HALF YEARLY EXAM 9 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEYS TIRUPPATHUR DIST

 அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 2024

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்

9. ஆம் வகுப்பு - தமிழ்


திருப்பத்தூர்  மாவட்டம்அரையாண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள், 2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

உத்தேச விடைக்குறிப்புகள்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வி.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. எதுகை, மோனை, இயைபு

1

 

2.

ஆ. வந்துவிட்டான் ,வரவில்லை

1

 

3.

. வளம்

1

 

4.

. தொகைச்சொற்கள்

1

 

5.

இ.சிற்றிலக்கியம்

1

 

6.

ஆ. நாணமும், இணக்கமும்

1

 

7.

இ. காலவாகுபெயர்

1

 

8.

ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள்

1

 

9.

இ. சேர நாடு, சோழ நாடு

1

 

10.

ஆ. பண்புத்தொகை , வினைத்தொகை

1

 

11.

. மோகன்சிங் , ஜப்பானியர்

1

 

12.

. சீவக சிந்தாமணி

1

 

13.

இ. திருத்தக்க தேவர்

1

 

14.

வினா தவறு (தரப்பட்ட பாடலில் அடி எதுகை இல்லை)

1

 

15.

. பலாப்பழம்

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

. ஏறு தழுவுதல் யாருடைய பண்பாட்டு அடையாளம்?

. இந்திய தேசிய இராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?

1

1

 

17.

உவர்மண் நிலத்தில் தோண்டப்படு நீர்நிலை

2

 

18.

    பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது

2

 

19

கூட்டுப்புழுவைப்போல நாம் பொறுமையும்,அடக்கமும் கொண்டிருந்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம்

2

 

20.

அள்ளல்  , பழனம்

2

 

21

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

வீணையோடு வந்தாள்செய்தித் தொடர்      கிளியே பேசுகட்டளைத் தொடர்.

2

 

23

அ. செய்ய – வனைய   ஆ. எடுத்தார் - உரித்தார்

2

 

24

சின்னத்தினது கொடி , சிறிய கொடி

2

 

25.

. கல்வெட்டியல்   ஆ. கருவூலம்

2

 

26.

அகல்

2

 

27.

மாதிரி விடை    :  அ. 100 – க00   , ஆ. 12 – க உ

2

 

28.

கொடு+த்+த்+ஓர்  

கொடு – பகுதி , த் – சந்தி , த் – இறந்தகால இடைநிலை , ஓர் – பலர்பால் விகுதி

2

 

பகுதி – 3    பிரிவு - 1

29

  • ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்பு கொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.
  • அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.
  • குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

3

 

30

       இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

3

 

31.

. டாக்டர் முத்துலட்சுமி

. தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம்

. 1930

3

 

பகுதி – 3   பிரிவு - 2

32

  # மொட்டைக்கிளையாக நின்று பெருமூச்சுவிடுகிறது பட்டமரம்.

   * தன்னை வெட்டப்படும் ஒருநாள் வருமென்று கவலை அடைந்தது.

   *  உட்கார நிழலும், நறுமணம் கமழும் மலர்களும் கூரை போன்று விரிந்த இலைகளும் வெந்து

     கருகி நிறமாறிவிட்டதற்கு வருந்துகிறது.

   * பசுமையாக இல்லாததால் கட்டை என்னும் பெயர் பெற்று கருகி விட்டது. இழந்தது.

   * உடையாக இருந்த மரப்பட்டைகள் கிழிந்ததால் அழகை காலம் மாறும் புயலின் தாக்கத்தால் துன்பப்பட்டது.

3

 

33.

  • வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.
  • பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்க்கின்றன.
  • மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
  • செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.
  • ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.

3

 

34.

.

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

 உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*                           (அல்லது)

.

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

3

 

பகுதி – 3   பிரிவு - 3

35

தன்வினை :   வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

                         .கா: பந்து உருண்டது.

பிறவினை : வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

                        .கா. பந்தை உருட்டினான்

3

 

36.

அணி விளக்கம்: 

        இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)

எ.கா:    அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
             வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புன்ளினம்தம்
             கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
              நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

அணிப் பொருத்தம்:
    சேறுபட்ட, நீர்வளம் மிகுந்த வயல் பகுதிகளில், பொய்கைகளில் செவ்வாம்பல் மலர் விரிவது இயல்பான நிகழ்வு. இதைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டதாக எண்ணியதாக கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3

 

37

பண்பாகு பெயர்:  

 ‘மஞ்சள் பூசினாள்
      ‘மஞ்சள்என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது.

தொழிலாகு பெயர்: 

 ‘வற்றல் தின்றான்
    ‘வற்றல்என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது.

3

 

பகுதி – 4

38

.

1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்:

     மதுரையில் கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி, தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான்.

2. தூது செல்வோரின் தகுதி :

    தூது செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல் செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக் குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ், இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை அனுப்புகிறாள், தலைவி.

5

 

38

. முன்னுரை:

   பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெர்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும், இன்றைய சூழலையும் பார்ப்போம்..

தலைவியின் பேச்சு:

     கல்வி இல்லாத பெளர்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை, கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் அவர்கள் மூலமே சிறத்த அறிவார்ந்த மக்கள்  உருவாகின்றனர்.

      பெண் கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது. கல்வியறிவு இல்லாத பெண். மின்னலபோல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவன் வாழ்வு ஒளிர்வதில்லை.

            "கல்வி இல்லா மிள்னாள்

            வாழ்வில் என்றும் மின்னாள்"!

       சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கார் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

இன்றைய சூழல்:

     கல்வி கற்ற பெர் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கடபேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.

       வானூர்தியைச் செலுத்துதல் விளர்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறள் உடையவளாய் இருக்கிறாள் என்பதை  மறுக்க இயலாது.

      “வானூர்தி செலுத்தல் வைய

       மாக்கடல் முழுது மனத்தல்

      ஆனஎச் செயலும் ஆண்பெண்

     அனைவர்க்கும் பொதுவே ஆகிவிட்டது.

சமையல்பணி

    சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது.ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும்காலம் வந்துகொண்டிருக்கிறது எளில் மிகையாகாது, குடும்ப விளக்கு தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு  வளர்ந்திருக்கிறது..

முடிவுரை:

   "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பெண்கள் நடத்த வந்தோம்". என் பாரதியின் களவு கரிகள் தனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

5

 

39

.

திருத்தணி,                                                                                                                                          09-09-2023.

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

            இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                                                                                                                                                               முகிலன்.

 

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

5

 

39

.

                                                                                                                                 தணிகைப்போளூர்,                                                                                                                                              27.09.21.

அனுப்புநர்

         . இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        12ஆம் வகுப்புபிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

                   வணக்கம். உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல்                  மொழியாகவும், முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது      தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்குப் பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                    .இளவேந்தன்.

                                                                                                           (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001                                                                                                                                          

 

5

 

40

      ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி

5

 

41

புத்தகத் திருவிழா

   செப் - 16. தஞ்சாவூர்

    தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 26 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

     நாள்தோறும் காலை8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவிளை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5

 

42

     1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.

    2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.

    3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.

    4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.

    5. என் தங்கையோடு போட்டிபோடாமல் ஆண், பெண் வேறுபாடின்றி உரிமையைச் சமமாகப் பெற செய்வேன்.

    6. நான் குடியிருக்கும் தெருவில் குப்பைக் கூளங்கள் தேங்காதவாறு பார்த்துக் கொண்டு பிறர்க்கு முன்மாதிரியாக நடந்து கொள்வேன்.

ஆ.

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார்,

    பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

     எப்படி உங்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர், உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்,

    பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.   

5

 

 

பகுதி – 5

 

 

43 .

   1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

   2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு.

   3. அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

   4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.

  5.நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்.

  6.எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.

  7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

8

 

முன்னுரை:

    இந்திய தேசிய இராணுவம இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கண்(ஐபொகள் எனில் மிகையாகாது. நேதாஜி அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழாகளின் பங்கு வியந்து போற்றத்தக்கது.

தூண்கள்:

    1943ம ஆண்டு, நேதாஜி "டெல்லி சலோ" என்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை,பிரித்தானிய அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்தத பெருமைக்குரிய தமிழர் 'பசும்பொன் முத்துராமலிங்கதேவர்' ஆவார்.

       'பசும்பொன் முத்துராமலிங்கதேவர்' அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆதமாவும் தமிழர்கள் தான" என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.

இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:

      இந்திய தேசிய இராணுவததில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாகடர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகிதது பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.

இரண்டாம் உலகப்போரில் தமிழர்:

    இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக கண்டு  ஆங்கிலப் பிரதமா சாச்சில் கோபம் கொண்டார்.

தமிழர்களின் இரத்தம நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது" என்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்றார்.

மரணம் பெரிதன்று:

     1943-45  ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீதத முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவாததிதான" என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீததனர்.

    நேதாஜியின் பாராட்டு இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செயத தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தௌனிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம நம தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது.

முடிவுரை:                                                                                                     

      தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ விராகளையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமை

8

 

44.

.

முன்னுரை :
            “நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        “எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       “உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  “நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

 

முன்னுரை :  

     இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.

வித்வானின் வருகையும், அறிமுகமும் :   

    நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.

வக்கீல் வீட்டில்பிலிப் போல்ஸ்காஎன்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீத குழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

கீர்த்தனம் தொடங்கினார்

      வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.

    போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச்சென்றது. இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.

சாமாராகம் :   

     தஸரிமா……. மாஎன்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம்கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான்.

சாந்தமுலேகா  :  

       குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது. அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி.

வக்கீல் மொழி பெயர்த்தல்

       தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல், கூச்சல், அடிதடி, புயல், அலை, இடி என  ஒரே இரைச்சல். அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது .இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.

வித்வானின் திகைப்பு :

       அமைதியா , அப்படியா தோணித்து அவருக்கு? நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே!
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல், இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது  என்று திகைத்துக் கூறினார் போல்ஸ்கோ

பாராட்டல் :  

      இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா

முடிவுரை :  

     நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.

8

 

45 .

உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

45. .

இயற்கையின் தாய்மடிஉதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து,உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது.மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம்.மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

8

 

 

 பதிவிறக்கம் செய்ய

 

 

 



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை