8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 06-01-2025 முதல் 10-01-2025
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாவது வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கவிதைப்பேழை -ஒன்றே குலம்
2.கவிதைப்பேழை-மெய்ஞ்ஞான ஒளி
1.கற்றல் நோக்கங்கள் :
@ அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
மனிதர்களிடையே பிறப்பா ல் உயர்வுதாழ்வு பாராட்டுவது தவறானது. உலகமக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும். பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதா கக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத்தொண்டாகும்.
எப்படியும் வாழ லாம் என்பது விலங்கு க ளி ன் இயல்பு . இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனிதப் பண்பு. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளனர். ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம்.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ செய்யுளைப் பொருள் விளங்குமாறு, சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்.
§ நூல்வெளி பகுதியை விளக்கிக் கூறுதல்
§ பாடப்பொருளை தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
ஒன்றே குலம்
7.மாணவர் செயல்பாடு:
Ø இன ஒற்றுமையின் அவசியத்தை உணர்தல்
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
@ வாழ்வியல் நெறிமுறைகளை அறிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 806 - சாதி, மதம், நிறம், பாலினம், மரபுகள் போன்றவைக் குறித்த உணர்வு சார்ந்த சிக்கல்கள் பற்றி நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் வினாக்கள் எழுப்புதல். (எ.கா. ஒரு குறிப்பிட்ட விழா கொண்டாடப்படும்முறை பற்றிப் பேசுதல்)
@ 807 -கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்