10.ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉இராணிப்பேட்டை மாவட்டம்
👉 வேலூர் மாவட்டம்
👉 திருவள்ளூர் மாவட்டம்
காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 இராணிப்பேட்டை
மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ.
இறைவனிடம், குலசேகராழ்வார் |
1 |
2. |
இ. எம் +
தமிழ் +நா |
1 |
3. |
ஈ. பாடல், கேட்டவர் |
1 |
4. |
ஈ. சருகும்,
சண்டும் |
1 |
5. |
இ. அன்மொழித்தொகை |
1 |
6. |
அ. அருமை+ துணை |
1 |
7. |
ஈ. இலா |
1 |
8. |
அ.
பாண்டியன் |
1 |
9. |
அ.
கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
10. |
ஆ.
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
11. |
ஆ.
தளரப்பிணைத்தால் |
1 |
12. |
பரிபாடல் |
1 |
13. |
கீரந்தையார் |
1 |
14. |
கரு
, உரு |
1 |
15. |
அடுக்குத்தொடர் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்யுளும்
உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது. |
2 |
17 |
அருளைப்
பெருக்கு,
அறிவைச்சீராக்கு, மருளை அகற்று |
2 |
18 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார் # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார் # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியம் |
2 |
19 |
வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் |
2 |
20 |
வினா 6 வகைப்படும்.
அவை: 1. அறி
வினா 2. அறியா
வினா 3. ஐய
வினா 4. கொளல்
வினா 5. கொடை
வினா 6. ஏவல்
வினா |
2 |
21 |
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது (
பொதுமொழி) |
2 |
23 |
மலைமீது
மாலையில் ஏறினான் ( மாதிரி) |
2 |
24 |
வருக
- வா(வரு) + க வா - பகுதி வரு எனத் திரிந்தது விகாரம் க- வியங்கோள்
வினைமுற்று விகுதி |
2 |
25 |
அ.
நவீன இலக்கியம் ஆ. தொன்மம் |
2 |
26 |
அ. வெற்பர்கள்
மலையில் உழுதனர் ஆ. நெய்தல்
பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் |
2 |
27 |
தேன்மழை,மணிமேகலை,வான்மழை,பொன்மணி
,பூவிலங்கு |
2 |
28 |
அ. பண்புத்தொகை - முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான் ஆ. அன்மொழித் தொகை - பூங்குழலி வீட்டிற்கு
வந்தாள் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
சோலைக்காற்று
: இயற்கையில் பிறக்கிறேன் மின்விசிறிக்காற்று
: செயற்கையில் பிறக்கிறேன் சோலைக்காற்று
: காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள் மின்விசிறிக்காற்று
: இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள் |
3 |
30 |
அ)
நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ)
கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ)
பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
31 |
அ.
காற்று ஆ. புற ஊதாக்கதிர்களைத் தடுத்தல் இ.குளோரோ புளோரோ கார்பன். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
|||||||||||||||
33 |
|
3 |
|||||||||||||||
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
|
3 |
||||||||||||||||||||||||
36 |
இயல்பாக
நிகழும் நிகழ்ச்சியின்மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது |
3 |
||||||||||||||||||||||||
37 |
கொண்டுகூட்டுப்
பொருள்கோள் ஒரு
செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று
கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும். |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
38 அ. |
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் (அல்லது) ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
5 |
||||||||||||
39 அ. |
வாழ்த்து மடல்
நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”
எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத்
தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. (அல்லது) ஆ)
அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர்
தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப்
பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின்
மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம்.
நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு
நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: |
5 |
||||||||||||
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
41 |
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
42 அ |
ஆ) 1. ஒருவரிடம் அவர்
புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது
– நெல்சன் மண்டேலா 2.
மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே
அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள்
என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல்
வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி
1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180
மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும் (அல்லது) ஆ. விருந்தினரை வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து
வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர
வைத்தேன். வாழை இலையில்
விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில்
உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை
விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச்
சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர்
ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன்.
பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை
மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என
விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த
இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன்
கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன். |
8 |
44 |
கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி
இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த
இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.அந்த
வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச
தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில்
ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப்
போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின்
மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த
இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர்
பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள்
திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். ”எவ்வளவு
பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்
கொண்டான். சுப்பையாவிடம்
அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா
தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். முடிவுரை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. (அல்லது) ஆ) ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம்
ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை
ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம்
என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக்
கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.
|
8 |
45 |
அ) பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் முன்னுரை: இந்தியாவில்
பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை
நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா
சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய
பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில்
விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995
ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா
சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத்
தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372
மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப்
பூமி திரும்பினார். நமது கடமை: அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை
நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல் ஆய்வில் நாம்
கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல்
தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப்
பயன்படுத்த வேண்டும் முடிவுரை: “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய
விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். (அல்லது) ஆ. முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது
தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை
இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில்
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள்
அரங்கேற்றப்பட்டன. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
8 |
விடைக்குறிப்பைப் பதிவிறக்கம் செய்ய