அரையாண்டுத்தேர்வு 2024 கோவை மாவட்டம் வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்

அரையாண்டுத்தேர்வு 2024  

கோவை மாவட்டம் , நீலகிரி மாவட்டம்

(ஒரே வினாத்தாள்) 

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் 

வினாத்தாள்👇👇


                                        10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்                                                                

                                                            பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

  1.  

. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்  

1

  1.  

. வானத்தையும், பேரொலியையும்

1

  1.  

. சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

1

  1.  

. கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது

1

  1.  

இ. உழவு,ஏர்,மண், மாடு

1

  1.  

. அதியன், பெருஞ்சாத்தன்

1

  1.  

. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்     

1

  1.  

ஈ. புறநானூறு

1

  1.  

ஆ, கொளல் வினா

1

  1.  

. இந்திரன்     

1

  1.  

ஆ. உருபும், பயனும் உடன் தொக்க தொகை

1

  1.  

இ. மலைபடுகடாம்

1

  1.  

. தினைச்சோறு

1

  1.  

ஈ. கெழீஇ

1

  1.  

ஈ. பரூஉக்குறை – குரூஉக்கண் (கரூஉக்கண் எனப் பிழையாகத் தரப்பட்டுள்ளது)

1

                                                                பகுதி-2       பிரிவு-1                                                                  4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

காலையிலேயே மாலையும் வந்து விட்டது.( மாலை பொழுதையும், பூவையும் குறித்தது)

2

17

அ. ம.பொ.சி எவ்வாறு இலக்கிய அறிவு பெற்றார்?

ஆ. அமெரிக்காவின் எந்த சங்கம் வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது?

2

18

யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது

2

19

ஏளனம் செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால், (இரப்பவரின்) பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும்.

2

20

மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்

2

21

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை  அறிந்து செயல்.

2

                                                                                    பிரிவு-2                                                                 5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

காய்+த்(ந்)+த்+ஏன்

காய்- பகுதி , த்- சந்தி , ந் – விகாரம், த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை விகுதி

2

23

. காப்பிய இலக்கியம்    . மெய்யியலாளர்

2

24

அ. காட்சி, காணுதல்    ஆ. சுடுதல், சுட்டல்

2

25

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

   (-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

               கோலொடு நின்றான் இரவு.

2

26

. ஆசிரியர் கற்பித்த பாடம் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது. 

.இளவன் அவசரக்குடுக்கை போல செயல்பட்டான்

2

27

. சோற்றுக்கு ஒரு சோறு பதம்   . மருந்தும் மூன்று நாளுக்கு

2

28

வியங்கோள் வினைமுற்று

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

 

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

30

. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது

. உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது

. செயற்கை நுண்ணறிவு

3

31

   சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்கள், ஊருக்கு நூறு பேர், உன்னைபோல் ஒருவன், யாருக்காக அழுதான்

3

                                                                                 பிரிவு-2                                                                    2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்  என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

3

33

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

34

.

.   வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

    மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

    மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!

    நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

.

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

 

3

                                                                                         பிரிவு-3                                                             2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ü  பூங்கொடி- அன்மொழித்தொகை

ü  ஆடுமாடுஉம்மைத்தொகை

ü  குடிநீர்வினைத்தொகை

ü  மணி பார்த்தாள்இரண்டாம் வேற்றுமைத்தொகை

3

36

1.     'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

2.    மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

3.    பாடினேன் தாலாட்டுவினைமுற்றுத்தொடர்

4.    ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

3

37

சீர்

அசை

வாய்பாடு

உலகத்தோ

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

டொட்ட

நேர்+நேர்

தேமா

ஒழுகல்

நிரை+நேர்

புளிமா

பலகற்றும்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கல்லார்

நேர்+நேர்

தேமா

அறிவிலா

நிரை+நிரை

கருவிளம்

தார்

நேர்

நாள்

3

                                                                                 பகுதி-4                                                                   5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:           

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

)

ü  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர்.

ü  சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

ü  பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.

ü  இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்

5

39

 

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி            என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

)

ü  . அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி         என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

( மாதிரி விடை)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

)

   தமிழ் இலக்கியத்திற்கு தான் செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில், கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம். திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, "குறளோவியம்" எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.

5

                                                                             பகுதி-5                                                                      3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்) , முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

)  

ü  என்னை மிகவும் கவர்ந்த அறிஞர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆவார். இங்கு அவரே சில நிகழ்வுகளைப்பற்றி கூறுவதைக் காண்போம்

ü  வறுமையால் எனது கல்வியை இழந்தேன். இருந்தாலும், கேள்வியறிவால் ஞானம் பெற்றேன்

ü  வறுமையிலும் நூல்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வமாய் இருந்தேன்

ü  தமிழர்களை ஒன்றிணைக்க முயன்றதற்காக ஆங்கிலேய அரசு என்னைச் சிறையில் அடைத்த்து.

ü  பல எல்லைப்போராட்டங்களை நடத்தினேன்.

ü  எனது போராட்டத்தால் திருத்தணியும், சென்னையும் தமிழகத்தோடு இணைந்தது.

8

44

. ) முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்) , முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

8

45

. முன்னுரை:

    கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:                 

     நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

     ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

     அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன.

முடிவுரை:

         .கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

 

. தலைப்பு : உழவெனும் உன்னதம்

முன்னுரை:

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

        என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உழவுத் தொழிலும் உழவர்களும்:

நித்தமும் உழவே அவன் நினைப்பு

              நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

      உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.

தமிழர் வாழ்வில் உழவு

தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு

        உழவன் இன்றி உலகோர்க்கு ஏது உணவு?”

       பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

                 ”உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்'

     என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன

உழவின் சிறப்பு:

       உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

        உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

முடிவுரை:                                                                                              

      'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.

 

 

 விடைக்குறிப்பைப் பதிவிறக்க

 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை