அரையாண்டுப்பொதுத்தேர்வு – மாதிரி வினாத்தாள்-1
(2024-2025)
10.ஆம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் நேரம்:3.00
மணி
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1) எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்.
அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா
2) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
3) “
பிரிந்தன
புள்ளின் கானில்
பெரிதழுது இரங்கித் தேம்ப - பாடலடிகளில்
அடிக்கோடிட்ட சொற்களின்
பொருளைத் தெரிவு செய்க
அ) கிளை, துளை ஆ) நிலம்,வாட இ) காடு,வாட ஈ) காடு, நிலம்
4) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் யாது?
அ) துலா
ஆ)
சீலா
இ)
குலா
ஈ)
இலா
5) மேன்மை தரும் அறம் என்பது-----------
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ)
மறுபிறப்பில் பயன்பெறலாம் என்று அறம்செய்வது
இ) புகழ் கருவி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
6) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்துவது
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய்
இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
7) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------
அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
8) வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ) உருவகம் ஈ) தீவகம்
9) ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி: நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” இத்தொடர் உணர்த்தும்
மரங்களின் பெயர்களையும் தமிழெண்களையும் குறிப்பிடுக
அ) ஆலமரம்,வேலமரம் - ௪‚௨ ஆ) ஆலமரம்,வேப்பமரம் – ரு , க
இ) அரச மரம்,வேங்கை மரம் – க , உ ஈ) வேப்பமரம்,ஆலமரம் - ௪‚௬
10) உணவு
தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்க
அ) ஆடிப்பெருங்காற்றில் அம்மியும்
நகரும் ஆ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
இ) அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் ஈ) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
11) கூத்துக்கலைஞர் பாடத்
தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். இத்தொடர்களின் சரியான கலவைத் தொடர்
அ. கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால்
கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்,
ஆ.கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கியதும்
கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
இ.கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார் என்பதால்
கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
ஈ. கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி
கூட்டத்திலிருந்தவர்களை அமைதிப்படுத்தி வைத்தார்.
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு
வளர் வானத்து இசையில் தோன்றி.
உரு
அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து
வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
12.
ஊழ்
ஊழ் - இலக்கணக் குறிப்பு
அ.
இரட்டைக் கிளவி ஆ.பண்புத்தொகை இ.அடுக்குத்தொடர் ஈ.
வினைத்தொகை
13. பாடலின் ஆசிரியர் அ.கீரந்தையார் ஆ. பூதஞ்சேந்தனார் இ.நப்பூதனார் ஈ.
குலசேகராழ்வார்
14.
பாடலில்
உணர்த்தப்படும் கருத்து
அ.
தத்துவக் கருத்து ஆ.
அறிவியல் செய்தி இ.நிலையாமை ஈ.அரசியல்
அறம்
15.விசும்பு, இசை, ஊழி - பாடலில்
இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
அ.காற்று, ஓசை,கடல் ஆ.
மேகம்,
இடி, ஆழம் இ.வானம், பேரொலி, யுகம் ஈ.வானம்,காற்று, காலம்
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
(21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க)
16) விடைகளுக்கேற்ற வினாத்தொடர் அமைக்க.
அ) பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றினார்.
ஆ) தமிழர் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு
இணைத்துக்கொள்ளும்
இயல்புடையவர்கள்.
17) பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும்
இவ்வணிகர்கள் யாவர்?
18) ”நச்சப்படாதவன்
செல்வம் குறித்து வள்ளுவர் கூறுவது யாது?“
19) அவையம் – குறிப்பு வரைக.
20) வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம,பொ.சி என்பதற்குச் சான்று தருக.
21) ’அருமை’ எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-2
5X2=10
ஐந்து
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
22) தணிந்தது – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
23) கலைச்சொல் தருக: அ) IRRIGATION ஆ)
COSMIC RAYS
24) புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
25) நிறுத்தக்குறியிடுக:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி
சேரன் ஆண்ட மாண்பினைக்காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த
சிறுமையையும் நினை வூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு
விடுத்திருந்தேன் - ம.பொ.சி.
26) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்க: அ.மலை-மாலை. ஆ.கலை-காலை
27) அண்ணன் நேற்று வீட்டிற்கு
வந்தது.
அண்ணன்
புறப்படும்போது அம்மா வழியனுப்பியது.
வழுவை,வழாநிலையாக மாற்றுக.
28)
வேங்கை
என்பதைத் தொடர்மொழியாகவும்,
பொதுமொழியாகவும்
வேறுபடுத்திக் காட்டுக.
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த
சிறப்புகளுள் நீங்கள்
அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக
30) பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை தருக:-
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்,
‘நீடுதுயில் நீக்கப்பாடிவந்தநிலா’, ‘சிந்துக்குத்
தந்தை’ என்றெல்லாம் பாராட்டப்பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம்-கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்;சிறுகதைஆசிரியர்;
இதழாளர்;சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும்
கண்ணன் பாட்டையும் பாப்பாபாட்டு, புதிய ஆத்திசூடி என,
குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப்
பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப்பாராட்டப்பட்டவர் பாரதியார்.
1. பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் யார்? 2. பாரதியார் பணியாற்றிய இதழ்கள் யாவை?
3. இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக..
31) “ தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம்
“ இடம்
சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க
(34-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க)
32) தமிழழகனார்
தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக
33) எவையெல்லாம் அறியேன் எனக் கருணையன் கூறுகிறார்?
34) அ) “அன்னை
மொழியே” - எனத்தொடங்கும் வாழ்த்துப் பாடலை அடிமாறாமல்
எழுதுக. (அல்லது)
ஆ) “தூசும்” - எனத்தொடங்கும் சிலபதிகாரப்
பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-3 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) 'கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!'
-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
36) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வந்த
அணியைச் சுட்டி விளக்குக.
35) அலகிட்டு வாய்பாடு எழுதுக:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
.
பகுதி-4 (மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38)
அ) சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக. (அல்லது)
ஆ) முல்லைப்பாட்டு
உணர்த்தும் கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
39) அ. நாளிதழ் ஒன்றின் பொங்கல்
மலரில்,”
உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்”
என்ற உங்கள்
கட்டுரையை வெளியிட வேண்டி,
அந்நாளிதழ்
ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக (அல்லது)
ஆ) புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தம்பிக்குத்
திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறிக் கடிதம் எழுதுக.
40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41) ஈரோடு மாவட்டம், தமிழ்
நகர், சேயோன் வீதி, 18 ஆம் இலக்க வீட்டில், வேலழகன்
மகன் தமிழ்மாறன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர
விரும்புகிறார். தேர்வர் தன்னை தமிழ்வேந்தனாகக் கருதி கொடுக்கப்பட்ட சேர்க்கை
விண்ணப்பப் படிவத்தை
நிரப்புக.
42)
அ) தொலைக்காட்சி
நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி: திறன்பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும்
தங்கை; காணொலி
விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்; எப்போதும்
சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல்
கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள் ! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை
உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.. (அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
Among the five geographical divisions of the
Tamil country in Sangam literature, the Marutam region was the fit for
cultivation, as it had the most fertile
lands. The properity of a farmer depended on getting the necessary
sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of
nature,sunlight was considered indispensible by the ancient Tamils.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43) அ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக்கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர்
ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக (அல்லது)
ஆ) கொடை
தமிழரின் சிறந்த அறங்களுள் ஒன்று என்பதை உமது பாடத்தின் வழி நிறுவுக
44) அ. ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட
புத்தகம்,
அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும் (அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45) அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை- கலைத்திருவிழா- நிகழ்வுகள் – நிகழ்கலைகள் – பொழுதுபோக்கு – தின்பண்டங்கள் - மகிழ்ச்சி – முடிவுரை. (அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை
எழுதுக.
முன்னுரை-சாலைப்பாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு-சாலை விதிகள்-ஊர்தி ஓட்டுநருக்கான
நெறிமுறைகள்-விபத்துகளைத் தவிர்ப்போம்-விழிப்புணர்வைத் தருவோம்-முடிவுரை.
மேல்நிலை
வகுப்பு – சேர்க்கை
விண்ணப்பப் படிவம்
சேர்க்கை எண்: -------- நாள்: ----------
வகுப்பும்
பிரிவும்:
------------------
1. மாணவரின் பெயர் :
2. பிறந்த
நாள் :
3. தேசிய
இனம் :
4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் :
5. வீட்டு
முகவரி :
6. இறுதியாகப்
படித்த வகுப்பு :
7. பயின்ற
மொழி :
8. இறுதியாகப்
படித்த பள்ளியின் முகவரி :
9. பத்தாம்
வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
தேர்வின்
பெயர் |
பதிவு
எண்
- ஆண்டு |
பாடம் |
மதிப்பெண் (100) |
|
|
தமிழ் |
|
ஆங்கிலம் |
|
||
கணிதம் |
|
||
அறிவியல் |
|
||
சமூக அறிவியல் |
|
||
மொத்தம் |
|
9. மாற்றுச்
சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? :
10. தாய்மொழி :
11. சேர
விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும் :
மாணவர் கையெழுத்து