10.ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉தருமபுரி மாவட்டம்
👉 நாமக்கல் மாவட்டம்
👉 திண்டுக்கல் மாவட்டம்
காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 தருமபுரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
அ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
2. |
ஆ. மணி வகை |
1 |
3. |
ஈ. காற்று |
1 |
4. |
ஆ. வினா எதிர் வினாதல் விடை |
1 |
5. |
ஈ . இலா |
1 |
6. |
இ. ஆங்கிலம் |
1 |
7. |
அ. அருமை + துணை |
1 |
8. |
அ. ஜப்பான் |
1 |
9. |
ஆ. சென்ற முருகன் |
1 |
10. |
இ. அன்மொழித்தொகை |
1 |
11. |
ஈ. சிற்றூர் |
1 |
12. |
அ. கம்பர் |
1 |
13. |
ஈ. கம்பராமாயணம் |
1 |
14. |
ஈ. சீதை. லட்சுமணன் |
1 |
15. |
அ. வெய்யோனொளி,
பொய்யோவெனும் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
செய்குத்தம்பி பாவலர் - ஒரே
நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே
சதாவதானம். |
2 |
17 |
பொருந்திய
வினாத்தொடரைச் சரியாக இருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
18 |
செய்யுளும்,
உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை. |
2 |
19 |
ü ஐம்பூதங்களும்,ஒன்றனுள்
ஒன்று ஒடுங்கின. ü நீண்ட காலத்திற்குப்
பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின. |
2 |
20 |
காலையிலேயே
மாலையும் வந்து விட்டது.( மாலை பொழுதையும்,
பூவையும் குறித்தது) |
2 |
21 |
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச்
சுற்றும் உலகு |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
22 |
அ.
சுடுதல், சுட்டல் ஆ.
காட்சி , காணுதல் |
2 |
23 |
பொருந்திய விடையை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
24 |
அ. புயல் ஆ. ஆய்வேடு |
2 |
25 |
அ. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள் ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர் |
2 |
26 |
கவிஞர்-பெயர்ப்பயனிலை , சென்றார் – வினைப்பயனிலை , யார் - வினாப்பயனிலை |
2 |
27 |
தங்க மீன்கள் –
இருபெயரொட்டுப் பண்புத்தொகை தண்ணீர்த் தொட்டியில்
– இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
2 |
28 |
அ. கறுத்து
ஆ. வெள்ளை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
29 |
அரும்பு , போது, மலர், வீ, செம்மல் |
3 |
30 |
ü தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப்
பரவலாக்கினார் ü 2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
31 |
அ. அதிவீரராம பாண்டியர் ஆ. நறுந்தொகை இ. சீவலமாறன் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச்
சுடுகிறார். # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார். # அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன்
என்று குலசேகராழ்வார் கூறுகிறார். |
3 |
|
33 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
ஆற்றுநீர்ப்
பொருள்கோள் – தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின்
நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
3 |
36 |
பொருந்திய
விடையை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
37 |
-
இக்குறளில்
உவமை அணி பயின்று வந்துள்ளது அணி இலக்கணம்: உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை
அணி விளக்கம்: மக்களிடம் வரி வாங்குவது அரசன்
வழிப்பறி செவதற்குச் சமம். அணிப்பொருத்தம்: உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம் – அரசன் வரி வாங்குவது, உவம உருபு – போலும் |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 அ. |
தமிழ் மருத்துவம்: v தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் . v தாவரம், விலங்கு, உலோகம், பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்கானது v இலை, காய், கனியிலிருந்தே மருந்தைக் கண்டனர் v தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை. நவீன மருத்துவம்: v நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் உண்டு v நோய்க்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன v நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது v இம்மருத்துவத்தால் நோய்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. (அல்லது) ஆ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
5 |
39 ஆ. |
அ. வாழ்த்து மடல்
நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”
எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத்
தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2.
அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்
சார்பாக. வணக்கம். நான் எனது
உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று
உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
42 அ |
1. குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2. உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3. விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4. நூல்களைப் படித்தல். 5. திறன்பேசியின் தீமைகளை
எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல். ஆ) 1.If
you talk to a man in a language he understand,thats goes to his head. If you
talk to him in his own language that goes to his heart – Nelson Mendela விடை
: ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக்
கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது
– நெல்சன் மண்டேலா 2.
Language is the road map of a culture. It tells you where its people come
from and where they are going – Rita Mae Brown விடை:
மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி,
அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக்
ப்ரெளன் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும்
விடையளிக்க: |
||
43 |
அ) விருந்தினரை வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு
வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர்
குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன். வாழை இலையில் விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது
தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும்
உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின்
விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து,
அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன்
பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு
பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத்
தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை
ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு
உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும்
கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன். (அல்லது) ஆ. செம்மொழித்
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை முன்னுரை:
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதி கூறுவதை தமிழகம் செயல்படுத்தவேண்டும் மொழிபெயர்ப்பின்
இன்றியமையாமையை நாம் உணர வேண்டும். |
8 |
44 |
அ.
முன்னுரை: அறிவியல் வளர்ச்சி மனிதனின் அறிவை
விரிவாக்குகிறது ஐயங்களை நீக்குகிறது எண்ணங்களை மாற்றுகிறது அறிவியல்
வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளிப்
பயணம் மேற்கொள்ள எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த பயண அனுபவத்தை
இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி. பேரண்டம் பற்றிய விளக்கம்: பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள்
பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானது என்பதற்கான சான்றுகளைக்
கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு அவர் விளக்கினார். இப்புவியின் படைப்பில்
கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க
வேண்டியதில்லை என்றார். பால் வீதி –
விண்மீன்கள்: விண்வெளியில் பால்வீதியில் எங்கள்
விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது அப்போது ஹாக்கிங், ”நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள்
காலம் முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால்
விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது விண்மீன் சுருங்க சுருங்க அதன் ஈர்ப்பு ஆற்றல்
உயர்ந்து கொண்டே சென்று அளவற்றது ஆகிறது என்று விளக்கினார். கருந்துளை விளக்கம்: கருந்துளை என்பது ஒரு படைப்பின்
ஆற்றல் கழிந்து கருந்துளையில் செல்லக்கூடிய எந்த ஒன்றும் வெளியில் வரவே முடியாது
கருந்துளையின் ஈர்ப்பு பகுதியில் இருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டே
இருந்தன கருந்துளை கருப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரில் பார்த்த
போது தான் அறிந்து கொண்டேன் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை படைப்பின் ஆற்றலை
என்பதை நான் உணர்ந்தேன். முடிவுரை: நாங்கள் விண்வெளியில் பயணம்
மேற்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புதுமையான அனுபவமாகவும்
இருந்தது. எனக்குத் தெரியாத நிகழ்வுகளை நன்கு பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். மனமகிழ்வோடு பூமிக்கு
வந்து சேர்ந்தோம். எங்களை அனைவரும் வரவேற்று, பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். (அல்லது) ஆ) கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி
இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த
இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.அந்த
வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச
தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில்
ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த
இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள்
திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். ”எவ்வளவு
பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்
கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா
தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். முடிவுரை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.
|
8 |
45 |
அ) முன்னுரை: கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன். அறிவிப்பு: நுழைவாயிலின் வழியாக
நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள்
எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை
உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ஓரிடத்தில்
அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின்
எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது நிகழ்த்தப்பட்ட
கலைகள்: அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து
உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில்
நிகழ்த்தப்பட்டன. முடிவுரை: .கூட்ட நெரிசல் மிக அதிகமாக
இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச்
சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு
அமைந்தது. (அல்லது) ஆ) முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது
தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை
இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில்
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள்
அரங்கேற்றப்பட்டன. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்
பல்வேறு
வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
8 |