10 TH STD TAMIL QUARTERLY QUESTION PAPER AND ANSWER KEY TIRUVANNAMALAI DIST

10.ஆம் வகுப்பு தமிழ்

காலாண்டுத்தேர்வு வினாத்தாள் & விடைக்குறிப்பு

👉திருவண்ணாமலை  மாவட்டம் 

👉 மதுரை மாவட்டம்


10.ஆம் வகுப்பு வினாத்தாள்👇

   

காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 திருப்பத்தூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.     

ஆ. சொல்லிசை அளபெடை

1

3.     

. அருமை + துணை

1

4.     

. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1

5.     

இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் 

1

6.     

. இலா

1

7.     

. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

8.     

ஈ. கொளல் வினா

1

9.     

ஈ. மன்னன் , இறைவன்

1

10.    

. மூதூர்

1

11.    

. கூற்று 1 மற்றும் 2 சரி

1

12.   

ஆ. தமிழழகனார்

1

13.   

ஆ. முத்தமிழ் - முச்சங்கம்

1

14.   

. கடல்

1

15.   

ஆ. இரட்டுறமொழிதல் அணி

1

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

பொருந்திய வினாத்தொடரைச் சரியாக இருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது.

2

18

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

19

விரும்பத்தக்க இரக்க இயல்பைக் கொண்டவர்கள்

2

20

ü  பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது.

ü  மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர்.

உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது

2

21

அருமை  உடைத்தென் றசாவாமை  வேண்டும்

பெருமை முயற்சி  தரும்.

2

                                                                                பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. ’ ,    ஆ. ரு

2

23

. உம்மைத்தொகை – அழகனும், வளவனும் கீரியும் பாம்பும் போல இருந்தனட்

. உவமைத்தொகை – குழலி முத்துப்பல் காட்டி சிரித்தாள்

2

24

அ. விதியால் வீதிக்கு வந்தான். 

ஆ. தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்

2

25

. நிழல் தரும்  மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

. சீர்மிகு கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்        

2

26

அ. நாடக ஆசிரியர்   ஆ. உயிரி தொழில்நுட்பம்

அ. உள்ளளவும் நினை  ஆ. அமிர்தமும்(அமிழ்தமும்)  நஞ்சு

2

27

தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன.

2

28

செய்+வ்+ஆன்   செய் – பகுதி , வ்- எதிர்கால இடைநிலை , ஆன் –ஆண்பால் விகுதி

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                              பிரிவு-1                                                                     2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

3

30

    வீட்டின் முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப் படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை , குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது.

3

31

1. வாடை  2. குளிர்ச்சியான காற்று  3. கோடை

3

                                                                                பிரிவு-2                                                                       2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

    # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

    # அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

3

33

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

3

34

 

.

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்          

.

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

3

                                                                           பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

3

36

ஆற்றுநீர்ப் பொருள்கோள்தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.

3

37

உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது

3

                                                                                    பகுதி-4                                                                   5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

 (அல்லது)

)

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

5

39

. அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

    வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                             இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அ.எழில்வேந்தன்.

இடம்:அரக்கோணம்,

நாள்:08-01-2022.

உறைமேல் முகவரி:

ஆ. நூலின் தலைப்பு:

                        பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                        சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

    நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                        பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                        விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                        சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                        ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:   வீரமாமுனிவர்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

அ)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

ஆ) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வரையறுத்துள்ளனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வாழ்க்கை முறைகளில் தமிழ் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. இருந்தாலும்

நமது கலாச்சாரம் மிகவும் பழமையானது, அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நமது கலாச்சாரத்தைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்.

5

                                                                              பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

விருந்தினரை வரவேற்றல்:

     என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன்.

உணவுண்ண அழைப்பு:

   உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன்.

வாழை இலையில் விருந்து:

    தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன்.

     உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன்.

வெற்றிலை பாக்கு:                                   

     உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.

வழியனுப்புதல்:

    உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன்.

(அல்லது)

.  # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.

   # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.

   # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.

   # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

   # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

   # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன்  தனது சேவையை அளிக்கும்.

8

44

. முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:                                                                                                                              

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

(அல்லது)

)  

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

8

45

)  பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

            1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி உறுதியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்

நமது கடமை:

            அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது.விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

         “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

.      (அல்லது)

)  முன்னுரை:

    கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:                 

     நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

     ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

     அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன.

முடிவுரை:

         .கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8

 பதிவிறக்கம் செய்ய

 

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை