நாள் : 06-12-2021 முதல் 11-12-2021
வாரம் : டிசம்பர் - முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 7முதல் 9
பக்க எண் : 38 -44
நோக்கம் :
Ø அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி பற்றி அறிதல்
Ø மரபுத் தொடர்களை பொருளறிந்து பயன்படுத்துதல்.
Ø தமிழ் படைப்பாளர்கள் மற்றும் அவர் தம் படைப்புகள் பற்றி அறிதல்.
கற்றல் விளைவுகள்:
Ø மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.
Ø மொழியின் நுட்பமான கூறுகளை மனத்தில் கொண்டு தங்களுக்கான சொந்த மொழியை கட்டமைத்தல்.
Ø கேட்ட அல்லது படித்த பல்வேறு வகை இலக்கியங்கள் பற்றிப் பேசவும்,அவற்றின் மீதான விவாதம் நடத்தவும், பகுப்பாய்வு செய்யவும் வாய்ப்பளித்தல்
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
இரட்டைக் கிளவி | அடுக்குத் தொடர் |
இரட்டைச் சொல்லாகவே வரும் | ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும். |
தனித்தனியே பிரித்தால் பொருள் தராது. | தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும் |
இரண்டு முறைக்கு மேல் அடுக்கி வராது | இரண்டு அல்லது அதற்கு மேல் அடுக்கி வரும். |
ஒலிக்குறிப்பாகப் பயன்படுத்தப்படும் எ.கா: சட சட ,பட பட | அச்சம்,விரைவு,வருத்தம்,மகிழ்ச்சி, கோபம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும். எ.கா: தீதீதீ, போபோ |
Ø மரபுத் தொடர் என்பது நேரடியாகப் பொருள் உணர்த்தாமல் குறிப்பால் பொருள் உணர்த்துவதாகும்.
Ø மரபுத்தொடரில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர் பொருளை உணர்த்தாது.
மரபுத் தொடர் | உணர்த்தும் பொருள் |
பஞ்சாகப் பறத்தல் | அலைந்து திரிதல் |
ஆகாயத்தாமரை | இல்லாத ஒன்று |
நீர் மேல் எழுத்து | மறைந்து போதல் |
முதலைக் கண்ணீர் | பொய் அழுகை |
மலையேறிவிட்டது | மாற்றம் அடைதல் |
பசுமரத்தாணி | ஆழமாகப் பதிதல் |
கம்பி நீட்டினான் | ஓடி விடுதல் |
பச்சைக் கொடி | இசைவு தெரிவித்தல் |
Ø புதுவையில் தோன்றி தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பலர்.
Ø பாரதிதாசன்
Ø வாணிதாசன்
Ø தமிழ் ஒளி
Ø திருமுருகன்
Ø பிரபஞ்சன்
Ø அவர் தம் படைப்புகள குறித்து கலந்துரையாடல்
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்
தொடர்பணி:
Ø அடுக்குத்தொடர்,இரட்டைக் கிளவி அமைத்து தொடர் எழுதி வருக.
Ø உமது பள்ளி நூலகத்தினைக் கொண்டு மரபுத் தொடர்களை எழுதி வருக.
Ø நீ அறிந்த தமிழறிஞர் ஒருவர் பற்றியும், அவர் தம் படைப்பு குறித்தும் எழுதி வருக.