HALF YEARLY EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEYS RANIPET DIST

 இராணிப்பேட்டை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024

    (இராணிப்பேட்டை, திருவள்ளூர்,  திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாள்👇👇


அரையாண்டுப்பொதுத்தேர்வு-2024, இராணிப்பேட்டை மாவட்டம்

       10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்                                                                

                                                            பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மணி வகை

1

2.     

. புதுமை

1

3.     

. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

1

4.     

. காடு, வாட

1

5.     

. கேட்ட பாடல்

1

6.     

. இலா

1

7.     

. நாள்தொறும் - நாடி

1

8.     

. - 4, -3 , -2 , -1

1

9.     

. திருச்சி,கோவை,புதுவை,நெல்லை

1

10.    

. பால் வழுவமைதி

1

11.    

. தேவநேயப்பாவாணர்

1

12.   

. கண்ணதாசன்

1

13.   

. வண்டு

1

14.   

. தருவேன் - தட்டுவேன்

1

15.   

. காலக்கணிதம்

1

                                                                பகுதி-2       பிரிவு-1                                                                  4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

பாசவர்வெற்றிலை விற்போர்

வாசவர்நறுமணப்பொருள் விற்பவர்

பல்நிண விலைஞர்பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்

உமணர்உப்பு விற்பவர்

2

17

   'பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைச் செய்யாதவர்' என்பது பொருள்

2

18

அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

2

19

சரியான வினாத்தொடரை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

20

(மாதிரி விடை)

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

2

21

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

2

                                                                                    பிரிவு-2                                                                 5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ+து

தணி - பகுதி, த் - சந்தி

த்(ந்) -ந் ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

அ - சாரியை,

து –படர்க்கை வினைமுற்று விகுதி

2

23

கவிஞர்-பெயர்ப்பயனிலை  ,  சென்றார்வினைப்பயனிலை , யார் - வினாப்பயனிலை

2

24

ü  வேம் + கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி

ü  சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும் குறித்தது ( பொதுமொழி)

2

25

கொளல் வினா , இனமொழி விடை

செவிமாற்றுத்திறனாளர் வினா: பசும் () பச்சை   , மஞ்சள்

2

26

. துணைத்தூதரகம்   . நாட்டுப்புற இலக்கியம்

2

27

பாடு+ஆண்+திணை , பாடுவதற்குத் தகுதியுடைய ஆளுமையாளரின் கல்வி, வீரம்,செல்வம், புகழ்,கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது  

2

28

உரிய தொடர் அமைத்து எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

. விளைபொருள் வகைகள் 

. சம்பா கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை

. செந்நெல், வெண்ணெல், கார்நெல்

3

30

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

3

31

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

                                                                                 பிரிவு-2                                                                    2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

3

33

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

34

 

.  

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்

.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடைஅறியா

வளம்தலைமயங்கியநனந்தலைமறுகும்;

பால்வகைதெரிந்தபகுதிப் பண்டமொடு

    கூலம் குவித்தகூல வீதியும்;

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.     'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

2.    மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

3.    பாடினேன் தாலாட்டுவினைமுற்றுத்தொடர்

4.    ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

3

36

 

சீர்

அசை

வாய்பாடு

தாளாண்மை

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

என்னும்

நேர்+நேர்

தேமா

தகைமைக்கண்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தங்கிற்றே

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

வேளாண்மை

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

என்னும்

நேர்+நேர்

தேமா

செருக்கு

நிரைபு

பிறப்பு

3

37

-     இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      மக்களிடம் வரி வாங்குவது அரசன் வழிப்பறி செவதற்குச் சமம்.

அணிப்பொருத்தம்:                                                                                                     

      உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம்அரசன் வரி வாங்குவது, உவம உருபுபோலும்

3

                                                                                  பகுதி-4                                                                  5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது.

)

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

5

39

 

)

ü  அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி         என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி            என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

( மாதிரி விடை)

1.       தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

)

      சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

                                                                             பகுதி-5                                                                      3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) முன்னுரை:

   பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்:

     தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர்:

     பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார்.

நாடகக் கலைஞர்:

   கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு விழாவில்கலைஞர்என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது.

திரைக்கலைஞர்:

   எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார்.

இயற்றமிழ்க் கலைஞர்:

     கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார்.

முடிவுரை:

   தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

)   தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

8

44

.

v  பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்.

v  குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

v   திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால் நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள் அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார்.

v  அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப் பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த மகிழ்ச்சியைப் பெற்றார்.

v  பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால் "எம் பெருமான்" என்று அழைக்கப் பெற்றார். அது மட்டுமின்றி பூரணர் தன் மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார்.

.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

8

45

. . ஆகிய வினாக்களுக்கு முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்) , முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 


பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை