக்குக.

விடை:

தன்மையணி

   எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின்மனம் மகிழுமாறு உரியசொற்களை அமைத்துப்பாடுவது தன்மையணியாகும்.

சான்று:

    ”மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

      -----”

அணிப்பொருத்தம்:

       கண்ணகியின் தோற்றமும் , கண்ணீரும் கண்ட அளவிலேயே பாண்டிய மன்னன் தோற்றான். அவளது சொல் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

       கண்ணகியின்துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

3. தீவக அணியை விளக்குக.

விடை:

அணி இலக்கணம்:

  தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது தீவக அணி

சான்று:

   “சேந்தன வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர்

     -------------------------------------”

பொருள்:

   அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகியவை சிவந்தன

அணிப்பொருத்தம்:

  ” சேந்தனஎன்ற சொல் செய்யுளின் பல இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது.

4. நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக

நிரல்நிறை அணி

       நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொ ருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

      எ.கா. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வவாழ்க்கை

                பண்பும் பயனும் அது.  

பாடலின் பொருள்:

        இல்வவா ழ்க்கை அன்பும் அறமும்  உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணிப்பொருத்தம்

      இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை  முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

5.”தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

     மேவன செய்தொழுக லான்”    -  குறளில் வந்த அணியை விளக்குக

விடை:

அணி இலக்கணம்:

     புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி அணி

பொருள்:

   விரும்புவனவற்றைச் செய்வதால் தேவரும் கயவரும் ஒரு தன்மையர்

அணிப்பொருத்தம்:

    கயவரைப்  புகழ்வது போலப் பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

6) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு   -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:

-     இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      மக்களிடம் வரி வாங்குவது அரசன் வழிப்பறி செவதற்குச் சமம்.

அணிப்பொருத்தம்:

      உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம்அரசன் வரி வாங்குவது, உவம உருபு போலும்

7) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

     நச்சு மரம்பழுத் தற்று.   -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:

              - இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

அணிப்பொருத்தம்:

      உவமை- நச்சுமரம் பழுத்தது, உவமேயம்விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், உவம உருபு – அற்று

8) பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

     கண்ணோட்டம் இல்லாத கண். *   -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:

    - இக்குறளில் eடுத்துக்காட்டு உவமை அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:

      உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

விளக்கம்:

       பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?

அணிப்பொருத்தம்:

    உவமை- பாடலோடு பொருந்தாத இசை,  உவமேயம் – இரக்கமில்லாத கண்.

9) பொருளல்  லவரைப்  பொருளாகச் செய்யும்

     பொருளல்ல  தில்லை  பொருள்      -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக

விடை:

    - இக்குறளில் சொல் பின்வரு நிலை  அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:

      செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வரு நிலை  அணி .

அணிப்பொருத்தம்:

    செய்யுளில் ” பொருள்” என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தந்தது சொல் பின்வரு நிலை  அணி

10) குன்றேறி  யானைப்போர்  கண்டற்றால்  தன்கைத்தொன்

      றுண்டாகச்  செய்வான்  வினை       -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக

விடை:              

              - இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.

அணிப்பொருத்தம்:

      உவமை- யானைப்போரைக் காண்பது, உவமேயம்தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, உவம உருபு – அற்று

11) இன்மையின்  இன்னாத  தியாதெனின் இன்மமையின்

     இன்மையே  இன்னா  தது.              -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:

    - இக்குறளில் சொற்பொருள்  பின்வரு நிலை  அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:

     செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது சொற்பொருள்  பின்வரு நிலை  அணி.

அணிப்பொருத்தம்:

    செய்யுளில் ” இன்மை” என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ” வறுமை” என்ற ஒரே பொருளைத் தந்தது சொற்பொருள்  பின்வரு நிலை  அணி

 

12) சொல்லப்  பயன்படுவர்   சான்றோர்; கரும்புபோல்

       கொல்லப்  பயன்படும்  கீழ்.      -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:              

              - இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவிசெய்வர் சான்றோர்; கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்ததால்தான் பயன்படுவர் கயவர்.

அணிப்பொருத்தம்:

      உவமை- கரும்பைப் பிழிதல், உவமேயம் – குறையைச் சொல்லி கெஞ்சுதல், உவம உருபு – போல்.

பதிவிறக்கம் செய்ய

 

 

 

 

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை