HALF YEARLY EXAM 8 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEYS TIRUPPATHUR DIST

 அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 2024

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்

8. ஆம் வகுப்பு - தமிழ்



அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 திருப்பத்தூர் மாவட்டம்

8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மரபு

1

2.     

. மூன்று

1

3.     

. ஓடை

1

4.     

. அச்சம்

1

5.     

. பனையோலைகள்

1

6.    

. மதுரை

1

7.     

. வித்துகள்

1

8.    

இ. இதந்தரும்

1

9.    

இ, வஞ்சி

1

10.   

. இரத்தக்கொதிப்பு

1

      11

இ. விளி

1

      12

. தொல்காப்பியம்

1

 13

. தொல்காப்பியர்

1

      14

. காற்று

1

15

. ஐம்பூதம்

1

                                                     பகுதி-2      பிரிவு-1                                                       4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க (21 கட்டாய வினா)

16

   சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

2

17

உழவர்கள் போரினை அடித்து நெல்லினை அறுவடை செய்யும் காலத்தில் ஆரவார ஒலி எழுப்புவர்.

2

18

   மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இவர்கள் பல நெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

2

19

நடுவுநிலைமை

2

20

    மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

2

21

தன்குற்றம்  நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு

2

                                                                 பிரிவு-2                                                           5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

  வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெயயிட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை என்று கூறுவர்.

2

23

    உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில்  பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

2

24

. பருகு   . கொய்

2

25

அ, ஒலியன்  ஆ. தறி

2

26

வினைச்சொல் முற்றுப் பெற்று வருவது

2

27

ஐயமின்றி (அ) தெளிவாக

2

28

பகைவர் நீவிர் அல்லீர்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  இயற்கையை விட்டு விலகியமை

ü  மாறிப்போன உணவு முறை

ü  மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

ü  மன அழுத்தம்

3

30

ü  மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்களைச் செய்யலாம்.

ü  மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.

3

31

. 42     . 6     . நன்னூலார்

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழைபெய்யவில்லை.

ü  முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை.

ü  கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை,

ü  மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.

ü  மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது? மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.

3

33

v  எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.

v  எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.

v  ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட

v  உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.

v  எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.

v  தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!

v  பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க.

3

34

 

  உடலின் உறுதி உடையவரே

        உலகில் இன்பம் உடையவராம்;

   இடமும் பொருளும் நோயாளிக்கு

        இனிய வாழ்வு தந்திடுமோ?

 

  சுத்தம் உள்ள இடமெங்கும்

       சுகமும் உண்டு நீயதனை

  நித்தம் நித்தம் பேணுவையேல்

       நீண்ட ஆயுள் பெறுவாயே!

 

3

                                                                   பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

    வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மைஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிறசொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.

3

36

   எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் தனித்து நின்று, இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை என்பர்.இதனை 'முதல் வேற்றுமை' என்றும் கூறுவர்.     

3

37

   ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவைஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

3

                                                                  பகுதி-4                                                         5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

)

* நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செயகிறது.

* விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும்

புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

* நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

 (அல்லது)

) உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

39

) விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற நண்பனைப்பாராட்டிக் கடிதம் எழுதுக.

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2022.

ஆருயிர் நண்பா,

       நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்பநாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது ஆருயிர் நண்பன்

.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

 (அல்லது)

) அனுப்புநர்,பெறுநர்,ஐயா,பொருள்,கடிதத்தின் உடல்,இப்படிக்கு,இடம்,நாள், உறைமேல் முகவரி என்ற கூறுகளைக் கொண்டு கடிதம் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

40

    "நூல் பல கல்" என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும்நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது, நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகமாகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், 'எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்' என்றார் நேகு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!

5

41

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

  42

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

                                                                    பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

.

v  மனிதன் தனக்கு எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.

v  இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

v  தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

v  அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை" என்பர்.

v  இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

(அல்லது)

)

   உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.

உள்நாட்டு வணிகம் :

    சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும் நெல்லும் ஒரே  மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 300வது பாடல் மூலம் அறியலாம்.

வெளிதாட்டு வணிகம்:

    முசிறி சேர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்து நான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன்மலிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன

8


பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை