தருமபுரி மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024
(தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)
அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 தருமபுரி மாவட்டம்
வினாத்தாள்👇👇
அரையாண்டுப்பொதுத்தேர்வு-2024, தருமபுரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
|
அ.
அகவற்பா |
1 |
|
இ.
எம்+தமிழ்+நா |
1 |
|
இ.
படர்க்கை வினைமுற்று |
1 |
|
ஈ.
வானத்தையும், பேரொலியையும் |
1 |
|
அ. சங்க
காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது |
1 |
|
அ. கூற்று 1 மட்டும் சரி |
1 |
|
ஆ.
திருமால் |
1 |
|
அ.
திருப்பதியும், திருத்தணியும் |
1 |
|
ஆ.
மினசோட்டா |
1 |
|
அ.
சேரமான் காதலி |
1 |
|
இ. பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
|
ஈ.
பெருங்கௌசிகனார் |
1 |
|
அ.
ம்லைபடுகடாம் |
1 |
|
இ.
நன்னன் |
1 |
|
ஆ.
கூத்தர் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. புயல்களுக்குப் பெயர் வைக்கும்
வழக்கம் எப்போது தொடங்கியது? ஆ. பிள்ளைத் தமிழின் வகைகள் யாவை? |
2 |
17 |
செங்கோல், வெண்கொற்றக்குடை |
2 |
18 |
அருளைப்பெருக்க
கல்வி கற்போம்,அறிவைத்திருத்த கல்வி
கற்போம் |
2 |
19 |
நூல் வாங்குவதற்குப் போதிய
பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி. |
2 |
20 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச்
சுடுகிறார் # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார் # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியம் |
2 |
21 |
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ. சிறு பூனையும் சீறும்
ஆ. கோடு போட அளவுகோல் கொடுத்தான் |
2 |
23 |
கற்குவியல்,
வாழைக்குலை, ஆட்டு மந்தை, அவரைக்கொத்து |
2 |
24 |
உரைத்த – உரை
+ த் + த் + அ உரை - பகுதி த்- சந்தி த் - இறந்த காலஇடைநிலை அ- பெயரெச்ச
விகுதி |
2 |
25 |
|
2 |
26 |
அ. மெய்யெழுத்து ஆ. மனிதநேயம் |
2 |
27 |
அ.
திருச்சி ஆ. நெல்லை இ. தஞ்சை
ஈ. புதுகை |
2 |
28 |
பாடு+ஆண்+திணை , பாடுவதற்குத் தகுதியுடைய ஆளுமையாளரின் கல்வி,
வீரம்,செல்வம், புகழ்,கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
30 |
சோலைக்காற்று
: இயற்கையில் பிறக்கிறேன் மின்விசிறிக்காற்று
: செயற்கையில் பிறக்கிறேன் சோலைக்காற்று
: காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள் மின்விசிறிக்காற்று
: இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள் |
3 |
31 |
அ. துலாக்கோல் போல நடுநிலை மிக்கது ஆ. அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் இ. உறையூர் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
·
விருந்தினராக ஒருவர்
வந்தால், அவரை
எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும். ·
நல்ல சொற்களை இனிமையாகப்
பேசுதல் வேண்டும். ·
முகமலர்ச்சியுடன்
அவரை நோக்கி, 'வீட்டிற்குள்
வருக' என்று
வரவேற்று, அவர்
எதிரில் நின்று, அவர்
முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும். ·
அவர் அருகிலேயே
அமர்ந்து கொண்டு, அவர்
விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை
பின் தொடர்ந்து செல்லல் வேண்டும். ·
வந்தவரிடம்
புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். |
3 |
|
33 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
வினா
6 வகைப்படும். அவை: 1. அறி
வினா 2. அறியா
வினா 3. ஐய
வினா 4. கொளல்
வினா 5. கொடை
வினா 6. ஏவல்
வினா |
3 |
||||||||||||||||||||||||
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது.
இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது
கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள்
வரவேண்டாம் எனக் கூறி, கையசைப்பதாகக்
தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||
38 அ. |
விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. ஆ) ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு
ஏற்ற காலம், செயலின்
தன்மை, செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல்
, நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும்
சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். |
5 |
||||
39 |
அ) ü அனுப்புநர் முகவரி ,நாள் ü விளித்தல் ü கடிதத்தின் உடல் ü இப்படிக்கு ü உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின் உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல் முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||
42
அ. |
(
மாதிரி விடை)
ஆ) 1.
Education is what remains after one has forgotten what one has learned in
school – Albert Einstein ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால்,
பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட்
ஐன்ஸ்டின் 2. Tomorrow is often the busiest day of
the week – Spanish proverb பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின்
பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி 3. It is during our darkest moment that
we must focus to see the light – Aristotle இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக்
காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. Success is not final,failure is not
fatal.It is the courage to continue that counts – Winston Churchill வெற்றி என்பது முடிவல்ல,
தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற
செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது – வின்ஸ்டன் சர்ச்சில் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) முன்னுரை:
பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக்
கலைஞர்: தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார். பேச்சுக்
கலைஞர்: பல தமிழறிஞர்களின் பேச்சைக்
கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். நாடகக்
கலைஞர்: கலைஞர் சீர்திருத்த நாடகங்களை
இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார்.
இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் “ கலைஞர்
” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது. திரைக்கலைஞர்: எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார். இயற்றமிழ்க் கலைஞர்: கலைஞர் பல சிறுகதைகள்,
புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார். முடிவுரை: தமிழின் மெருமிதங்களையும்,
விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. ஆ) தமிழ்ச்சொல் வளம்: v
தமிழ்மொழி சொல்வளம் மிக்கது. v
திராவிட மொழிகளில் மூத்தது. v
பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v
பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை: v
மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v
தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும். v
மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். |
8 |
44 |
அ. ü
அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று
மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü
கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு
தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü
வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு
இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது. ü
மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத்
தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை
வார்த்தையில் கூற இயலாது. ü
கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள்
சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும்
கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். ஆ. வீரப்பனும்,
ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற
குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு
மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ.
தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு: சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து
காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை
விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி
பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு
வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர
வேண்டும். சாலை விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு
வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும்,
மஞ்சள் வண்ண விளக்கு,
தயாராக இரு என்ற கட்டளையையும்,
பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற
கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில்
அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள்,
மருத்துவமனை,
முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு
அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். ஆ. தலைப்பு: விண்ணியல் அறிவு (விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்) முன்னுரை: ”எங்களுக்கு நிலாச்சோறு
சாப்பிடவும் தெரியும் நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும்
தெரியும்” தமிழர் அறிவியலை நான்காம்
தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில்
நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ்
இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க
இயலாது. தமிழன்
அறிவியலின் முன்னோடி: தமிழர் பழங்காலத்தில் தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக்
கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி
இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. பெருவெடிப்புக் கொள்கையை
பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால இலக்கியங்களில் நமது
முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று. “விசும்பில் ஊழி
ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" எனத்தொடங்கும் பரிபாடலில்
புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய
அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக்
கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர்
தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும்: ”கைகளை நீட்டிப்பார்
ஆகாயம் உன்கைகளில் முயற்சிகளைச் செய்துபார்
ஆகாயம் உன் காலடியில்” விண்வெளிக்குப் பயணம்
செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995 ஆம் ஆண்டு நாசா
விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி
ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த
விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: ”அறிவியல் எனும் வாகனம்
மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் கரிகாலன் தன் பெருமையெல்லம் கணினியுள்ளே பொருத்துங்கள்” - வைரமுத்து அனைத்துக் கோள்களையும்
இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும்
ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத்
தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம்
கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு
செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப்
பயன்படுத்த வேண்டும் முடிவுரை: "வானை அளப்போம்,
கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி
ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். |
|