9.ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
இராணிப்பேட்டை மாவட்டம்
காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 இராணிப்பேட்டை
மாவட்டம்
9.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
2. |
ஈ. புலரி |
1 |
3. |
ஆ) திருவாரூர்- கரிக்கையூர் |
1 |
4. |
ஆ. ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சம் |
1 |
5. |
இ. சித்திரக்கல்
புடவு |
1 |
6. |
ஆன்ற |
1 |
7. |
அ.
கீழே |
1 |
8. |
ஆ. ஊரகத் திறனறி தேர்வு |
1 |
9. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
10. |
அ.
ஆராயாமை , ஐயப்படுதல் |
1 |
11. |
ஈ.
ஈரறிவு |
1 |
12. |
புறநானூறு |
1 |
13. |
குடபுலவியனார் |
1 |
14. |
உண்டி
, உண்டி , உணவென |
1 |
15. |
உடல் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும்
நீர்நிலை |
2 |
17 |
மாடு
பிடித்தல்,
மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளைவிரட்டு, ஏறு
விடுதல், சல்லிக்கட்டு |
2 |
18 |
1.
அலைபேசி 2.
கணிப்பொறி 3.
தொலை நகல் 4.
அட்டை தேய்ப்பி இயந்திரம் 5.
ஆளறி சோதனைக் கருவி |
2 |
19 |
வாளை மீன் |
2 |
20 |
இடம் : கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர். பொருள்
: விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும்
பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. விளக்கம் : மணிமேகலைக் காப்பியத்தில்
முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க
உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன்
அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும்
மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான். |
2 |
21 |
எனைத்தானும்
நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற
பெருமை தரும் |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
23 |
வீணையோடு வந்தாள் – வேற்றுமைத்தொடர் கிளியே பேசு – விளித்தொடர். |
2 |
24 |
அ.
பேசப்படுகின்றன ஆ. திருத்தினான்/திருத்தினாள்/திருத்தினார் |
2 |
25 |
அ.
மணம் ஆ. கவலை/வருத்தம் |
2 |
26 |
நீரலை
– அழைத்தல் அலையின் நடுவே நின்றௌ அழைத்தான்
(மாதிரி) |
2 |
27 |
அ.
குமிழிக்கல் ஆ. வெப்ப மண்டலம் |
2 |
28 |
விழிக்கயல்
, சுவையமுது |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||
29 |
|
3 |
||||||||||||
30 |
ü நடுவண் அரசும் மாநில
அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி
விண்ணப்பிக்கலாம். ü பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம்
வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய
வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச்
செய்யப்பட்டு வருகிறது. ü பள்ளிக்கல்வி முடித்த
மாணவர்கள் கல்லூரிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், கல்லூரிக் கட்டணம்
ஆகியவற்றையும் இணையம் வழியாகவே செலுத்த முடியும். |
3 |
||||||||||||
31 |
அ)
போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர்
செய்யாமை ஆ)
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது இ) பசு, பார்ப்பனர், பெண்கள்,
நோயாளர், புதல்வரைப் பெறாதவர் |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
v மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும்
என வருத்தமடைந்தது. v இலைகளும் கிளைகளும்
வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது. v பட்டுக் கருதியதன்
காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது. |
3 |
|
33 |
ü அறிவியல் என்றும்
ஊர்தியின் மீது ஆட்சி செய்கின்ற தமிழை நிறுத்துங்கள். ü கல்லணையை கவினுற
கட்டிய கரிகாற் சோழனின் மேன்மையையெல்லாம் கணிப்பொறி உள்ளே சேகரித்து வையுங்கள். ü ஏவுகின்ற திசையில்
பாய்ந்த அம்பைப் போல நம் இனத்தை வீரமுடையதாக்குங்கள். ü அறிவியல்
முன்னேற்றத்தால் நாம் ஏவுகின்ற ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும்
ஏற்றுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர் வைரமுத்து. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
36 |
தன்வினை : வினையின்
பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா:
பந்து உருண்டது. பிறவினை : வினையின் பயன் எழுவாயை
இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான் காரணவினை : எழுவாய் தானே வினையை
நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது எ.கா. பந்தை உருட்ட வைத்தான். |
3 |
37 |
உவமையணி
- உவமை , உவமேயம் ,உவம
உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
ü காவிரி ஆறு புதிய
பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன. ü நட்டபின் வயலில் வளர்ந்த
நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம்
என்று அறிந்தனர். ü காடுகளில் எல்லாம்
கரும்புகள் உள்ளன. ü வயல்களில் சங்குகள்
நெருங்கி உள்ளன. ü சோலைகள் எல்லாம் செடிகளின்
புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன. ü பக்கங்களில் எல்லாம்
குவளை மலர்கள் உள்ளன. ü கரை எங்கும் இளைய
அன்னங்கள் உலவுகின்றன. ü குளங்கள் எல்லாம்
கடல் போல் பெரிதாக உள்ளன. ü அன்னங்கள் விளையாடும்
நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள்
அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில்
தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது. ü செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள்
ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர். (அல்லது) ஆ) ü அமிழ்தினும் மேலான
முத்திக் கனியே
! முத்தமிழே ! உன்னோடு ü மகிழ்ந்து சொல்லும்
விண்ணப்பம் உண்டு கேள். ü புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து
சிறப்பு பெறுகின்றனர்.
