6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 2 ND WEEK

 6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 06-01-2025  முதல் 10-01-2025        

மாதம்          ஜனவரி    

வாரம்     :   இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :   தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1. தமிழ்நாட்டில் காந்தி

1.கற்றல் நோக்கங்கள்   :

   @ சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கைத் தெரிந்துகொள்ளுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   : 

  • இந்திய நாட்டின் விடுதலைக்கு உழைத்த சில முக்கிய தலைவர்கள் பெயர்களை குறிப்பிடுக என்று மாணவர்களிடம் கூறி, அவர்கள் கூறும் விடைகளுக்கு ஆசிரியர் விளக்கமளித்து,அதன் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்

4.படித்தல்  :             

  • உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

தமிழ்நாட்டில் காந்தி


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம் சமுதாய மறுமலர்ச்சி தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றிற்கும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை. தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் காந்தியடிகள் அளவற்ற பற்று கொண்டிருந்தார்
  • காந்தியடிகளுக்குத் தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு உண்டு. அவர் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துள்ளார். அப்போது சுவையான பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
  • காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போதெல்லாம் அவரை சந்தித்த மிகச்சிறப்பான நபர்கள் மகாகவி பாரதியார், ராஜாஜி, உ.வே.சா  முதலியோர் ஆவர்.
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. 919 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் எது?
2. மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1. காந்தியடிகள் காரைக்குடிக்கு  வந்தபோது நடந்த நிகழ்வைக் கூறுக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. காந்தியடிகளுக்குத் தமிழ்நாட்டின்மீது பற்று ஏற்படக்காரணம் யாது?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களில் பெயர்களைத் தொகுத்து வரச் செய்தல்

12.கற்றல் விளைவு:

   Ø 610 - பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள்பருவ இதழ்கள்கதைகள்இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டுஅவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல்தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை