10 TH STD TAMIL HALF YEARLY MODEL QUESTION PAPER-2 2024

 


அரையாண்டுப்பொதுத்தேர்வு – மாதிரி வினாத்தாள்-2 (2024-2025)

10.ஆம் வகுப்பு                      தமிழ்                      100 மதிப்பெண்கள்                    நேரம்:3.00 மணி

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                             15X1=15

1.மேன்மை தரும் அறம் என்பது

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது  ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

2. 'பெரியமீசை சிரித்தார்' - அடிக்கோடிட்ட தொடருக்கான தொகையின் வகை

அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை

3. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால் இ) இறுக்கி முடிச்சிட்டால்  ஈ) காம்பு முறிந்தால்

4. மரபுத்தொடருக்கான பொருளைத் தேர்க. கண்ணும் கருத்தும்

அ. வேகப்படுத்துதல் ஆ. கற்பனை செய்தல் இ.சிரத்தையோடு செய்தல் ஈ. ஆற்றில் இறங்குதல்

5. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் குறிப்பது

அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வானத்தையும் புகழையும்

) வானத்தையும் பூமியையும்   ஈ) வானத்தையும் பேரொலியையும்

6. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை. குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்  ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

7. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

8. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல். ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்.

இ) அறிவியல் முன்னேற்றம்  ஈ) வெளிநாட்டு முதலீடுகள்.

9. எய்துவர் எய்தாப் பழி இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு

அ) கூவிளம் தேமா மலர்  ஆ) கூவிளம் புளிமா நாள்  இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு

10. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

  அ) கொண்டல் - 1.மேற்கு

  ஆ) கோடை -  2. தெற்கு

  இ) வாடை  - 3.கிழக்கு

  ஈ) தென்றல் - 4. வடக்கு

அ) 1, 2, 3, 4  ஆ) 3, 1, 4, 2   இ) 4, 3, 2,1   ஈ) 3, 4, 1, 2

11. ஊர்ப்பெயர்களின் மரூஉக்களில் பொருத்தமானதைத் தேர்க.

அ) புதுக்கோட்டை புதுவை  ஆ) புதுச்சேரி-புதுகை  

இ) திருநெல்வேலி-திருச்சி  ஈ) கோயம்புத்தூர் கோவை

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14:15) விடையளிக்க.

"மூத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு."

12. பாடல் இடம்பெற்ற நூல் அ)நற்றிணை  இ) குறுந்தொகை ஆ) முல்லைப்பாட்டு ஈ) தனிப்பாடல் திரட்டு

13. பாடலில் இடம்பெற்றுள்ள அணி-----

அ) இரட்டுற மொழிதல் அணி  ஆ) தீவக அணி  இ) வஞ்சப் புகழ்ச்சி அணி  ஈ) நிரல் நிறை அணி

14. தமிழுக்கு இணையாகப் பாடலில் ஒத்திருப்பது

அ) சங்கப் பலகை  ஆ)கடல்  இ) அணிகலன்   ஈ)புலவர்கள்

15. இப்பாடலின் ஆசிரியர்  யார்?

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) நப்பூதனார்  இ) சந்தக்கவிமணி தமிழழகனார் ஈ) பெருங்கௌசிகனார்

பகுதி -II (மதிப்பெண்கள்:18)

பிரிவு-1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                          4 × 2 = 8

(21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.

அ) நூலின் பயன் அறம், பொருள். இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.

ஆ) பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செழித்திருந்தது.

17. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

18. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?

ஏன் என்பதை எழுதுக. (பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்)

19. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களை எழுதுக.

20. குறிப்பு வரைக அவையம்.          21. 'செயற்கை' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                      பிரிவு-2                                                                     5x2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.

22. தொடரின் தடித்த சொற்களுக்கான வேறு பொருளைப் பயன்படுத்தி, தொடரை மீள எழுதுக.

   உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

23. அறியேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. நாற்றிசையும் செல்லாத நாடில்லை.

     ஐந்து சால்பு ஊன்றிய தூண்.

     நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டு,அவற்றின் தமிழ் எண்களை எழுதுக.

25. கலைச்சொல் தருக.  அ) Sea Breeze  ஆ) Document

26. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் இதில் உள்ள திணை, மரபு வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

27. எதிர்மறையாக மாற்றுக.     அ) மீளாத் துயர்  ஆ) எழுதாக் கவிதை

28. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகுதி -III (மதிப்பெண்கள்: 18)

                                                                          பிரிவு-1                                                                      2×3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.

29. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் ஆறு தலைப்புகளை எழுதுக.

30. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக?

31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

     ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும். மொழிபெயர்ப்பு வழியாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிறமொழி இலக்கியங்களை அறிந்துகொள்ள மொழிபெயர்ப்பு மிகவும் உதவுகின்றது. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால்தான். இன்று பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பே அதிகம் தேவைப்படுகின்றது.

வினாக்கள்

அ) திருக்குறள் உலகமொழிக்குரியதாக மாறியது எவ்வாறு?

ஆ) மொழிபெயர்ப்புக் கல்வியின் வழியாக எதனை எளிதாகப் பெறமுடியும்?

இ) பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று எழுதுக.                                                                                          

                                                                         பிரிவு-2                                                                   2x3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.

34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி, வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் என்பதை எழுதுக?

33. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

34. அடிபிறழாமல் எழுதுக.

அ) வாளால் அறுத்துச் சுடினும்..” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல்     (அல்லது)

) ”தூசும் துகிரும்...” எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்

                                                                             பிரிவு-3                                                               2x3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.

35. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

36. தன்மையணியை விளக்கி எழுதுக.

37, கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

      கோடிஉண் டாயினும் இல். - திருக்குறளை அலகிட்டு வாய்பாடு எழுதுக

                                                

                                                 பகுதி - IV (மதிப்பெண்கள் : 25)                                                  5x5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

38. அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும்,  உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.       (அல்லது)

ஆ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை ருவாக்குக.

39. அ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.                                                                          (அல்லது)

ஆ) வெள்ளத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றியதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டும் விருதும் பெற்ற உங்கள் தோழனைப் பாராட்டி, அவருக்குக் கடிதம் ஒன்று எழுதுக

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41.   தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, வள்ளுவர் நகர், பாவலர் தெரு, எண்-36 இல் வசிக்கும் தமிழ்மறவன்  மகன் வேள்பாரி மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை கொற்றவனாகக் கருதிக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியான படிவத்தை தேர்வு செய்து நிரப்புக.

42. அ) அன்றாட வாழ்வில் நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.

(அல்லது)

ஆ) தமிழில் மொழிபெயர்க்க:

             Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar.

பகுதி -V (மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                                    3×8=24

43. அ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் இவை போன்ற அன்றைய செயல்கள் குறித்தும் இக்காலத்தில் விருந்தினருக்குச் செய்யும் விருந்தோம்பல் குறித்தும் விவரித்து எழுதுக.    (அல்லது)

ஆ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைக்க

44. 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றி வேற்கை மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்கப்                                             (அல்லது)

'ஆகிரிராமியின்' ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து விவரித்து எழுதுக.

45. அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதித் தலைப்பிடுக. குறிப்புகள் : முன்னுரை - சுற்றுச் சூழல் - நிலம், நீர். காற்று மாசு - சுற்றுப்புறத் தூய்மையே வழ்வின் வளம் - நம் கடமை - முடிவுரை

(அல்லது)

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு நீங்கள் சென்று அந்த நிகழ்வைக் குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரையாக எழுதுக..

      குறிப்புகள் : முன்னுரை – கலைத்திருவிழா- நிகழ்கலைகள்- பொழுதுபோக்கு - முடிவுரை

நூலக உறுப்பினர்  படிவம்

----------மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் --------

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண்:                                                                           உறுப்பினர் எண்:                                    

1.    பெயர்                                                :         

2.   தந்தை பெயர்                                      :         

3.   பிறந்த நாள்                                        :         

4.   வயது                                                :         

5.   படிப்பு                                                :         

6.   தொலைபேசி / அலைபேசி எண்               :         

7.   முகவரி                                              :         

     (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)                          

              நான் --------- நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. ------ சந்தா தொகை ரூ. ----- ஆக மொத்தம் ரூ. ----- செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம்:  

நாள்:                                                                                                                                                              

                                                                                                                    தங்கள் உண்மையுள

திரு / திருமதி / செல்வி / செல்வன் ----------------- அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

                                                                                              பிணையாளர் கையொப்பம்                                           

அலுவலக முத்திரை                                                           

(பதவி மற்றும் அலுவலகம்)

வினாத்தாளைப் பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை