HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEYS TIRUPPATHUR DIST

 அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 2024

திருப்பத்தூர் மாவட்டம்

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்

10. ஆம் வகுப்பு - தமிழ்



       10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்                                                                

                                                            பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

  1.  

. .சச்சிதானந்தன்

1

  1.  

. உருபும் பயனும் உடன் தொக்க தொகை

1

  1.  

. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

1

  1.  

, மரபு வழுவமைதி

1

  1.  

. நான்கு ,ஐந்து ரு       

1

  1.  

. கல்வி

1

  1.  

. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

1

  1.  

. கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

1

  1.  

. வானத்தையும்,பேரொலியையும்

1

  1.  

. குவியல்

1

  1.  

. அதிவீரராம  பாண்டியர்

1

  1.  

. வீரமாமுனிவர்

1

  1.  

. தேம்பாவணி

1

  1.  

. மெய்முறை - செய்முறை

1

  1.  

. வினைத்தொகை

1

                                                                பகுதி-2       பிரிவு-1                                                                  4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை.

2

17

விரும்பத்தக்க இயல்பைக் கொண்டவர்கள் பிறர் நன்மை கருதி நஞ்சையும் உண்பர்

2

18

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

19

. தமிழ்த்தென்றல் திரு வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர் யார்?

. தமிழ் மக்களின் வீரத்தைச்சொல்லும் கலையாகத் திகழ்வது யாது?

2

20

சில நேரங்களில் சில மனிதர்கள் , ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நுஊறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்

2

21

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

2

                                                                                   

                                                                                  

 

                                                                                பிரிவு-2                                                                     5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

    இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்களுடன் வருவான் பாரேன்! சரி, தொலைபேசியை வை, நான் கிளம்பிவிட்டேன்.

2

23

எதிர்காலம் உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி

2

24

இருபெயரொட்டுப் பண்புத்தொகை , வினைத்தொகை

2

25

 தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

       தேரும் சிலப்பதி காமதை

  ஊனிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

       ஓதி யுர்ந்தின் புறுவோமே

2

26

. உயிரெழுத்து   .சின்னம்

2

27

கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ

கிளர் - பகுதி

த்- சந்தி

த் ந்ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை      - பெயரெச்ச விகுதி

2

28

வெட்சி-கரந்தை  ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

. போலச்செய்தல்  . புரவி ஆட்டம், புரவி நாட்டியம்  . மராட்டியர்

3

30

    வீட்டின் முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப்படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை , குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது.

3

31

ü  கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ü  கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.

ü  கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

3

                                                                                 பிரிவு-2                                                                    2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

   வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும் சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்

3

33

ü  கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி "இராமாவதாரம்" எனப் பெயரிட்டார்.

ü  இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது.

ü  கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை. அவற்றுள் அழகுணர்ச்சிமிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.

3

34

.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

     எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

     போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

       ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

 

.  

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

3

 

                                                                             பிரிவு-3                                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

    ஆற்றுநீர்ப் பொருள்கோள்தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.

3

36

சீர்

அசை

வாய்பாடு

வன்கண்

நேர்+நேர்

தேமா

குடிகாத்தல்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கற்றறிதல்

நேர்+நிரை+நேர்

கூவிளங்காய்

ஆள்வினையோ

நேர்+நிரை+நேர்

கூவிளங்காய்

டைந்துடன்

நேர்+நிரை

கூவிளம்

மாண்ட

நேர்+நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

3

37

    செய்யுளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கேற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது

3

                                                                                  பகுதி-4                                                                  5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

ü  கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

ü  தற்காலத்தில் ஆசிரியர்களும்,குறிப்பிட்ட துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

)

ü  மெய்க்கீர்த்திப் பாடல் சொல் நயம் , பொருள் நயம் மிக்கது

ü  இரண்டாம் இராசராசன் கருணையுடன் ஆட்சி செய்தான்

ü  மக்கள் அனைத்து நற்பண்புகளிலும் சிறந்து விளங்கினர்

ü  கல்வியில் சிறந்து விளங்கினர்.

ü  அவனது நாட்டில் எவ்வித குற்றங்களும் நடைபெறவில்லை.

ü  மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர்.

5

39

 

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி            என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

ஆ)

ü  அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி         என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

( மாதிரி விடை)

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.     

5

                                                                            

பகுதி-5                                                                      3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) முன்னுரை:

   பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்:

     தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர்:

     பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார்.

நாடகக் கலைஞர்:

   கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு விழாவில்கலைஞர்என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது.

திரைக்கலைஞர்:

   எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார்.

இயற்றமிழ்க் கலைஞர்:

     கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார்.

முடிவுரை:

   தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

)   தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

8

44

. கட்டுரை அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

. முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:                                                                                                       

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

8

45

. முன்னுரை

    உலக நாகரிகம் வளர வளர மனித வாழ்க்கை முறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச் செல்கின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் போதைப் பாவனை. உலகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. மது, போதைவஸ்து, சிகரட் பாவனை போன்ற தீய பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயர் வலிமை பெற்றுள்ளமை வேதனைக்குரியதாகும்.

போதைப் பொருட்கள் என்பவை

     உடல், உளப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுமான போதைக்காக நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும் பொருட்கள் போதைப் பொருட்கள் எனப்படும்.  உதாரணமாக அபின், கஞ்சா, ஹெரோயின், சாராயம், சிகரட், பீடி, கசிப்பு, சுருட்டு போன்றவற்றைக் கூறலாம்.

போதைப் பொருளும் சமுதாயமும்

    சமுதாயத்தில் மாணவர்களும், படித்தவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். இத்தகைய நல்ல சமூகத்துக்குச் சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் சவாலாக உள்ளது. போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள் இரையாவதன் மூலம் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது.

     போதைப் பாவனையால் ஏற்படும் சமுதாய பிரச்சனைகள் போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

      வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

போதை என்னும் ஆயுதம்

      ஒரு தேசத்தை அல்லது ஓர் சமுதாயத்தை அல்லது தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும். போதை எனும் ஆயுதம் மனித வாழ்க்கையை மட்டுமல்லாது தனிமனித கௌரவம், அந்தஸ்து, பணம் போன்றவற்றை அழிப்பது மட்டுமல்லாது உயிரையும் காவு கொள்கின்றது. எனவே இதனை ஒவ்வொரு மனிதர்களும் உணர்ந்து தமது உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து தீய வழிகளில் செல்லாமலும் போதைப் பாவனை தொடர்பாக விழிப்புடனும் இருத்தல் வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்

    சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றது.

    சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

    கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.

முடிவுரை

     உலக அளவில் போதைப் பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும், சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம். போதைப் பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்!

. தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                                

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

         என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

 

 




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை