8.ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉காஞ்சிபுரம் மாவட்டம்
👉 செங்கல்பட்டு மாவட்டம்
👉 கடலூர் மாவட்டம்
👉 திருவாரூர் மாவட்டம்
👉 நாகப்பட்டினம் மாவட்டம்
காலாண்டுண்டுப் பொதுத்தேர்வு- செப்டம்பர்
2024, காஞ்சிபுரம் மாவட்டம்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
வி எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. 1 |
அ.வைப்பு |
1 |
2. 2 |
அ. மரபு |
1 |
3. 3 |
ஆ. தந்தை பெரியார் |
1 |
4. 4 |
இ. தலை |
1 |
5. 5 |
ஆ. பருத்தியெல்லாம் |
1 |
6. 6 |
அ. தாயாக |
1 |
7. 7 |
அ. படித்தான் |
1 |
8. 8 |
ஆ. கல்லாதவர் |
1 |
9. 9 |
இ. நல்வாழ்வுக்காக |
1 |
10. 10 |
இ.
கோயில்+அப்பா |
1 |
|
நிரப்புக |
6X1=6 |
1. 1 |
அறிவியல் |
1 |
2. 2 |
வேற்றுமை |
1 |
3. 3 |
வீரமாமுனிவர் |
1 |
4. 4 |
எச்சவினை (அ) எச்சம் |
1 |
5. 5 |
கல்வி |
1 |
6. 6 |
மூன்று |
1 |
|
பொருத்துக |
4X1=4 |
1. 1 |
பத்துப்பாட்டு |
1 |
2. 2 |
சிந்தாமணி |
1 |
3. 3 |
கம்பராமாயணம் |
1 |
4. 4 |
பெரியபுராணம் |
1 |
எவையேனும் ஒன்பது
வினாக்களுக்கு விடையளி 9X2=18 |
||
1 |
தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது |
2 |
2 |
ஓவிய
வடிவத்தைக் கொண்ட எழுத்து வடிவம் |
2 |
3 |
சல
சலவென ஒலி எழுப்பியபடி |
2 |
4 |
பெருமழையும்,
சுழல்காற்றும் |
2 |
5 |
நடுவுநிலைமை |
2 |
6 |
கற்றவருக்கு அழகு செய்ய வேறு
அணிகலன்கள் தேவையில்லை |
2 |
7 |
மன்னிக்கத்தெரிந்த மனிதரின் உள்ளம் |
2 |
8 |
அன்புடன்
நடந்துகொள்ள வேண்டும். |
2 |
9 |
தாய்மொழியின் மூலமாக |
2 |
10 |
பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி
நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும் |
2 |
11 |
கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல்,
பொருட்டு, முறை, எல்லை. |
2 |
12 |
க, இய,இயர்,அல் |
2 |
பிழையின்றி மனப்பாடப்பாடல்களை எழுதுக
4+2+2=8 |
||
1 |
1) அ. கற்றோர்க்குக்
கல்வி நலனே கலனல்லலால் மற்றோர்
அணிகலம் வேண்டாவாம் – முற்ற முழுமணிப்
பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு
அழகு செய் வார்
ஆ) உடலின்
உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்தம்
உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீயதனை நித்தம்
நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே! காலை
மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோோரின் காலைத்
தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! * |
4 |
2 |
விலங்கொடு
மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு
ஏனை யவர் |
2 |
3 |
தக்கார்
தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால்
காணப் படும் |
2 |
எவையேனும்
நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 4X5=20 |
||
1 |
v எல்லா காலத்திலும் நிலைபெற்று
தமிழே! வாழ்க. v எல்லாவற்றையும் அறிந்துரைக்கும்
தமிழே! வாழ்க. v ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்ட v உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க. v எங்கும் உள்ள அறியாமை இருள்
நீங்கட்டும். v தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும்
சிறப்படைக! v பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க. |
5 |
2 |
ü ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும்
புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல்
எழுதினர். ü ஓலைச்சுவடிகளில்
நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும்
கிடையாது, புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள்
தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர
வேண்டிய நிலை இருந்தது. ü இதனால் படிப்பவர்கள்
பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று. |
5 |
3 |
வாங்கல் என்றும் ஊரில் அழகாக
வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயிள, தொண்டைமான்
நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து
விழுந்தன. |
5 |
4 |
v கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது
இயற்கை நுடபம். தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது
சிறப்பு.ஆகவே,
தமிழ்மொழியில்
அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாடடைநிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து
எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு
சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன். v கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு
அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று
திரு.வி.க. கூறுகின்றார். |
5 |
5 |
ü சரியான
உணவு, சரியான
உடற்பயிற்சி, சரியான
தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள்,
கீரைகள்,
பழங்கள்,
சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
5 |
6 |
|
5 |
மொழிப்பயிற்சி 5X2=10 |
||
1 |
அ.
இரக்கம் ஆ. வேலை |
2 |
2 |
அ. உயிரெழுத்து ஆ. நோய் |
2 |
3 |
அ. கொய்தான் ஆ. பருகினான் |
2 |
4 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக |
2 |
5 |
அழகுணர்ச்சி
, ஆரம்நீ, இரண்டல்ல , ஈசன்,
உரைநடை , ஊழி, எழுத்து
, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம்
, ஓலைச்சுவடிகள், ஒளகாரம் |
2 |
வினாக்களுக்கு
விடையளிக்க: 3X8=24 |
||
43 |
அ) v மனிதன் தனக்கு
எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க
விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும்
தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து
வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். v தொடக்கக் காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ
குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து
என்பர். v அடுத்ததாக ஒவ்வொரு
வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது.
அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து
நிலை" என்பர். v இன்று உள்ள
எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக்
கருதப்படுகின்றன. (அல்லது) ஆ) v தமிழரது
நிலம்,நிறைந்த
பண்பா டுகளும் தத்துவங்க ளும் அடங்கியது.நோய்கள் எல்லாம் பேய்,பிசாசுகளால்
வருகின்றன; பாவ,
புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல
பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில்,
தமிழர் தத்துவங்களா ன சாங்கியம்,
ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்
உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில்
ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின. v நோயை
இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின்
தன்மை,சுவை
இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர்.
தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறா க ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி
வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும்,
பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது. |
8 |
44 |
அ.முன்னுரை: உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன்
செயல்பாடுகள் விந்தையானவை; புதிரானவை. அவற்றைப் பற்றிக் காண்போம். இடப்பாகச் செயல்: மூளைக்குச் செல்லும்
நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின்
இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப்
பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள்) வலது கைக்காரர்களாக
இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான
பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள். இடது பாதிதான் பேச, எழுத,
கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற
விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி) பார்த்துக் கொள்கிறது. நம்
மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே. வலப்பாகச் செயல்; இடது பாதி அண்ணன் என்றால்
வலதுபாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான்) நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை
எழுதுவது, படம் போடுவது, நடனம்
ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது
பாதியில்தான்.) வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல்
திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக,
பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளைக் கையாளுபவர்களாக, கலைத் திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு
அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு
ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாகத்
திகழ்வர். முடிவுரை: இடதும் வலதும் கலந்து
இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன
இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி
நம்மை உயர்வடையச் செய்யும். ஆ. வெட்டுக்கிளியும்
சருகுமானும் : குறிஞ்சிப் புதரின் தாழப்
படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு
வாயாடி. ஒரு மாலை
நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன்,
பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்?
ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு
சருகுமான், 'காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத்
துரத்திக்கொண்டு வருகிறது. விழுந்து கிடந்த
மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி
வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால்
வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும்
பித்தக்கண்ணும்: கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது.
வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது.
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதாள் முதல்முறை,
பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல்
தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.
அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த
மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே
எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம்
சென்றது. உயிர்பிழைத்த கூரன் : கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக்
கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு
ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி
இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால்
மிதித்து நகக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள்
ஓடியது. வெட்டுக்கிளியின் பயம் அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற
அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக்
கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. |
8 |
45 |
அ. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து
நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன்
பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத்
தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில்
நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே
போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது
ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
ஆ . முன்னுரை: “நூலகம் அறிவின் ஊற்று” ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்” என்று கூறுகிறார்
பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம்
எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண
இருக்கிறோம். நூலகத்தின் தேவை: “
சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான
நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக
உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே,
இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது . நூலகத்தின் வகைகள்: மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும். நூலகத்தில் உள்ளவை: மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள்,
சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது
நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். படிக்கும் முறை: நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த
முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும். முடிவுரை: “என்னை தலைகுனிந்து படித்தால், உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்” என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக்
கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி
ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப்
பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும். |
8 |