அதனால்
உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு. ü தமிழே ! சிந்தாமணியாய் இருந்த
உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும். ü தேவர்கள் கூட மூன்று
குணங்கள் தான் பெற்றுள்ளனர்.
ஆனால்
தமிழே!
நீ மட்டும்
பத்து குணங்களைப் பெற்றுள்ளாய். ü மனிதர் உண்டாக்கிய
வண்ணங்கள் கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப்
பெற்றுள்ளாய். ü உணவின் சுவையோ ஆறு
தான்.
ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப்
பெற்றுள்ளாய். ü மற்றையோர்க்கு அழகு
ஒன்று தான்.
ஆனால்
தமிழே!
நீயோ
எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய் |
5 |
39 அ. |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக
(அல்லது) ஆ) திருத்தணி, அன்புள்ள நண்பன்
எழிலனுக்கு, என்
பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க
மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம்
எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல
வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!
அன்புடன்,
முகிலன். முகவரி: த/பெ மதியரசன், மதுரை. |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
1.
A nation's culture resides in the hearts and in the soul of its people
Mahatma Gandhi நம் நாட்டினுடைய பண்பாட்டினை
மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச்
செய்ய வேண்டும். 2.
The art of people is a true mirror to their minds Jawaharlal Nehru மக்களின் கலை உணர்வே
அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி 3.
The biggest problem is the lack of love and charity Mother Teresa அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய
பிரச்சனையாய் உள்ளது. 4.
You have to dream before your dreams can come true A.P.J. Abdul Kalam உங்கள் களவு நளவாகும் வரை,
களவு காணுங்கள். 5.
Winners don't do different things; they do things differently Shiv Khera வெற்றியாளர்கள் வித்தியாசமான
செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள். |
5 |
42 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக
|
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) 1. தேசிய
விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக்
கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும்
ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும்
உண்டு.
3.அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல்
இருக்கிறது.
4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த
ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
5.நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு
செய்வர்.
6.எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக்
கருதப்படும்.
7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில்
காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர். (அல்லது) ஆ. இணைய வணிகம் இங்கிலாந்தைச்
சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக்
கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை
கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம்
தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இணைய பயன்பாடு :
தற்காலத்தில் பேருந்து, விமானம்,
தொடர்வண்டி. தங்கும் விடுதி போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை
இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப் பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு
கிடைக்கிறது .பெரு நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள்,
முன்பதிவு செய்வது கூட இணையம் மூலம் நடைபெறுகின்றது. வரி செலுத்துதல் அரசுக்குச் செலுத்த
வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய
வழியில்செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய படிவங்களைத்
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. நடுவண்
அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும்
இணையம் பயன்படுகிறது. ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின்
வழியாகச் செயல்பட்டு வருகிறது. |
8 |
44 அ |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன்
உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள்
ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : (அல்லது) ஆ) இது, இந்திய
அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை
விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு
மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி
தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப்
பயன்படுத்துவதும் ஆகும்.
இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில்
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக்
காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில்
கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக்
கோள் 'ரோகினி' ஏவப்பட்டது.
இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய
இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.
1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்
கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே
பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு
எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.
|
8 |
45 |
அ) வரவேற்பு மடல் இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி,
தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம்
சோறு போடும்" "கந்தையானாலும்
கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி" என்னும்
பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக
மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும்
குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து
எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த
பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு
வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி
அலுவலர் அவர்களே! நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம். நன்றி.
இவண், இரா மணிமாறன், (மாணவர் செயலர் (அல்லது) ஆ. தமிழ் இலக்கிய மன்ற விழா இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,
டஹ்ணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 இராணிப்பேட்டை
மாவட்டம், தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்
இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப்
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி
வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில்
எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் . தலைமை
ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற்
போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார். சிறப்பு
விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை சிறப்புச்
சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும்
தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார். நிறைவாக,
இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி
அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார். |
8 |